Lankamuslim.org

One World One Ummah

கூட்டாட்சி ஒன்றே சாத்தியம் , அமைச்சரவையில் மாற்றம், புதிய அரசியல் அமைப்பு: ஜனாதிபதி

leave a comment »

Parliment 2“அமைச்சரவையில் முழுமையான மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது, சில அமைச்சுகளுக்குக் கீழுள்ள திணைக்களங்களின் தன்மை போன்ற விடயங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பற்றிய முடிவை கட்சியின் உயர்பீடம் கூடியே தீர்மானிக்கும்“ எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

சம்பந்தனுக்கு நன்றி

“சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடியதும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் திருப்தியையும் கருத்திற்கொண்டே தீர்வைக் கோருகிறார் சம்பந்தன். அந்தவகையில் அவரது எதிர்பார்ப்பை வரவேற்கிறோம். அனைவரையும் திருப்திப்படுத்த நினைக்கும் அவருக்கு எமது நன்றிகள்“ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு பற்றி

புதிய அரசமைப்பை எப்போது உருவாக்குவீர்கள் என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். இனிமேல் நாடாளுமன்றம்தான் அதற்குப் பதில் கூறவேண்டும்” என, ஜனாதிபதி பதிலளித்தார்.

கூட்டாட்சி ஒன்றே சாத்தியம்

“நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரதமர் வெற்றிகொண்டதன் பின்னர் தனியாட்சி சாத்தியமா எனக் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடையாது. ஆகையால் கூட்டாட்சி ஒன்றே சாத்தியமானது. எனவேதான், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 7, 2018 இல் 8:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: