Lankamuslim.org

One World One Ummah

சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது : NFGG

with 3 comments

qazsaqw“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலாக மாறிவிடக் கூடாது. இவ்விடயத்தில் ஒவ்வொருவரும்  தமது பொறுப்பினை தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது  நீதியின் பக்கம் நின்று அணுக வேண்டும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

 திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 “திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் தனித்துவமான ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மிகவும் கவலையளிக்கின்றன. சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில்  ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாசார தனித்துவங்களை மதித்து பரஸ்பர அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினை எந்த வகையிலும் எற்றுக் கொள்ள முடியாது.

மட்டுமன்றி, முஸ்லிம் ஆசிரியையின் கணவரினால் அதிபர் மிரட்டப்பட்டார் என்ற ஒரு பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவசரமான இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு எவரும் தன்னை மிரட்டவில்லை என அந்த அதிபர் தற்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஆக, இந்தப் பிரச்சினை திட்டமிடப்பட்ட வகையில் தீய நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பூதாகரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவே நம்ப வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தான் விரும்பும் ஒழுங்கில் ஆடை அணிவதற்கான சுதந்திரத்தினை இந்த நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது போலவே குறித்த இந்தப் பாடசாலை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கப் பாடசாலையாகும். இதற்கென கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்கள் இருக்கின்றன. இதன் பிரகாரம் சீரான உடைகளை அணிந்து வர வேண்டும் என ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இதைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை. இதனை அனுசரிக்கும் வகையில்  சகல அரசாங்கப் பாடசாலைகளும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமையாகும். முஸ்லிம் கலாசார தனித்துவங்களைப் பேணும் பாடசாலைகள் அனைத்தும் பிற மத  ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் எவ்வாறு சட்டத்தையும் அடுத்தவர்களின் கலாசார தனித்துவங்களையும் மதித்து நடந்து கொள்கிறன என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் இந்த விடயமானது ஒரு பாடசாலையின் உள்விவகாரமாகவும், நிருவாகத்துடன் தொடர்பான நடவடிக்கையாகவும் சொல்லப்பட்டாலும், அடிப்படை உரிமை மீறலாகவே இது அமைந்துள்ளது. எந்தவொரு பிரஜையினதும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். ஒரு தரப்பின் தனித்துவத்தை, இன்னொரு தரப்பினர் மீது திணிப்பது கலாச்சார அத்துமீறலாகவே  கருதப்பட வேண்டும்.

 இலங்கையின் பன்மைத்துவத்தை மதித்து, பல்லினக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கொண்டுள்ளோம். சக சமூகத்தினரதும், பிரஜைகளதும் சுயாதீனத்தை மதித்து நடக்க வேண்டிய தேவை முன்னெப்போதை விடவும் சம காலத்தில் மிக அதிகமாக உணரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது.

குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் தமக்கிருக்கும் பொறுப்பினை உணர்ந்து நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆரவாரமான இனவாதப் கோசங்களுக்கு  முன்னால் தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது  நீதியின் பக்கம் நின்று இதனை அணுக வேண்டும். அரசியல் மற்றும் இனரீதியான பாரபட்சங்களைக் கடந்து  பேசப்பட வேண்டிய நியாயங்களை பேசுவதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களோடு இரு தினங்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில்  தொலைபேசியில் உரையாடினார். அவசர தொலைநகல் செய்தியொன்றையும் அனுப்பி வைத்திருந்தார். அதன் பின்னர் நேரில் சந்தித்து இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். எனினும், இரா.சம்பந்தன் அவர்களது பதில்கள் திருப்தியளிக்கக் கூடிய வகையில் அமையவில்லை. அத்தோடு நாட்டின் சட்டத்தின் படி அவர்களுக்கிருக்கின்ற உரிமைகளின் அடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைகள் பக்கமுள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கவில்லை. இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது.

பொறுப்புள்ள சமூக அரசியல் தலைவர்களின் இது போன்ற மனோநிலை எந்தவொரு சமூகத்திற்கும் நல்ல விளைவுகளைக் கொடுக்கப் போவதில்லை. நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் இது ஏற்புடையதல்ல. இந்நிலையில் தற்போது நாட்டில் இனங்களுக்கிடையிலே பரவலாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைவதற்கும், தீர்வுகளைக் காண்பதற்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகளை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்துகிறது.

இவ்விடயத்தில் நிரந்தரமான நியாயமான தீர்வொன்றினைக் காண்பதற்கான சகல முயற்சிகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ந்தும் மேற் கொள்ளும்.” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- NFGG ஊடகப்பிரிவு

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 29, 2018 இல் 8:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. தம்பி அப்துல் நீங்க வளர்த்துவிட்ட அஸ்மின் இப்ப என்ன சொல்லுறாரு என்று பார்தாக்கும்போது உங்கட வார்ப்புக்கள் எதிர்காதில முஸ்லீம்களுக்கு ஆப்பாகத்தான் இறங்கும்போல இருக்கு

  Kiyas KKY

  ஏப்ரல் 29, 2018 at 9:38 பிப

 2. எஸ் ஹமீத் – ஐக்கிய ராஜ்ஜியம்

  சிலதினங்களாகவடமாகாணசபைஉறுப்பினர் அய்யூப்அஸ்மின் ஊடகங்களில்
  பேசுபொருளாகியிருக்கிறார்.
  இலங்கைவாழ்இஸ்லாமியசமூகத்தின்உணர்வுகளை அவர்வெகுவாகக்காயப்படுத்திக்
  கொண்டிருக்கிறார்என்பதனால் ஊடகங்களில்அவர்பலவாறாகவிமர்சிக்கப்படுகின்றார்.
  உண்மையில்இதன்பின்னணியில்அய்யூப்அஸ்மினின் மிகக்கேடுகெட்டஓர்அரசியல்
  இருக்கிறது.- ஐக்கிய ராஜ்ஜியம்*

  அடுத்தமாகாணசபைபோனஸ் ஆசனத்தைப்பெற்றுக் கொள்வதற்குத்
  தன்னைவசைபாடும் முஸ்லிம்சமூகத்தின் ஒவ்வொருசொற்களும்
  உதவிசெய்யும் என்பதுதற்போதைய வடமாகாணசபை உறுப்பினரான
  அய்யூப் அஸ்மினுக்குநன்குதெரியும்.
  இஸ்லாமியவிழுமியங்களைப் பேணி நடக்கின்றஇலங்கை
  முஸ்லிம்மக்கள் தன்னைத்திட்டித் தீர்ப்பதானது,
  அடுத்தமாகாணசபை உறுப்பினர்பதவியைத்
  தான்பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதம்என்பதும்
  அவருக்குமிகநன்குதெரியும்.
  ஆனால், இலங்கையில்வாழும்
  முஸ்லிம்மக்கள்என்னமூடர்களா,
  தன்னைக்காரணமில்லாமல்திட்டுவதற்கு?
  பின்என்னசெய்யலாம்?

  முஸ்லிம்மக்களைச் சீண்டவேண்டும். முஸ்லிம்களை
  எதிர்ப்பதுபோலபாவனைகாட்டவேண்டும்.
  முஸ்லிம்களின்உணர்வுகளைக்கொச்சைப்படுத்தவேண்டும்.
  இவற்றின்மூலம்முஸ்லிம்கள் கோபமுற்றுத்தன்மீதுவசை மாரிபொழியவேண்டும்
  எனும்தனதிந்த வஞ்சகஎண்ணத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகத்தான்
  முஸ்லிம்களின்இதயங்களில் அண்மைக்காலங்களாக ஈட்டிகளைப்பாய்ச்சிக்
  கொண்டிருக்கிறார்இந்த அய்யூப்அஸ்மின்என்பதைப்புரிந்துகொள்வதற்குஉளவியலோ,
  தர்க்கவியலோகற்றிருக்கவேண்டியஅவசியமில்லை.
  கொஞ்சம்சிந்தித்தாலேஇந்தஉண்மைபுலப்பட்டுவிடும்.

  அய்யூப்அஸ்மின்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்காகச் செய்யும்தியாகம்என்பது அவர்
  முஸ்லிம்சமூகத்தினால் எந்தளவுதாக்குதலுக்குள்ளாகிறார் என்பதைப்பொறுத்திருக்கிறது.
  இலங்கை முஸ்லிம்இனம் அஸ்மின்மீதுகாட்டும்சினத்தின் அளவும் அஸ்மின்மீது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புவைத்திருக்கும் நம்பிக்கையும்ஒன்றுக்கொன்றுநேர்விகிதசமனானவை.
  நமதுசினம்கூடக்கூடஅவரின்மீதுகூட்டமைப்புகொண்டுள்ளநம்பிக்கையும்கூடிச்செல்லும்.
  நமதுசினம்குறைந்தால்அந்தநம்பிக்கைகுறைவடையும்.

