Lankamuslim.org

One World One Ummah

சண்முகா : தற்காலிக இடமாற்றம் தீர்வாகுமா ?

with 4 comments

Noதனது பாட­சா­லையில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வருதைக் கண்­டித்து திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூரி மாண­வி­களின் பெற்­றோர்­களும் பழைய மாண­வர்­களும் மே 25 ஆம் திகதி பாட­சாலை முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

”அபாயா அணியக் கூடாது. சேலையே அணிய வேண்டும்” என அதிபர் உத்­த­ர­விட்­டி­ருந்தும் அதனை மீறி தொடர்ந்தும் அபாயா எனும் கலா­சார ஆடையை அணிந்து பாட­சா­லைக்கு வரு­வ­தா­னது தமது கலா­சா­ரத்தை மறு­த­லிப்­ப­தாக அமைந்­துள்­ள­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் குற்­றம்­சாட்­டினர். அத்­துடன் குறித்த முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் கண­வர்கள், பாட­சாலை அதி­ப­ருக்கு மிரட்­டல்­களை விடுத்­த­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர். எனினும் இக் குற்­றச்­சாட்­டினை மறுத்த குறித்த முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் கண­வர்கள், தாம் அதி­பரை நேரில் சந்­தித்து இது­வி­ட­ய­மாக கலந்­து­ரை­யா­டி­னோமே தவிர எவ்­வித மிரட்­டல்­­ளையும் விடுக்­க­வில்லை என்றும் தெரி­வித்­தனர்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சினால் சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி ஹபாயா விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி தெரிவித்தார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற ஹபாயா விவகாரம் தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்று மே மாதம் 26 ஆம் திகதி வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது வலயக்கல்வி பணிப்பாளர் என்.விஜேந்திரன், பிரதி பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்‌ஷ அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா சபையின் திருகோணமலை நகரக் கிளைத் தலைவர் ஏ.ஆர்.பரீட் மௌலவி, திருகோணமலை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.வலீத் ஹாஜியார், என்.சீ.ரோட் பள்ளி தலைவர் எம்.வை. இல்யாஸ், நகர சபை உறுப்பினரான மௌசூன் மாஸ்டர், பிரதேச சபை உறுப்பினர் துவான் வஹார்தீன், திடிர் மரண விசாரணை அதிகாரி ரூமி மற்றும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும், பாடசாலையின் சமய கலாச்சாரம் பேணப்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை சார்பாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சண்முகா அபாயா சர்ச்சை : நடந்தது என்ன?

– ராஸி முஹம்மத் ஜாபிர் –

திரு/சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை. இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள். பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.

2012ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம் அனுமதி கோரியிருந்தார். இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடர்ந்து புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். இப்பொழுது மாற்றலாகி வேறு பாடசாலைக்குச் சென்றுவிட்டார்.

2013ல் பௌமிதா ஆசிரியை சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றார்.ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுமதி வழங்கப்பட்டவில்லை. பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார். விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது. தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை பௌமிதா முறைப்பாடு செய்திருந்தார். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர், ஆனால் அவர் இந்தப் பாடாசாலையிலேயே புடவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.

2014ல் சஜானா ஆசிரியை அந்தப்பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். அவர் அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட. அபாயா அணிவதற்கான அனுமதி அவருக்கும் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் புடவை அணிந்து வந்திருக்கிறார்.

2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார். அபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார். அதே மறுப்பு. புடவை அணிந்து கொண்டு செல்கிறார்.

2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார். என்ன நடந்தாலும் தான் அபாயா அணிந்து கொண்டுதான் வருவேன். நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் அபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார். சென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லிம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் அபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.

ஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா, சஜானா, ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர், சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர். அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.

“நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது. எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும்” என்று அதிபர் பேசியிருக்கிறார்.

“ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது.எமது கலாச்சார ஆடையை அணியிம் உரிமை எமக்கு இருக்கிறது. பாடசாலைக்குள் புடவையும் அதற்கு வெளியே அபாயாவும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.

“கதவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள். பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள். விரும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள். எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்” என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.

இது நடந்தது ஞாயிறு மாலை.
அதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது. அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகநூலில் வந்தது என்பதுதான் கேள்வி.

சென்ற திங்கட்கிழமை (23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் அபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள். பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன், பிரதி அதிபர் பாலசிங்கம், உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை, உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.

உங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது. நாங்கள் அபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள். “அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல. அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா?” என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.

ஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது. திங்கள் பாடசாலை முடியும் தறுவாயில் பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது. இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார். ஆசிரியைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.

அதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும், துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர். அதைத் தொடந்து பல அனாமேதைய முகனூல் பக்கங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.

ஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கடந்த புதன்கிழமை (25) ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர். ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம்” என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர், அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது. ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (26) மதத்தலைவர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், பொலீஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் அன்றே 10 மணிக்கு நடந்தது. (தற்போது முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.)

கலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை-MP

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2018 இல் 9:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலை விவகாரத்தில்:

  ஒன்றில்

  சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆசிரிய ஆசிரியைகள் அவரவர் இனத்தை பிரதிபலிக்கும் பாடசலைகளில் நியமிக்கப்பட வேண்டும்.( இது பன்மைத்துவ நாட்டுக்கு உகந்ததல்ல. பிற மத கலாச்சார விடயங்கள் சம்பந்தமாக குரோதங்கள், கசப்புணர்வுகள் வளர இதுவே காரணமாக அமையும்)

  அல்லது

  அவரவர் கலாச்சார ஆடைகளுடன், தத்தம் மொழித்திறனுக்கேற்ப, நாட்டின் எந்த பாடசாலையிலும் கடமை புரிவதற்கு சட்டம் இயற்றப்படவேண்டும்.–ameez Aboobacker

  Cadr KKy

  ஏப்ரல் 27, 2018 at 11:18 பிப

 2. சண்முகா கல்லூரியின் 5 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றம்…! கல்வி அதிகாரிகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து சண்முகா பாடசாலையின் 5 ஆசிரியைகளும் நிரல் அமைச்சின் முடிவு வரும் வரைக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள். முடிவு வராது.ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியை ஹபாயா அணிந்து செல்ல முடியாது.இதுதான் இனி முடிவு.

  ஒரு முஸ்லிம் ஆசிரியை தனது கலாச்சார ஆடையை அணிந்து வர முடியாத கையறு நிலை.

  Riyas

  ஏப்ரல் 27, 2018 at 11:23 பிப

  • அபாயா என்பது முஸ்லிம்களின் கலாச்சார உடை என்று ஒரு முட்டாள்தனமான வாதம் முவைக்கப்படுவதை ஏற்றுொள்ள முடியாது அபாயா அறிமுகமானது இந்த வீட்டுப்பணிபெண்தெ ாழில் வந்தபிற்பாடுதான் என்பதை மறந்துவிவேண்டாம்

   SMBM.Anssar

   ஜூன் 1, 2018 at 11:24 முப

   • வரலாறு தெரியாமல் முட்டாள்தனமாக கருத்துக்களை கூற வேண்டாம் ,இஸ்லாமிய எழுச்சியுடன் கூட வந்ததுதான் அபாயா , முஸ்லிம் பெண்கள் தனது உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளில் சிறந்த ஆடைதான் இஸ்லாம் வரையறுத்துள்ள முறையில் தைத்து அணியும் அபாயா , சிறந்த அயாயவை விட இஸ்லாம் வரையறுத்துள்ள முறையில் உடலை மறைக்கும் ஆடைகளை கூறுவது கடினம் , உங்களின் முட்டாள் தனமான கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள்

    IRFAN

    ஜூன் 1, 2018 at 11:42 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: