கொரியாக்கள் பகைமை மறக்கட்டும் ஆனால் மத்திய கிழக்கு பற்றி எரியட்டும் !!!
M. ரிஸ்னி முஹம்மட்: மத்திய கிழக்கில் ஈரானையும் -சவூதியையும் கடுமையான பகைவர்களாக மாற்றுவதில் வெற்றிபெற்றுவரும் டொனால்ட் டிரம் வட மற்றும் தென்கொரியாக்களின் உறவை சமாதானமாக வலுப்படுத்துவதிலும் வெற்றிபெற்றுவருகிறார் இது இரண்டுமே அமெரிக்காவின் முதலாளித்துவ நலன் சார்ந்ததும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற பின்புலம் கொண்டதுமாகும் , இதேவேளை மத்தியகிழக்கில் எழுச்சிபெற்றுவரும் துருக்கியையும் அமெரிக்கா பலவீனப்படுத்த திரைமறைவில் தொடராகவே முயன்று வருகின்றது .
அதுமட்டுமல்ல மத்திய கிழக்கை பொறுத்தவரையில் அமெரிக்காவினதும் , ரஷியாவினதும் அணுகுமுறைகள் ஒன்றாகவே ஒரு தளத்தில் இருந்துதான் பிறக்கின்றது மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளின் மத்தியிலான மோதலில்தான் இந்த நாடுகளின் நலன் தங்கியுள்ளது , ரஷியா தனது நேசநாட்டு தலைவரான சர்வாதிகாரி பஷார் அல் அஸத்துக்காக அவரை எதிர்க்கும் முஸ்லிம் மக்கள் மீது குண்டுகளை போட்டு தாக்குகின்றது ஆனால் தனது நேசநாடான அர்மேனியா அதிபருக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அவரை பாதுகாக்க ரஷியா அவரை எதிர்க்கும் மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்க முன்வரவில்லை ரஷியாவுக்கு பஸார் அசாத் மீது அப்படி என்ன அக்கறை என கேட்டால் மத்திய கிழக்கை மோதலில் வைத்துக்கொள்ளவேண்டும் அதன் மூலம்தான் இலாபங்களை அறுவடை செய்யமுடியும் இதற்கு இஸ்லாம் எழுச்சி பெற்று உலகில் மிகப் பெரும் சக்தியாக மாறிவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்காக மத்திய கிழக்கில் உள்ள சர்வாதிகாரிகளை பாதுகாக்க வேண்டும் என்ற தளத்தில் இரு நாடுகளும் ஒன்றுபடுகின்றன ,
மத்திய கிழக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றுக்கொண்டால் அந்த சுதந்திர தளத்தில் இஸ்லாம் சுதந்திரமாக எழுச்சி பெரும் அந்த எழுச்சி ஏகாதிபத்திய மேலாதிக்க செயல்பாடுகளுக்கு முடிவுகட்டிவிடும் என்பது அவர்களுக்கு தெரிந்த உண்மை ஒரு சுதந்திர தேசத்தில் இஸ்லாம் செழிப்பாக வளரும் என்பதால் அமெரிக்காவும் ,ரஷியாவும் அதன் நேசநாடுகளும் மத்திய கிழக்கை சர்வாதிகாரிகளிடம் ஒப்படைத்து அவர்களை பாதுகாக்கவே முயன்றுவருவதுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பகைமை தீ தொடர்ந்தும் எரிய எண்ணெய் உற்றிவருகிறார்கள் ஈரானும் ,சவூதியும் . சிரியாவிலும் , ஈராக்கிழும் ,யெமனிலும் உள்ள மக்கள் பகைமையை மறந்து தமக்குள் ஒன்று பட்டுவிடக் கூடாது என்ற விதமாக அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் மூலமாக பகைமை தீ தொடர்ந்தும் எரிய வைத்து வருகிறார்கள் .ஆனால் இரு கொரியாக்களின் விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை அது அவர்களுக்கு தேவையானதும் இல்லை .
1953இல் கொரிய போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தற்போது வடகொரிய-தென் கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இது மூன்றாவது முறையாகும். இதன் பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையே சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இரு நாடுகளிலும் பதவியில் இருக்கும் தலைவர்கள் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இரு கொரியாக்களையும் ஒன்றுமைப்படுத்துவதில் டொனால்ட் டிரம்ப் முக்கிய நபராக இருந்து வருகிறார் . இதே நபர்தான் மத்திய கிழக்கை மேலும் மோசமான இரத்தம் ஊட்டும் நிலைக்கு இட்டு செல்லவும் காரணமா உள்ளார் .
இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரு கொரியாக்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது இதன் மூலம் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பகையுணர்வும் மட்டுப்படுவதுதோடு, 68 ஆண்டு காலமாக இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான மனவேறுபாடுகளை மாற்றும் வகையிலான ஒரு தொடக்க புள்ளியாகவும் இது மாறியுள்ளது இந்த நிலையில் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன், வட கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு காரணமான அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
ஆக மத்திய கிழக்கில் இந்த வல்லரசுகள் முஸ்லிம்கள் என்றால் உங்களுக்கு சமாதானம் கூடாது என்ற தளத்தில் இருந்து நிரந்தர பகைமையை ஆர்வமூட்டி வளர்த்துவருகின்றன .
மறுமொழியொன்றை இடுங்கள்