  இதுஅய்யூப்அஸ்மினின்வடமாகாணசபைப்பரீட்சைக்கானஇறுதிக்காலம்.
  இந்தப்பரீட்சையில்அவர்அதிகபுள்ளிகள்பெற்றுச்சித்தியடைந்தால்தான் அவருக்குத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புமீண்டும்மாகாணசபை உறுப்பினர்பதவிக்கான
  போனஸ்ஆசனத்தைவழங்கும். எனவேதான், இப்போதிருந்தே
  அவர்முஸ்லிம்சமூகத்திற்கெதிராகஎழுதியும்,
  பேசியும்தனக்கானபுள்ளிகளைச்சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

  ‘தமிழர்களின்உரிமைகளைப்பாதுகாப்பதற்காகத்தனது
  சொந்தச்சமூகத்தையேஎதிர்த்துப்போராடியவீரத்தியாகி’
  என்றுஅய்யூப்அஸ்மின்பெறப்போகின்றபட்டம்தான்
  அவருக்கானமாகாணசபைஉறுப்பினர்பதவியை
  எதிர்வரும்வடமாகாணசபைத்தேர்தலில்உறுதிசெய்யும்.
  எனவேதான், ஒட்டுமொத்தமுஸ்லிம்களின்
  உணர்வுகளைக்கொச்சைப்படுத்தியபடி,
  அந்தப்பட்டத்தையும்பதவியையும்பெறுவதற்கு
  அவர்கடும்முயற்சிகளைமுன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்.

  நல்லாட்சிக்கானதேசியமுன்னணியினருக்குச் சொந்தமானமாகாணசபைபோனஸ்
  ஆசனத்தைநயவஞ்சகமாகக்கவர்ந்து,
  கடந்தகாலங்களில்தனதுசொகுசுகளையும் சுகங்களையும்
  உறுதிப்படுத்திக்கொண்ட
  அய்யூப்அஸ்மின், வற்றின்ருசியைக்கண்டபின்னர்
  அவற்றைவிட்டுவிடமுடியாதபேரவாநிலையில்
  தற்போதுதத்தளித்துக்கொண்டிருக்கிறார்.

  கூட்டமைப்புக்குப்பணம்கொடுத்தோஅல்லது கூட்டமைப்புக்காகப்
  பெரிதாகவாளேந்திப்போராட வோவக்கில்லாதஅவர்மிகமலிவானதும்,
  இழிவானதுமானதந்திரங்கள்
  மூலம்தன்னைத்தக்கவைத்துக் கொள்ளத்தவியாய்த்தவிக்கிறார்.
  அதன்பிரதான வெளிப்பாடுதான்தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குப்பெரும்போட்டியாளனாக வடமாகாணத்தில்எழுச்சிபெற்றிருக்கும்அமைச்சர்றிசாத்மீதும்,
  அபாயாஉரிமைக்காகவெகுண்டெழுந்திருக்கும் முஸ்லிம்சமூகத்தின் மீதும்
  அண்மைக்காலங்களாக அவர்அள்ளிவீசும்நச்சுச்சொற்கள்என்பதை
  நாம்புரிந்துகொள்ளவேண்டும்.

  இஸ்லாத்தையும்முஸ்லிம்களையும் எதிர்ப்பதாகபாவ்லாகாட்டிய
  சல்மான்ருஷ்தியை, தஸ்லிமாநஸ்ரினை
  நாம்கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால்இன்றுஅவர்கள் இத்தனைபிரபல்யமும்
  இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்துஇத்தனைசுகபோகங்களையும் பெற்றிருக்கமுடியாது.
  நமதுஎதிர்ப்பும்அச்சுறுத்தலும்தான்அவர்களைப்பணத்தோடும்பாதுகாப்போடும்,
  பந்தாவோடும்இன்றுவாழச்செய்திருக்கிறது.

  அய்யூப் அஸ்மினும் கூடஅத்தகைய எதிர்ப்பையும்அச்சுறுத்தலையும்தான் இன்றுமுஸ்லிம்சமூகத்திடமிருந்துஎதிர்பார்த்துக்காய்களைக்கனகச்சிதமாக
  நகர்த்திக்கொண்டிருக்கிறார். ஆக, அவரைக்கண்டுகொள்ளாமல்- கணக்கிலெடுக்காமல்-
  தவாக்கரையொருவனின் உளறல்களாகஅவரதுகருத்து வெளிப்பாடுகளைஊதித்தள்ளிவிட்டு
  , நமதுபணிகளை நாம்மேற்கொள்வதன் மூலமேமுஸ்லிம் சமூகத்தைக்காட்டிக் கொடுத்துத்தன்னைத்தக்கவைத்துக்கொள்ளஎண்ணும் அய்யூப்அஸ்மின் என்னும் பிரகிருதியைத்தோல்வியடையச்செய்யலாம்!

  எஸ் ஹமீத்

  ஏப்ரல் 30, 2018 at 7:25 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: