Lankamuslim.org

One World One Ummah

சயோனிச அராஜகம்: ஊடகவியலாளர் உட்பட 31 பலஸ்தீனர்கள் வீரமரணம்

leave a comment »

FHDEWRFHJKLMNHJUM.ரிஸ்னி முஹம்மட்: மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் பலஸ்தீனர்கள் காஸாவில் மேற்கொண்டுவரும் போராட்டமான Great Return March (GRM) சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கான ஆர்ப்பாட்டத்தில் இதுவரை மூன்று சிறுவர்கள் உட்பட 31 பேர் சயோனிச படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் (2850 பேர்) படுகாயமடைந்துள்ளனர்,   வெள்ளிக்கிழமை(6) இடம்பெற்ற சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கான ஆர்ப்பாட்டத்தில் யாஸீர் முர்தஜா (ياسر مرتجى) என்ற பலஸ்தீன ஊடகவியலாளர் உட்பட 9 பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்பு பட்டையினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியும் பலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டு தாக்குதல்களை நடத்தியும் வருகின்றது

“திரும்புவதற்கான மாபெரும் பேரணி” என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பலத்தீனர்கள் பல முகாம்களை அமைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு தாங்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆறு வாரகால போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் .

1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்தீனர்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பாலத்தீனியர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30 ஆம் திகதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன் 1948 ஆம் ஆண்டு சட்டவிரோத இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலத்தீனர்கள் இடம்பெயர்ந்த நிகழ்வை குறிக்கும் நக்பா (பெரும் ஆபத்து) தினம் கடைபிடிக்கப்படும் மே மாதம் 15 ஆம் தேதி இந்த போராட்டம் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சூழல் போராட்டத்தை தொடர வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த போராட்டத்தை ஏட்பாடுசெய்திருந்த Great Return March (GRM) அமைப்பு இது பற்றி குறிப்பிடும்போது துப்பாக்கிகள் இன்றி ஆயுதங்கள் இன்றி பலஸ்தீன கொடிகளுடன் சொந்த இடங்களுக்கு செல்வதை வலியறுத்துவதை நோக்காக கொண்டு வெள்ளிக்கிழமை 29 அமைதியான போராட்டத்தை அறிவித்தபோது காஸா எல்லையில் சயோனிஸ ஆக்கிரபிப்பு இராணுவம் சீனைப்பர்கள் ,டாங்கிகள் சகிதம் பெருமளவில் குவிக்கப்பட்டனர் , ஐநாவினாலும் பலஸ்தீனர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அவர்கள் அதை கோரியதற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

FHDEWRFHJKLMNHJU

GHTFH

HFTRGHH

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2018 இல் 4:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: