Lankamuslim.org

One World One Ummah

பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள்

leave a comment »

qazaqபாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டில் காணப்படும் புத்தரின் நினைவுச் சின்னங்களை வருடாந்த புத்த ரஷ்மி வெசாக் வைபவத்தில் காட்சிப்படுத்துவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைத்தது. தக்ஷில்லா அரும்பொருட்காட்சிசாலையின் காப்பாளரினால் கொண்டுவரப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை இலங்கையின் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி.ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், சிரேஷ்ட பிக்குகள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், மத குருமார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் பெற்றுக்கொண்டனர்.

இவ் புத்த நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கொழும்பு கங்காராம விகாரை மற்றும் அலரி மாளிகையில் நேற்றைய தினம் (29-04- 2018) ஆரம்பமாகியுள்ளது . அதன்பின்னர் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பிரசித்திபெற்ற விகாரைகளில் காட்சிப்படுத்தப்படும்.

ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கொழும்பில் புனித பண்டங்கள் காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர் இப்புனித பண்டங்கள் வெல்லம்பிடிய, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல்,அனுராதபுரம் மற்றும் கண்டி நகர்களுக்கு எடுத்துச்செல்லப்படும். மே மாதம் 16 ஆம் திகதி புனித புத்த பண்டங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் சாராநாத் நகரில் இருந்தும் பாகிஸ்தானின் தக்ஷிலா நகரில் இருந்தும் எடுத்துவரப்பட்டுள்ள புத்தரின் நினைவுச் சின்னங்கள் ஹுணுப்பிட்டிய கங்காராம விஹாரையில் வைக்கப்பட்டுள்ளது

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 29, 2018 இல் 12:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: