இனவாத வன்முறை இதுவரை 470 முறைப்பாடுகள் : பொலிஸ்
கண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், தற்போது விரைவாக முறைப்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் இதுவரையில் 470 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் 446 முறைப்பாடுகள் கண்டி பிரதேசத்திற்குள்ளும், 24 முறைப்பாடுகள் வெளியிடங்களிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாட்களில் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடுகளை முன்வைக்க முன்வரவில்லை. தற்போது அவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துவருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்