Lankamuslim.org

One World One Ummah

வர்த்தக நிலையங்களுக்கு தீவைத்த மூவர் கைது

leave a comment »

arrestகுளியாப்பிட்டி டி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தீவைத்துக்கொளுத்தி சேதம் விளைவித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டி இலுகேஹன,கல்பொல மற்றும் அமுனுவெல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் தேடிவருகின்றனர்.-TM

அதேவேளை நேற்று (11)இரவு தண்துற பிரதேசத்தில் முஸ்லிம் வர்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினம் குரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் ( வர்த்தக சங்கத்தினர் ) குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது .

அதேவேளை கண்டி மாவட்டத்தில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய சேதம் ஏட்படுத்தப்பட்டுள்ளது

Advertisements

Written by lankamuslim

மார்ச் 12, 2018 இல் 5:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: