Lankamuslim.org

One World One Ummah

இலங்கை தொடர்பான விவாதம் இன்று ஜெனிவாவில் இடம்பெறுகிறது !!

leave a comment »

husain2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இன்றய விவாதத்தில் இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட இருக்கிறார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே இன்று வெளியிடப்படவிருக்கின்றது.

இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்புரையாற்றவிருக்கின்றார். ஏற்கனவே இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சர்வதேச சமூகம் மாற்று வழிகளை ஆராய வேண்டுமென கேட்டிருந்தார்.

அதன்படி இன்று நடைபெறவுள்ள விவாதத்தில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள செயிட் அல் ஹுசைன் இலங்கை விவகாரம் குறித்து மாற்று வழியை ஆராயுமாறு மீண்டும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை விவாதத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பதை திலக் மாரப்பன தனது உரையில் வெளியிடுவார்.

திலக் மாரப்பனவுடன் அமைச்சர்களான சரத் அமுனுகம, மற்றும் பைஸர் முஸ்தாபா இன்றைய விவாதத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர். மேலும் சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை குறித்த இந்த விவாதத்தில் உரையாற்ற உள்ளனர்.

 

Advertisements

Written by lankamuslim

மார்ச் 21, 2018 இல் 7:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: