Lankamuslim.org

One World One Ummah

‘திருகோணமலை இந்துமகளிர் கல்லூரியில் இனவாதம்’ !!

leave a comment »

1.jpgதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தமது மார்க்கம் விதித்துள்ள முறைப்படி உடலுறுப்புக்களை மறைக்கும் விதமாக அபாயா எனும் ஆடை அணிந்து வருவதைக் கண்டித்து இன்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த இனவாத செயல்பாட்டை ஒரு பாடசாலை சமூகம் மேற்கொண்டுள்ளமை தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது

ஒரே மொழி பேசுகின்ற சமூகத்தின் மத்தியில் பிளவை ஏற்படுத்தக்கூடிய இப்படியான இனவாத செயல்பாடுகள் தொடர்பில் இரு சமூகங்களிலும் உள்ள சகவாழ்வையும் சமாதானத்தையும் விரும்பும் புத்திஜீவிகள் உடன் கணம் செலுத்த வேண்டும் ,இது பேரினவாத சக்திகளின் வேலைத்திட்டமாகவும் இருக்க முடியும்.

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவிகள் கல்விகற்றும் , தமிழ் ஆசிரியைகள் கடமையாற்றியும் வருகின்றனர் . ஆனால், அவர்களை முஸ்லிம் பாடசாலை சமூகம் அவர்களின் கலாசார உடைகளை கலையுமாறு கூறியதில்லை அல்லது அவர்களை அபாயா அணிந்து வரும்படி வற்புறுத்துவதில்லை. அவர்கள் தமிழ் கலாசாரப்படியே ஆடையணிந்து வருகின்றனர் என முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்கது

ஒரே மொழி பேசுகின்ற சமூகத்தின் ஆடைக் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாத நிலையில் , தமிழ் சமூகம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்று கோருவதும் அதை முஸ்லிம்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமாகும் . முஸ்லிம்கள் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் போதே இத்தனை அடக்குமுறை எதிர்கொள்கிறோம் என அவர்கள் கருதும்போது , வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழர்கள் பெரும்பான்மையாக மாறுகின்ற போது முஸ்லிம்களின் நிலை எப்படியிருக்கும் என அவர்கள் அச்சம் கொள்வதில் என்ன தவரு இருக்கப்போகிறது ?

32

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2018 இல் 8:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: