Lankamuslim.org

One World One Ummah

சொந்த மண்ணுக்கு ”திரும்பி செல்வதற்கான மாபெரும் பேரணி” ஏற்படுத்தும் அதிர்வுகள் – A strategic perspective

leave a comment »

qazaswexஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பலஸ்தீனர்கள் முன்னெடுத்துவரும் “திரும்பி செல்வதற்கான மாபெரும் பேரணி” என்ற பலஸ்தீனர்களின் புதிய போராட்ட ஒழுங்கு பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . அந்த அதிர்வலைகளில் மூலோபாய அதிர்வுகள் strategic பற்றி பார்ப்போம்

பலஸ்தீனில் பல்வேறு சிவில் அமைப்புக்கள், கட்சிகள்,இயக்கங்கள் தனிநபர்கள் ஒன்றிணைந்து Great Return March (GRM) என்ற அமைப்பை நிறுவி அதன் ஊடாக பலஸ்தீன அகதிகள் முன்னெடுத்துள்ள புதிய ஒழுங்குகளை கொண்ட மக்கள் போராட்ட மூலோபாயம் (strategy ) சயோனிஸ மற்றும் அதன் ஆதரவு சக்திகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளததுடன் தமது நலன்சார் நிகழ்ச்சி நிரல்களை பலஸ்தீனர்களுக்கான அரசியல் தீர்வு பொதி என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்க முயன்றுவரும் நாடுகளுக்கும் பலமானதும் உறுதியானதுமான ஒரு செய்தியையும் முன்வைத்துள்ளது என்பதற்கு அப்பால் பலஸ்தீன -சயோனிஸ பிரச்சினையின் பிரதான மூலக்கூறு பலஸ்தீனர்கள் அவர்களின் பூர்வீக சொந்த தாயகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதுதான் என்ற பிரச்சினையின் பிரதான அம்சம் நோக்கி உலகின் பார்வையை மீண்டும் திருப்பிவிட்டுள்ளது . இதை வேறு வார்த்தைகளின் சொல்வதானால் பலஸ்தீன -ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினையின் பிரதான மூலக்கூறுகள் மறைக்கப்பட்டு ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஆகியன வற்றின் இருப்புதான் பிரச்சினையின் பிரதான மூலக்கூறு என திட்டமிட்ட முறையில் யூத சயோனிஸ மற்றும் சயோனிஸ ஆதரவு சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பூகோள அரசியல் நகர்வுகள் மீது போடப்பட்டுள்ள ஒரு பலமான அடியாகவும் இது அமைந்துள்ளது என கூறலாம் .

“திரும்பி செல்வதற்கான மாபெரும் பேரணி அல்லது அணிவகுப்பு” என பெயரிடப்பட்ட ஒரு புதிய மக்கள் போராட்ட ஒழுங்கின் மக்கள் தமது பூர்வீக தாயகம் நோக்கி தமது சொந்த கிராமங்கள், வீடுகள் ,காணிகளை நோக்கி செல்வதத்திற்காக பலஸ்தீன -இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எல்லை பகுதிகளில் 70 ஆண்டுகளின் பின்னரும் கூடாரம் அடித்து காத்திருக்கிறார்கள் என்பது உலகிற்கு ஒரு பலமான நிலையான செய்தியை முன்வைத்துள்ளது .

, 1948 ஆம் ஆண்டு முஸ்லிம் உம்மாவின் இதயமான பலஸ்தீன மண்ணை யூத சயோனிஸம் ஆக்கிரமித்த போது, திருடிக்கொண்ட போது பலஸ்தீனை பூர்வீக்க தாயகமாக கொண்ட மக்கள் தமது மண்ணையும் , வீடுகளையும் ,சொத்துக்களையும் , இழந்தனர் ,அவர்கள் அங்கிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர் அன்று அகதிகளாக விரட்டப்பட்டவர்கள் இன்று 70 ஆண்டுகளின் பின்னரும் அவர்கள் தமது சொந்த பூர்வீக பூமிக்கு திரும்பி செல்வதற்கான உரிமைகள் முற்றுமுழுதாக மறுக்கப்பட்ட நிலையில் சயோனிச பயங்கரவாதிகளினால் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். விரட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த மண்ணுக்கு மீண்டும் செல்லமுடியாளாத நிலையிலேயே இறந்துவிட்ட நிலையில்.

நாம் பலஸ்தீனர்களை விரட்டி 70 ஆண்டுகளாகி விட்டது அவர்களில் முதல் தலைமுறை அழிந்து விட்டது ஹமாஸ் , இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுத போராட்ட அமைப்புக்களை அழித்து விட்டால்போதும் அடுத்த தலைமுறையினர் தமது மண்ணை அதற்காண உரிமை போராட்டத்தை கைவிட்டு விடுவர் , உரிமைகளை மறந்துவிடுவர் , விட்டுகொத்துவிடுவர் என்ற யூத சயோனிஸ கற்பனையை உடைந்து எரிந்து பலஸ்தீன இளம் தலைமுறையினர் இந்த அமைதிப் போராட்ட பேரணியில் குறிப்பாக சிறுவர்கள் ,சிறுமியர் உட்பட இளம் தலைமுறையினர் இந்த அமைதிப் போராட்டத்தில் குதித்துள்ளமை சயோனிஸ மற்றும் அவர்களின் ஆதரவு சக்திகளின் முகத்தில் அறைந்துள்ளதுடன் உலகிற்கு இந்த உரிமை போராட்டம் வெற்றிபெறும்வரை தொடரும் என்ற உறுதியான செய்தியையும் கூறியுள்ளது .

இந்த “திரும்பி செல்வதற்கான மாபெரும் பேரணி” பற்றி குறிப்பிடும் Great Return March (GRM) அமைப்பு இது ஒரு தொடரான , கூட்டுப் போராட்டம், இது ஒரு பருவகால அல்லது ஒரு நாள் நிகழ்வு அல்ல இது பலஸ்தீனர்கள் அவர்களின் பூமிக்கு மீண்டும் செல்லும்வரை தொடரும் எனவும் இந்த போராட்ட முறை ஆயுதங்கள் , கற்கள் இன்றி வெறும் பலஸ்தீன கொடியுடன் மட்டும் இடம்பெறும் என்றும் ஆக்கிரமிப்பு படையுடனான மோதலை தவிர்க்கும் முகமாக பேரணியில் கலந்து கொள்பவர்கள் பலஸ்தீனியின் ஆக்கிரமிப்பு பூமியில் போடப்பட்டுள்ள எல்லைக்கு சுமார் 700 மீட்டர்கள் தூரத்தில் இருந்து அமைதியான தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதேவேளை . இந்த போராட்டபேரணி கற்களை வீசுதல் ,மோதலில் ஈடுபடல் என்பனவற்றில் இருந்து வேறுபட்ட ஒரு புதிய வடிவிலான போராட்ட வடிவம் எனவும் தெரிவித்துள்ளது .

மக்கள் போராட்ட பேரணிகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளது குறிப்பாக மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் அவை இடம்பெற்றுள்ளன , கடந்த 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற the Return March மற்றும் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற the Global March to Jerusalem (GMJ) , 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் பேரணி என்பனவும் மக்கள் போராட்டங்களுக்கு உதாரணங்களாகும் இம் முறை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்ட ஒழுக்கு முற்றிலும் சர்வதேச சட்டங்களையும் ஐ.நாவின் 194 ஆவது சர்த்து உரிமை உத்தரவாதத்தையும் கருத்தில் கொண்டு கற்கள் கூட இன்றி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஒரு புதிய போராட்ட ஒழுங்காக உள்ளது. இந்த புதிய போராட்ட ஒழுங்கை வரைவிலக்கணப்படுத்தும் அதை ஏற்பாடு செய்துள்ள அந்த அமைப்பு இப்படி கூறுகின்றது ”இது சட்டபூர்வமான சட்ட அடித்தளங்கள் மற்றும் தெளிவான மனிதாபிமானக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பொது நடவடிக்கையாகும்.” என கூறுகிறது . இந்த போராட்டம் மே 15 வரை இடம் பெரும் என தெரிவிக்கப்பட்டாலும் இது போன்ற சொந்த மண்ணுக்கு திரும்பிச் செல்வதற்கான போராட்டங்கள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது .

துப்பாக்கிகள் ,குண்டுகள் ,கற்கள்கூட இன்றி பலஸ்தீன கொடிகளுடன் தமது சொந்த பூமிக்கு திரும்புவதை வலியறுத்தும் சுமார் ஆறு இடங்களில் அமைதியாக கூடும் பேரணியை எதிர்கொள்ள  சயோனிஸ ஆக்கிரபிப்பு இராணுவம் சினைப்பர்கள் ,டாங்கிகள், பீரங்கிகள் , ஆட்லறி மோட்டார் இயக்கிகள் , விமானங்கள் , ஹெலிகப்டர்கள் , டோரன் விமானங்கள் சகிதம் குவிந்து  அமைதி போராட்ட பேரணியில் கலந்துகொண்டுள்ள மக்கள் மீதும் , அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்யும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மீதும்,  சியோனிச அராஜகங்களை ஆவணப்படுத்தும் ஊடகவியாளர்கள் மீதும் சினைப்பர் தாக்குதல்களை மேட்கொண்டுள்ளது இதுவரை 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் 2800 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்களும், காயமடைந்தவர்களில் 40 சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த அமைதி போராட்ட பேரணியை தனது மூர்க்கமான தாக்குதல்கள் மூலமாக திசைதிருப்பிவிடவும் பலஸ்தீனர்களை எதிர்தாக்குதல்களுக்கு நிர்ப்பந்தித்து பயங்கரவாத முத்திரை குத்தி தனது கனவை நிஜமாக்கவும் துடிக்கின்றது . இஸ்ரேலின் இந்த தாக்குதல்களை சர்வதேச அமைப்புக்களும் கண்டித்துள்ளன .

ஐ.நா.வினாலும் பலஸ்தீனர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அதை அவர்கள் அமைதியான முறையில் கோரியதற்காக படுகொலை செய்யப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் உள்ளனர் .

பலஸ்தீன பூமியில் சட்டவிரோத இஸ்ரேல் என்ற நாட்டை பலஸ்தீனர்களும் ஏனைய முஸ்லிம் உலகமும் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான நகர்வுகளைத்தான் அமெரிக்காவும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலும் இன்று முன்னெடுத்து வருகின்றது , இஸ்ரேலிய சயோனிஸம், ஹமாஸ் போன்ற தாயக கொள்கை மற்றும் இஸ்லாமிய விழுமிய விட்டுக்கொடுப்புக்களை செய்யாத போராட்ட அமைப்புக்களை பலஸ்தீனில் இருந்து அழித்துவிடும் இராணுவ நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் . அமைதியான மக்கள் பேரணி என்ற இந்த புதிய போராட்டகளில் ஒழுங்கு களத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது , அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் சயோனிஸ பிரதமர் நெதன்யாகுவும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் சூழலை எதிர்கொள்ள பலஸ்தீன அமைப்புக்கள் தமக்குள் ஒண்றிணைய இணக்கசெயல்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த புதிய மக்கள் போராட்ட ஒழுங்கு டொனால்ட் டிரம் – நெதன்யாகு கூட்டு செயல்பாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்றப்படுத்தியுள்ளது , சயோனிஸ ஆதரவு மீடியாக்கள் அனைத்தும் இந்த மக்கள் போராட்டத்தை ,முழுமையாக ஹமாஸின் போராட்டமாக கட்ட முட்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது . அதேவேளை பலஸ்தீன அமைப்புக்கள் தமக்குள் ஒண்றிணைவதை சகித்துக்கொள்ள முடியாத அமெரிக்க ,இஸ்ரேலிய சயோனிஸம், ஹமாஸ் அதன் ஆயுதங்களை கைவிடாமல் அப்பாஸ் தலைமையிலான PLO அமைப்புடன் இணைவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்த சூழலில் , இந்த புதிய ஒழுங்கிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அப்பாஸும் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் .

ஹமாஸ் ஆயுதங்களை கலையாது என்பது அதன் தலைவர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்தும் அதேவேளை உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலியலுக்கு பொருத்தமான போராட்ட ஒழுங்குகளை ஹமாஸ் அமைப்பு உட்பட ஏனைய அமைப்புக்கள் மக்களுடன் இணைந்து முன்னெடுப்பதன் ஊடாக இலக்கு மீது உறுதியாகவும் ,பிடிவாதமாகவும் இருந்துகொண்டு இலக்கை அடையும் வழிமுறைகளை மாறிவரும் அரசியல் சூழமைவுகளுக்கு ஏற்ப பயன்படுவது என்ற மூலோபாய திட்டங்களை பலஸ்தீனர்கள் நன்றாக பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் எமக்கு இந்த போராட்ட ஒழுங்கு சொல்கின்றது .

அதேவேளை இன்று ”இஸ்ரேல்” என்பது அன்றும், இன்றும் பலஸ்தீன்தான் அது ஒருபோதும் இஸ்ரேலாக முடியாது என்பதுதான் பெரும்பாலான பலஸ்தீனர்களின் மிக உறுதியான நிலைப்பாடாகும் .

இது 06.04.2018 ஆம் திகதி எழுதப்பட்ட கட்டுரை

எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)-BA.Hons (special in political science)

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 16, 2018 இல் 11:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: