Lankamuslim.org

One World One Ummah

மேதின -செய்தியும் -இஸ்லாமிய பொருளாதார முறையும் !!

with one comment

qazaswdxzaqM.ஷாமில் முஹம்மட்: சோசலிசம் , கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களை உலகம் அறிவதற்கு முன்னரே ஏழைகளுக்காக இஸ்லாம் போராடியது .ஏழைகள் தமக்காக தமது உரிமைகள் கோர முன்னர் அல்லது அவற்றை கோரி மாநாடு , ஆர்ப்பாட்டம் , நடாத்த முன்னேரே அவர்களின் உரிமைகளுக்காக அது உழைத்தது .- யூசுப் அல் கர்தாவி

சமூகத்தில் செல்வந்தர்கள் , ஏழைகள் மற்றும் முதலாளிகள் , தொழிலாளர்கள் ஆகிய மக்கள் மத்தியில் செல்வத்தை உற்பத்தி செய்யும் முறை மற்றும் பொருளாதாரத்தை பங்கீடு செய்யும் முறை பற்றி இஸ்லாமிய பொருளாதார முறை உலகிற்கு கற்றுக்கொடுக்கின்றது. ஆனால் இன்று இஸ்லாத்தை தவிர மற்றைய சித்தாத்தங்கள் உலகை ஆளுகின்றன அதிகாரம் செலுத்துகின்றன, ஏழைகளுக்காகவும் ,பாட்டாளிகளுக்காகவும் போராடிய இஸ்லாமிய சித்தாந்தம் அதிகாரம் பறிக்கப்பட்ட ,சிதைக்கப்பட்ட முடக்கப்பட்ட ஒரு இயலாக மாற்றப்பட்டுள்ளது

இஸ்லாமிய அரசியல் முறைமை 1924 ஆம் ஆண்டு ஏகாதிபத்திய சக்திகளினால் செயலிழக்கச் செய்யப்பட்ட பின்னர் உலகில் நவீன முறையில் செல்வத்தை உற்பத்தி செய்யும் பிரச்சினைக்கும் அதை விநியோகிக்கும் பிரச்சினைக்கும் தீர்வுகள் காணப்படவில்லை .

உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதலாளித்துவம் மனிதர்களின் குரல்வளையை நசுக்கியது ஏழைகளுக்காக அவர்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்றகாக முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க உற்பத்திச் சாதனங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கம்யூனிசம் உருவாகியது ஆனால் அந்த கொள்கையால் எதையும் செய்யமுடியவில்லை, உலக மக்கள் ஒரு பேயின் கையில் இருந்து மற்றுமொரு பேயின் கைக்கு மாறும் உணர்வையே பெற்றனர்.

சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொண்ட முதலாளித்துவம் மீண்டும் செம்மைப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் என்ற பெயரில் உலகில் அதிகாரம் செலுத்துகின்றது இது புதுச் சட்டை போட்ட பழைய பேயின் கதையை மக்களுக்கு நினைவு படுத்துகின்றது இன்று கோடிக்கணக்கான மக்கள் உணவில்லாமல் வீடில்லாமல் இருக்கையில், மறுபக்கத்தில் ஒரு சிலரின் கையில் கோடிகள் குவிக்கின்றது ஒரு பக்கம் சொகுசு வாழ்க்கை குவிய மறுபக்கம் பட்டினியாலும் ,யுத்தத்தினால் பிணங்கள் குவிகிறது .

ஒரு முனையில் செல்வமம் ,செல்வாக்கும் செழிப்பும் , குவிய மறுமுனையில் வறுமை, ஊழல் ,யுத்தம்என்பன தீவிரமடைகிறது இன்று தமது தோல்வியை சமப்படுத்திக்கொள்ள சமரசம் செய்யப்பட்ட முதலாளித்துவமும் , கம்யூனிசமும் கலந்த புதிய ரக ஏகாதிபத்திய- இன்று உலகை அதிகாரம் செலுத்துகின்றது , மனிதர்களின் உண்மையான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்க தகுதியான இஸ்லாமிய வாழ்க்கைமுறை ,சிந்தாந்தம், முதலாளித்துவம் , கம்யூனிசம் கலந்த புதிய ரக ஏகாதிபத்திய-மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுகின்றது

என்றும் ஏகாதிபத்திய மேலாதிக்க சர்வாதிகாரத்தின் வளர்ச்சி, மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளின் தேவைகளுடன் தொடர்பிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டிஷ், ஏகாதிபத்தியம், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், என்று பல ஏகாதிபத்தியங்கள் இருந்தாலும் அவை அடைப்படையில் ஒரே மாதிரியை கொண்டவையாக இருக்கின்றது அதேபோன்றுதான் இன்று – ரஷிய, சீனா மேலாதிக்கங்களும் இஸ்லாம் என்று வரும்போது இவையும் அடைப்படையில் ஒரே மாதிரியை கொண்டவையாக இருக்கின்றது இஸ்லாமிய எழுச்சியை ஒடுக்க ஒரு தலத்தில் சமரசம் செய்துகொண்டவையாக இவை அனைத்தும் உள்ள இவை ஒன்றுக்கொண்டு அடிக்கடி சண்டை போடுகின்றன. முதலில் அவை முஸ்லிம் உம்மாவை பிரித்தன . மூலப்பொருட்களையும், சந்தைகளையும் தேடியபோது சண்டையிட்டுக்கொண்டன. முதலாளித்துவத்தின் , கம்யூனிசத்தின் அடிப்படை என்பது தொடர்ச்சியான உள்நாட்டுச் சண்டை மட்டுமின்றி சர்வதேசச் சண்டையும் ஆகும் என்பது வரலாற்று பதிவு ஆப்கானித்தானிலும் ,ஈராக்கிலும் ,சிரியாவிலும் யெமனிலும் நடப்பவை அதன் விளைவுகள்தான், அரபு வசந்தம் ,அழிவுப் புயலாக மாற்றப்பட்டதும் இந்த பின்னணியில்தான் .

இவை அனைத்தும் உலகத்தில் இன்றுள்ள முதலாளித்துவ, கம்யூனிச அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவுகள். முதலாளித்துவத்தை போன்று முதலில் தோல்வியை சந்தித்துள்ள கம்யூனிசம் மீண்டும் புது அணிகலன்களுடன் முன்வர முயன்றுவருகின்றது முதலாளித்துவதுடன் சமரச போக்கை கையாளும் இந்த புதிய சோஷலிசம் , தாம் கூட்டாக முஸ்லிம் உம்மாவின் எழுச்சியை துவம்சம் செய்ய கூட்டாளியாகியுள்ளன. கம்யூனிசம், முதலாளித்துவம் ஆகியவற்றின் தோல்வியுடன் எழுச்சி பெரும் இஸ்லாமியா அரசியல் ,பொருளாதார எழுச்சி இவர்களுக்கு பெரும் தலையிடிதான் .மனிதனை பொருளாதார கூறாக மட்டும் பார்க்கும் முதலாளித்துவ , கம்யூனிச முறைமைகள் தோல்வியை நோக்கி சரிவது இயற்கையானது, இயற்கைதான் வெல்லும் .

Advertisements

Written by lankamuslim

மே 6, 2018 இல் 7:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. 1818 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பிறந்த மார்க்சின் இருநூறாவது பிறந்த தினத்தை நினைவுகூரும் செயற்பாடுகள் உலகின் பல இடங்களில் இடம்பெறுகின்றன. நவீன காலத்தில் உலக ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளராக மார்க்ஸ் கருதப்படுகிறார். ஆயினும் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை அவரின் கோட்பாடுகளை நிராகரித்து மாக்சியம் முற்றாகக் காலாவதியாகி விட்டது எனும் பிரசாரப்போக்கும் ஓய்ந்தபாடில்லை.

  மாக்சியம் அந்தமற்ற, குறைகளற்ற ஒரு கோட்பாடல்ல. மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவற்றின் சில பகுதிகள் இன்றைய நிலைமைகளைப் பொறுத்தவரை காலாவதியாகி விட்டன என்பது உண்மை. அவருடைய நீண்டகால ஆய்வின் பிரதான விளைவான ‘மூலதனம்’ நூலின் முதலாவது பாகத்தையே இறப்பதற்குமுன் அவரால் பூர்த்தி செய்து பிரசுரிக்க முடிந்தது. மாக்சியம் என்பது மாக்சுக்குப் பின்னும் தொடரும் ஒரு வேலைத்திட்டம். மாக்சின் கோட்பாடு உண்மையில் காலாவதியாகி விட்டதா எனும் கேள்வி தோன்றுவதற்கு, ஆகக்குறைந்தது ஒரு பிரதான முன்நிபந்தனை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

  அதுதான் முதலாளித்துவத்தின் அஸ்தமனம். ஏனென்றால் மாக்சின் பங்களிப்புக்களில் பிரதானமானது முதலாளித்துவம் பற்றி அவர் விட்டுச் சென்றுள்ள மிக ஆழமான ஆய்வும் விமர்சனமும் ஆகும். ஆகவே முதலாளித்துவம் இருக்கும்வரை அது பற்றிய மாக்சின் கோட்பாட்டின் பயன்பாடுபற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தொடரும். மறுபுறம் மாக்ஸ் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட சமூகம் பற்றியும் – அதாவது சோஷலிசம், கொம்யூனிசம் பற்றி – எழுதியுள்ளதால் அதுபற்றிய அவரின் சிந்தனைகளின் பயன்பாடும் தொடரும் என நம்பலாம்.

  மேலும் மாக்சின் எழுத்துகள் தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்ததால் அவரின் பங்களிப்புக்கள் எல்லாமே சுலபமாக ஒரேயடியாகக் காலாவதியாகிப் போய் விடமாட்டா. மாக்சியத்தின் பயன்பாடு பற்றிய இந்த நியாயமான கருத்து ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இது மீண்டும் பலரால் புதுப்பிக்கப்பட்டு சமகால நிலைமைகளுக்கேற்ப விளக்கப்படுகிறது.

  சமீபகாலங்களின் ஒரு சுவராஸ்யமான புதினமென்னவெனில் முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வின் பயன்பாட்டை உலகின் பாரிய முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளியல் ஆலோசகர்கள் சிலர் வலியுறுத்தி வருவதுதான். உதாரணமாக, UBS (Union Bank of Switzerland)இன் பொருளாதார ஆலோசகரான George Magnus 2011ஆம் ஆண்டு எட்டாம் மாதம் Bloomberg இல் ‘உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கார்ல் மாக்சுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க’ (Give Karl Marx a Chance to Save the World Economy) எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

  இன்றைய உலகப் பொருளாதாரச் சிக்கல்களையும் அவற்றினால் வரும் பீதி மற்றும் எதிர்ப்புக்களையும் புரிந்துகொள்ளப் போராடும் கொள்கை வகுப்பாளர்கள் கார்ல் மாக்சைப் படிப்பதன் மூலம் பயன் பெறுவார்கள் என அந்தக் கட்டுரையில் அறிவுரை கூறுகிறார். இத்தகைய கருத்துக்களை வேறுபல பொருளியலாளர்களும் தெரிவிக்கிறார்கள்.

  அவர்கள் தரும் ஆலோசனை என்னவெனில் முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிக்கல் பற்றி மாக்ஸ் தரும் விளக்கம் சரியானது, பயனுள்ளது ஆனால் அவர் முன்வைக்கும் மாற்றுப் பாதை ஏற்புடையதல்ல, அவரின் விளக்கத்தின் உதவியுடன் இந்த அமைப்பைப் பாதுகாக்க உதவும் கொள்கையை வகுப்போம்! எதிரி முகாமின் ஆலோசகர்களின் அங்கீகாரம் மாக்சிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் அதை அவர் விரும்பியிருக்க மாட்டார்.

  தனது ஆய்வு தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கு உதவவேண்டும் என்பதே அவரின் நோக்காயிருந்தது. அதற்கு எதிரான நோக்கிற்கு அவரின் அறிவு பாவிக்கப்படுவது அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஆனால் இருபத்து ஓராம் நூற்றாண்டில் நவீன பொருளியலாளர்கள் மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்வைத்த பொருளியல் கோட்பாட்டை அறிய முயற்சிப்பது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது.

  இன்றைய ஜேர்மனியின் றைன்லாந்தில் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய, வசதி படைத்த யூத குடும்பத்தில் பிறந்து, இருபத்துமூன்று வயதில் தத்துவஞானத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தன் நீண்டகாலக் காதலியான ஜென்னியை இருபத்து ஐந்தாம் வயதில் வாழ்க்கைத் துணைவியாய் பெற்ற மாக்ஸ் தனது அறுபத்தைந்தாவது வயதில் ஒரு நாடற்ற அகதியாக, கடவுள் நம்பிக்கையற்ற, அடிக்கடி கடன் தொல்லைகளுக்காளான, நீண்டகால நோய்வாய்ப்பட்டவராக, ஆனால் தன் இலட்சியப் புரட்சிகரப் பணியில் தவறாத மனிதராக லண்டனில் மரணமடைந்தார்.

  ஒரு இளம் பத்திரிகையாளராக, ஆய்வாளராக அவர் அன்றைய சமூகத்தின் அநியாயங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி அதிகாரத்தை விமர்சித்ததன் விளைவாகப் பிறந்த நாட்டிலிருந்து புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு, தஞ்சமடைந்த பிரான்சிலும் அதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் இருந்து நாடு கடத்தப்பட்டு இறுதியில் 1849ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்திற்கு அகதியாகக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.

  முழுநேர ஆய்வாளனாக, எழுத்தாளனாக, அரசியல் செயற்பாட்டாளனாகத் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மாக்சிற்கு ஒழுங்கான, போதுமான வருமானம் இருக்கவில்லை. ஒழுங்கான ஊதியம் தரும் ஒரு தொழிலை அவர் செய்யவில்லை. லண்டனில் வாழ்ந்த காலத்தில் பொருளாதார நிர்ப்பந்தத்தினால் ஒரே ஒரு தடவை ஒரு எழுதுவினைஞர் வேலைக்கு மனுச்செய்தார். அவருடைய கையெழுத்துப் படுமோசமெனும் காரணத்தினால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.

  அவருடைய மிக நெருங்கிய தோழனும் நண்பனுமான ஏங்கெல்சின் பொருளாதார உதவியின்றி மாக்சினால் அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து அவருடைய பெறுமதிமிக்க பாரிய பங்களிப்பினைச் செய்திருக்க முடியாது. இருவரும் முதல் முதலாக 1842ஆம் ஆண்டு பதினோராம் மாதம் மாக்ஸ் ஆசிரியராயிருந்த ஜேர்மன் பத்திரிகையான Rheinische Zeitung இன் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர்களிடையே நட்பு ஏற்படக்கூடிய பரஸ்பர உணர்வுகள் பிறக்கவில்லை.

  பின்னர் 1844ஆம் ஆண்டு அந்தப் பத்திரிகை ஆட்சியாளரால் தடைசெய்யப்பட்டதால் மாக்ஸ் புலம்பெயர்ந்து பாரிசுக்குச் சென்று அங்கே ஆசிரியராக இருந்த சஞ்சிகைக்கு இளம் ஏங்கல்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையால் மிகவும் கவரப்பட்டார்.

  அதை எழுதிய ஏங்கெல்சின் அறிவாற்றலை உயர்வாக மதித்து அவரை மீண்டும் சந்திக்க விரும்பினார். இங்கிலாந்தின் மாஞ்செஸ்டரில் தந்தைக்குச் சொந்தமான துணி ஆலைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஏங்கெல்சை ஜேர்மனிக்குத் திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி மாக்ஸ் அழைத்தார். ஏங்கெல்ஸ் அந்த அழைப்பினை ஏற்று பாரிஸ் சென்றார்.

  பாரிசில் இருவரும் பத்து நாட்கள் கலந்துரையாடல்களிலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வதிலும் செலவிட்டார்கள். இருபத்துநான்கு வயதினரான ஏங்கெல்ஸ் அப்போது ஜேர்மன் மொழியில் எழுதி முடித்த ‘இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை’ (The Condition of the Working Class in England) எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை வாசித்த மாக்ஸ் பிரமிப்படைந்தார். இருவரும் மிக நெருங்கிய தோழர்களானார்கள்.

  வெவ்வேறு வழிகளுக்கூடாக இருவரும் அரசியல்ரீதியில் ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டனர். அந்த நாட்களில் மாக்சைப் பற்றித் தான் கொண்டிருந்த உயர்வான மதிப்பினைத் ஏங்கெல்ஸ் தன் இறுதி மூச்சுவரை மாற்றவில்லை. தம்மிருவரில் மாக்சே உயர்ந்த அறிவாற்றலும் சிந்தனைக் கூர்மையும் மிக்கவர் எனும் முடிவுக்கு வந்த ஏங்கெல்ஸ் அவருக்கு உதவியாக ஒத்துழைப்பதென முடிவு செய்தார்.

  தனியாகவும், மாக்சுடன் இணைந்தும் கட்டுரைகள் எழுதினார். மாக்ஸ் முழுநேரமும் தன் ஆய்விலும் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் மாஞ்செஸ்டர் ஆலைத் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றார்.

  மாக்ஸ் மறைந்தபின் அவர் அரைகுறையாக விட்டுச்சென்ற ‘மூலதனம்’ இரண்டாம், மூன்றாம் பாகங்களை முடிந்தவரை நன்கு தொகுத்துப் பிரசுரித்தார். அதேபோன்று மாக்ஸ் விட்டுச்சென்ற பிரசுரிக்கப்படாத எழுத்துக்களைப் பாதுகாத்தார். மாக்ஸ் மறைந்தபின் மாக்சிற்குச் சேரவேண்டிய பாராட்டுக்களைத் தனக்கு வழங்கியவர்களுக்கு அந்தப் பாராட்டுகளெல்லாம் மாக்சிற்கே உரியவை எனக்கூறி விளக்கினார்.

  மாக்ஸ் – ஏங்கெல்ஸ் தோழமை அற்புதமானது.

  சட்டவாளராக இருந்த கார்ல் மாக்சின் தந்தை தன் மகனும் சட்டத்துறையையே தேர்ந்தெடுக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் பல்கலைக்கழகம் சென்ற இளைய மாக்ஸ் தத்துவஞானத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றபின் அரசியல் பொருளாதாரத்தைத் தானாகக் கற்றார். தத்துவஞானிகள் உலகை விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானது என நம்பிய மாக்ஸ் முதலாளித்துவத்தின் இயக்கப்போக்கினை ஆழ ஆராய்ந்தறிவது உலகை மாற்றுவதற்கான முதற்படி எனக்கருதினார்.

  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் அரசியல் பொருளியல் கோட்பாடுகளை விமர்சித்து, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்காண்பதிலும், அதை வரலாற்றுரீதியில் விளக்குவதிலும் தன் ஆய்வினைத் தொடர்ந்தார். ‘மூலதனம்’ எனும் தலைப்பிலான அவருடைய பிரதான ஆய்வுநூலுக்கு ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்’ எனும் உபதலைப்பினையும் கொடுத்தார்.

  அவருடைய வாழ்நாள் பங்களிப்புக்கள் பல சமூக விஞ்ஞானத்துறைகளை ஊடறுத்துச் செல்பவை. இன்றைய சமூகவிஞ்ஞானப் பிரிவுகளைப் பொறுத்தவரை தத்துவம், அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல், புவியியல், வரலாறு, சூழலியல், கலை இலக்கிய விமர்சனவியல், போன்ற பல துறைகளில் மாக்சின் செல்வாக்கினைக் காணலாம். மிகவும் முக்கியமாக, மாக்சின் சிந்தனைகள் மனித இனத்தின், விசேடமாக ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின், விடுதலையை நோக்காகக் கொண்டுள்ளன என்பதால் அவை மனித இனத்தின் பொதுச்சொத்தெனக் கருதுவதில் தவறில்லை.

  இது உலகை மாற்றியமைக்க வேண்டுமெனும் அவரின் இலட்சியத்திற்கு ஏற்புடையதே. ‘பொருள்ரீதியான சக்தியைப் பொருள்ரீதியான சக்தியாலேயே தோற்கடிக்க முடியும். ஆனால் கோட்பாடு மக்களை இறுகப் பற்றிக்கொண்டதும் பொருள்ரீதியான சக்தியாகிறது’ என 1844ல் எழுதினார்.

  தனது கோட்பாடு சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதமாகவேண்டுமென அவர் விரும்பினார். இதை நடைமுறைப்படுத்தத் தன்னாலியன்றதைச் செய்தார்.

  தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்குவதிலும் அவற்றினைக் கூட்டி விரிவுரைகள் வழங்குவதிலும் ஈடுபட்டார். 1864 செப்டெம்பர் மாதத்தில் முதலாவது அகிலத்தை (First International) – அதாவது முதலாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தை – ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கினை வகித்தார். அந்த அமைப்பின் ஜேர்மன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவரே அதன் கொள்கைப் பிரகடனத்தையும் எழுதினார்.

  ஆயினும் மாக்சின் இறுதி நாட்களில் அவர் 34 வருடங்கள் வாழ்ந்த இங்கிலாந்தில் அவருக்குப் பெருமளவில் அரசியல் ஆதரவாளர்களோ தனிப்பட்ட நண்பர்களோ இருக்கவில்லை. 1883, மார்ச் 14ஆம் திகதி மரணமடைந்த மாக்சின் உடல் 17ஆம் திகதி லண்டன் ஹைகேட் மயானத்தில் (Highgate Cemetry) அடக்கம் செய்யப்பட்டபோது பதினொரு பேர் மட்டுமே காணப்பட்டனர். அப்போது அவரின் மிகநெருங்கிய தோழனும் நண்பனுமாகிய ஏங்கெல்ஸ் தனது உரையை ‘நமது காலத்து மாபெரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என ஆரம்பித்து அவருடைய பெயரும் ஆக்கங்களும் காலங்களுக்கூடாக நிலைபெறும் எனும் வார்த்தைகளுடன் முடித்தார்.

  1871ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சியின் விளைவான பாரிஸ் கொம்யூனின் வெற்றியும் தோல்வியும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி மேலும் சில பாடங்களைக் கொடுத்தன. இராணுவ பலத்தால் முற்றாக நசுக்கப்படமுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்த பாரிஸ் கொம்யூனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முன்னோடியாகப் பார்த்தார் மாக்ஸ்.

  ஆனால் புரட்சிக்குப்பின் பாட்டாளிவர்க்கம் பூர்ஷ்வா அரச யந்திரத்தை அப்படியே எடுத்து அதற்கூடாகச் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்வது பிழை என்பது கொம்யூனின் தோல்வி தந்த ஒரு பாடமெனக்கருதிய மாக்ஸ் அந்த அரச இயந்திரம் உடைத்தெறியப்படவேண்டுமெனக் கூறினார். ஆயினும் கொம்யூன் பற்றி மாக்ஸ் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாக்சியவாதிகள் மத்தியில் முரண்படும் வியாக்கியானங்கள் பிறந்தன.

  அவசரத்தில் நடத்தும் ஆயுதக் கிளர்ச்சியால் வரும் வெற்றியைத் தக்கவைக்கமுடியாது போகலாம் என்பது ஒரு வியாக்கியானம். அரச யந்திரத்தை உடைத்தெறிந்து மாற்று அரசை அமைக்கும்வரை புரட்சி தொடரவேண்டுமென்பது இன்னொரு நிலைப்பாடு. முதலாம் உலகப் போரின் முரண்பாடுகள் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு உதவின. முதலாளித்துவம் விருத்தி பெறாத ரஷ்யாவில் தோன்றிவரும் புரட்சிகர நிலைமையைத் தனது கடைசி நாட்களில் மாக்ஸ் அக்கறையுடன் அவதானித்துவந்தார்.

  சாரிசம் தொடரமுடியாத நிலைமைகள் வளர்ந்து விட்டன. ரஷ்ய சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மாற்றம் எத்தகையது? முதலாளித்துவத்தின் நீண்டகால விருத்தியா, சோஷலிச மாற்றுவழியா அல்லது சோஷலிசத்தை நோக்கிய வேறொரு இடைக்காலப் பாதையா? துரதிஷ்டவசமாக இது பற்றி மேலும் ஆழமாக ஆராயமுன் 1883ஆம் ஆண்டு மாக்ஸ் மரணித்தார்.

  ஒக்டோபர் புரட்சியை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

  ஆனால் பின்னர், குறிப்பாக லெனினின் மரணத்துக்குப் பின் அது நகர்ந்த பாதையை தீவிரமாக விமர்சித்திருப்பார், அது சோஷலிசமென ஏற்றிருக்க மாட்டார்.

  மாக்சிசத்திற்கு எதிர்காலமில்லையென மீண்டும் பலகுரல்கள். ஆனால் 2000 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் BBC கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மாபெரும் சிந்தனையாளர் யாரென நடத்திய கருத்துக் கணிப்பில் கார்ல் மாக்ஸ் முதலாம் இடத்தைப் பெற்றார். ஐன்ஸ்டைன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

  மாக்சின் செல்வாக்கிற்கு இது ஒரு பலமான ஆதாரம்.

  சமுத்திரன்

  Murukan Kanes

  மே 15, 2018 at 5:56 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: