Lankamuslim.org

One World One Ummah

6 அமைச்சர்களும் பொது எதிரணியுடன் இணைகிறார்கள் : மஹிந்த

with one comment

mahinபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 11, 2018 இல் 6:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக wow வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்ட​னரென தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், இன்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது.

    இன்றிரவு நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக அல்லது இல்லையா என்பது தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்பின்னர், அந்த 16 பேரும் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், அரசாங்கத்தில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர்” என்றார்.

    Imran

    ஏப்ரல் 12, 2018 at 9:07 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: