Lankamuslim.org

அச்சத்தால் இஸ்லாமிய அகீதாவை இழக்கும் ”முஸ்லிம்கள்” !!

with 7 comments

hgykllஅப்துல்லாஹ்: நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாமிய அகீதாவுக்கும் ஷரீயாவுக்கும் முற்றிலும் முரணான , எதிரான செயல்பாடுகள் நாட்டின் சில பிரதேசங்களில் குறிப்பாக கண்டி ,திகன இனவாத வன்முறை தாக்குதல்களின் பின்னர் கண்டி மாவட்டத்தில் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையான அகீதாவை கேள்விக்குள்ளாக்கும் , அல்லாஹ் எந்தவகையிலும் மன்னிப்பை வழங்க மறுத்துள்ள பெரும் ஷிர்க்கான ,குfப்ரான நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதாக அதிலும் குறிப்பாக ஒரு மஸ்ஜித் ஒன்றிலும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நாட்டில் கடைசியாக இடம்பெற்ற கண்டி ,திகன இனவாத வன்முறை தாக்குதல்களில் பெரிதும் பாதிப்பை எதிர்கொண்ட சமூகமான முஸ்லிம் சமூகம் இருக்கும் இந்தநிலையில் சிலர் சொத்துக்கள் ,மற்றும் உயிர் மீதான அச்ச உணர்வால் பெரிதும் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக நல்லிணக்கம் , சகவாழ்வு ,விட்டுக்கொடுப்பு ,சகிப்புத் தன்மை பொறுமை என்பனவற்றை மிகவும் தவறான முறையில் விளங்கிக்கொண்டு அதன் தவறான பதிப்பை முஸ்லிம் சமூகத்துக்கும் புகுத்த முற்படுவதாக தெரிகிறது .

இந்த நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் , இஸ்லாமிய அறிவு பின்புலம் கொண்ட புத்திஜீவிகள் உலமாக்கள் சமூகத்தை சரியான பாதையில் வழிநடாத்தாமையின் விளைவுகள்தான் இவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இஸ்லாம் அனுமதித்துள்ள நல்லிணக்கம் , சகவாழ்வு என்ற நடைமுறைகளுடன் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற கொள்கையுடன் வாழவேண்டிய தஃவா சமூகம் அல்லாஹ்வை தவிர எல்லாவற்றுக்கும் அஞ்சி அடிபணிந்து செல்லாக் காசாகி இல்லாமல் போகும் ஆபத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பது ஈமானும் ,அறிவும் கொண்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மீதான கடமையாகும் – முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமூகமாக வாழ அல்லாஹ் துணைபுரிவானாக –

وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ‏

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 72:18)

அதேவேளை இஸ்லாமிய தெளிவான அறிவு பின்புலம் இன்றி முஃதிகள் என்ற பெயரில் உலாவரும் சிலர் மதங்களுக்கிடையிலான ஒப்பீட்டு ஆய்வு என்ற பெயரில் ஷிர்கையும் ,குfப்ரையும் கலந்து குழப்பிக்கொள்வதாகவும் அறியமுடிகிறது.

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 3, 2018 இல் 8:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. உனக்கு அடித்தால் பள்ளிக்குள் குனூத் ஓது.
  அடித்து முடிந்ததும் பள்ளிக்குள் பிரித் ஓது.

  இது என்ன மார்க்கம் என்று கேட்டால் கழுதைகள் கற்றுத்தந்த கலப்பட மார்க்கம் என்று துணிந்து சொல், யாரும் நம்பாவிட்டால் உடனே நபிகளார் போதித்த சகவாழ்வு, மத நல்லிணக்கம் என்று அல்லாஹ்வின் தூதர் மீது அவதூறை அள்ளியெறி.

  நீ ஒரு தேசப்பற்றுள்ள முஸ்லிம் என்பார்கள்.

  SalahuDeen

  ஏப்ரல் 3, 2018 at 9:17 பிப

 2. Yah Allah protect the Muslim Ummah from Jahil and evil Ulama

  Shaheed

  ஏப்ரல் 3, 2018 at 9:21 பிப

 3. Prophet mohammed (PBUH) warns about ”Ulamau shoo” – evil Ulama

  Shaheed

  ஏப்ரல் 3, 2018 at 9:22 பிப

 4. சமூகத்தை வழிகெடுக்கும் கொட்ட ,உலமாக்களை அல்லாஹ் வழிபடுத்துவானாக அல்லது அழித்துவிட்டும்

  Imran

  ஏப்ரல் 3, 2018 at 9:28 பிப

 5. சமூகத்திற்கு என்ன நேர்ந்துவிட்டது?!!!

  1. புனித இஸ்லாத்தை கற்பிக்கும் கண்டி-தஸ்கர ஹக்கானியா மத்ரஸாவில் ஹிந்துக்களது பூஜை அரங்கேறுகிறது (கோயிலாக மாறிய மத்ரஸா)

  2. அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதற்காக நிறுவப்பட்ட கண்டி- தென்னங்கும்புர பள்ளிவாயலில் பௌத்த தேரர்கள் B பனை படித்து ஆராதனை செய்கிறார்கள். (பன்ஸலையாக மாறிய பள்ளிவாயல்)

  இஸ்லாத்தின் அடிப்படைகளை உணர்த்தும் அடையாளச் சின்னங்கள் மார்க்கமிழந்து இணைவைப்புக்கு சோரம் போய் வேலி பயிரை மேய்ந்த கதையாகிய பின் இனி யாரை குற்றம் சொல்வது?

  இஸ்லாத்தை வேறுபிரித்துக் காட்டும் ஒரே செயல் “ஒருவனாக அல்லாஹ்வுக்காகவே அனைத்து வணக்க வழிபாடுகளையும் நிறைவேற்றல்” இந்த ஏகத்துவம் இழக்கப்படும் போது முஸ்லிம் என்ற நாமத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை.

  குல்யா அய்யுஹல் காபிரூன் எனும் அத்தியாயம் கூறும் விடயங்களை மறந்து பின்வரும்

  وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ‏ 
  “அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
  (அல்குர்ஆன்: 72:18)

  எனும் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்து மனோஇச்சைக்கு வழிப்பட்டு நடந்திருப்பது உண்மையில் முஸ்லிம்களாகிய அனைவருக்கும் மனவேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது

  தவறுகளை உணர்ந்து தௌபா செய்து திருந்தி இனியாவது சரியாக நடக்க முயலுங்கள்.

  அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.

  اللهم اهد هؤلاء الناس فإنهم لا يعلمون

  It’s
  Azhan Haneefa

  Mufahir .M

  ஏப்ரல் 3, 2018 at 9:33 பிப

 6. Allah protect us from Jahil Ulama

  Azees Nizar

  ஏப்ரல் 3, 2018 at 9:55 பிப

 7. பணம் படைத்த வர்த்தக ஹாஜியார்களை பள்ளி தலைவர்க்களாக ,நிர்வாகிகளாக ஆக்கிக்கொண்டாள் அவர்கள் பள்ளியை பலிக்கடாவாக்கினாலும் தமது சொத்துக்கள் , வியாபார நிலையங்கள் பாதுகாக்கத்தான் உழைப்பார்கள் பள்ளிகளின் நிர்வாகங்களை படித்த அல்லாஹ்வுக்கு மட்டும் பயன்படும் வாலிபர்கள் பொறுப்பெடுக்க வேண்டும்

  Hasan Ali

  ஏப்ரல் 3, 2018 at 10:10 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: