Lankamuslim.org

One World One Ummah

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆஷிபா ஆனால் இந்திய ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை

with 2 comments

QAZSFRTHJKஎட்டு வயதுப் பெண் குழந்தை ஆஷிபா இந்து மதவெறியர்களினால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜம்முகாஸ்மீரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் ஆசிபாவின் குடும்பம் வசிக்கிறது. ஆஷிபா காணாமல் போன ஜனவரி 10 அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவுகூர்கிறார். குதிரை வீடு திரும்பியது. ஆனால், ஆஷிபா திரும்பவில்லை.

தகவலை கணவருக்குச் சொல்கிறார் அவரது தாய். அவரும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும், டார்ச் விளக்குகள், லாந்தர்கள், கோடரிகள் ஆகியவற்றோடு காட்டுக்குள் சென்று இரவு முழுக்க தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் ஆஷிபாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு நாள்கள் கழித்து குடும்பத்தினர் பொலிஸில் முறையிடுகிறார் அளித்தனர். ஆனால், போலீஸார் உதவ முன்வரவில்லை என்கிறார் புஜ்வாலா. எட்டு வயதான அந்தச் சிறுமி ஆசிஃபா ஏதேனும் ஒரு பையனோடு ஓடிப்போயிருக்கலாம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக அவர் கூறுகிறார்.

ஐந்து நாள்களுக்குப் பிறகு ஆஷிபா வின் உடல் கண்டெடுக்கப்பட்டது. “அவள் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவளது கால்கள் முறிக்கப்பட்டிருந்தன. நகங்கள் கருத்துப் போயுள்ளன. கையிலும், விரல்களிலும் நீலம் மற்றும் சிவப்பு நிறக் குறிகள் இருந்தன”

ஆஷிபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு ஆறு நாள்கள் கழித்து, ஜனவரி 23-ம் தேதி, மாநில குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இது மாநிலப் போலீசின் சிறப்புப் பிரிவு.

கோயில் ஒன்றில் பல நாள்கள் ஆஷிபா கட்டிவைக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து தரப்பட்டதாகவும் புலன்விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். பல நாள்கள் ஆஷிபா வன்புணர்வு செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாக போலீசின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டபின், தலையில் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறாள் ஆஷிபா என்கிறது குற்றப்பத்திரிகை.

ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சாஞ்சி ராம் (60) என்பவர் போலீஸ் அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜூரியா ஆகியோர் உதவியோடு இந்தக் குற்றத்தை திட்டமிட்டுச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிஃபா குடும்பத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பழங்குடி உரிமை செயற்பாட்டாளரும், வழக்குரைஞருமான தலிப் ஹூசைன் தாம் உள்ளூர் போலீசால் கைது செய்யப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் வாங்கி மையவாதியாக பயன்படுத்திவந்த இடத்தில் ஆஷிபாவை நல்லடக்கம் செய்ய்யமுட்பட்டபோது , இந்து வலதுசாரிகள் இந்து மத வெறியர்கள் சூழ்ந்துகொண்டு அங்கே புதைத்தால் வன்முறை நடக்கும் அவர்கள் விரட்டியடித்துள்ளனர் .

இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜம்மு காஸ்மீரில் முஸ்லிம்கள் பல்வேறு பட்ட கொடுமைகளையும் ,அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர் இந்திய இராணுவத்தால் பெண்கள்,சிறுமியர் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்படுவது என்பது அங்கு அரிதாக நடக்கும் ஒன்றல்ல இப்போதும் மோடியின் அரசாங்கத்தின் கீழ் அந்த கொடுமைகளை செய்ய இந்து வெறியர்களும் கைகோர்த்துள்ளனர்

இந்த வன்புணர்வு படுகொலையை இந்திய ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை !! ஏன் ? என்ற கேள்விக்கு அந்த 8 வயது குழந்தை முஸ்லிம் என்பதால் என்பதே பதில் !!!

QAZSFRTHJK

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 13, 2018 இல் 9:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. YOU ARE COMPLETELY WRONG. DONT PUBLISH FAKE AND BIASED POST ABOUT MEDIA. THE MEDIA – TIMES NOW , REPUBLIC TV ARE THE MEDIAS , north Indian medias , WHICH UNEARTHED THIS HORROR TO THE WORLD SO ALL INDU BJP RAPISTS WERE ARRESTED..
    …… DONT YOU KNOW THAT.? …………. EDITOR….
    … But you can say Tamilnaattu mediakkaaran Not publish this ..

    CEYLONTA

    ஏப்ரல் 17, 2018 at 1:39 பிப

    • see the date of the news , when lankamuslim was publishing the said news item most of the Indian main stream media were maintaining a death silence on the matter, this fact was testified by BBC too

      lankamuslim

      ஏப்ரல் 17, 2018 at 7:47 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: