Lankamuslim.org

One World One Ummah

சிரியாவில் மீண்டும் இரசாயன குண்டுத் தாக்குதல் சுமார் 85 பேர் வபாத்

leave a comment »

ghhjkddd.jpgசிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் டூமாவில் என்ற பகுதியில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில், குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான “தி வைட் ஹெல்மட்ஸ்” குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல ஜனாஸாக்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் சர்வாதிகாரி பஷார் அல் ஆசத் தலைமையிலான ஆட்சிக்கும், போராளிகளுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கூட்டாவில் சிரிய படைகளுக்கும், போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த போரில் போராளிகள் வசமிருந்த 95 சதவீத இடங்களை பஷாரின் படைகள் மீட்டன. சிரியா தலைநகர் டமஸ்கஸ் நகரை அடுத்து அமைந்து உள்ள கிழக்கு கூட்டா பகுதிதான், போராளிகளின் பிடியில் இருந்து வந்த கடைசி முக்கியப் பகுதி.

இந்த நிலையில், சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  குறித்த நகரில் இன்னும் சுமார் 100000 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

ரசாயன தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை சிரிய அரசு மறுத்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டா ஊடக மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசுத்துறை, கூறுகையில் ரசாயன ஆயுதங்கள் வைத்து எண்ணற்ற சிரிய மக்களை தாக்கியதற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து ????

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு,என கூறி துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து, தமது செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. சிரியாவிலிருந்து, தனது படைகளை ஐக்கிய அமெரிக்கா வெளியேற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கியின் தலைநகர் அங்காராவில், 3 நாடுகளின் தலைவர்களும் ஒன்றுகூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சிரியாவின் கள நிலைமையில் அமைதியை உறுதி செய்வதற்கான எமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்த, அர்ப்பணிப்புடன் காணப்படுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டது.

இணைந்து செயற்படுவதற்கான அவர்களது தீர்மானம், வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பெரிதளவுக்குப் பயனளிக்கப் போவதில்லை. மூன்று நாடுகளும், வெவ்வேறான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதோடு, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் விடயத்திலும், 3 நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகிறது. ஆனால், இம்மூன்று நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு உறுதியளித்துள்ளமை, சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியாவிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகளை உடனே விலக்கப் போவதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அவ்விடயத்தில் கருத்து மாற்றமொன்றை வெளியிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலத்துக்குப் படைகளைச் சிரியாவில் வைத்திருப்பதற்குச் சம்மதிப்பதாகவும், எனினும், நீண்டகாலத்துக்கு அவ்வாறு வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிரியாவின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈராக்கிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகள் திடீரென விலக்கப்பட்டமை, ஈராக்கின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அந்நாட்டின் மூன்றிலொரு பகுதியை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கைப்பற்றவும் வழியேற்படுத்திக் கொண்டிருந்தது. எனவே தான், துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்துள்ளமை, முக்கியமாகக் கருதப்படுகிறது.

ghhjkddd

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2018 இல் 9:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: