Lankamuslim.org

One World One Ummah

ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதத்தில் பலரும் கையொப்பம்

leave a comment »

hjyuioooஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று காலை சமூக அமைப்புக்களின் ஒன்றிணைவில் கையெழுத்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கையெழுத்து போராட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும், மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய பிள்ளைகள் இருவரும் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோரிக்கை மற்றும் கையெழுத்துக்கள் அடங்கிய கடிதம் ஏற்பாட்டுக் குழுவினரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hjyuiooohuyts

Advertisements

Written by lankamuslim

மார்ச் 24, 2018 இல் 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: