Lankamuslim.org

One World One Ummah

காத்தான்குடிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுகள் எப்படி வந்துள்ளது தெரியுமா ?

leave a comment »

hytuihjhஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய (ஐ.எஸ்.ஐ.எஸ் என எழுதப்பட்ட ) இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை (07) மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (09) மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை, அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் அடையாளம் காட்டினர்.

மேற்படி நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய மனைவியை அச்சுறுத்துவதற்காகவே, அவ்விரு குண்டுகளையும் அவர் பொருத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விரு வீடுகளிலிருந்து, இரண்டு குண்டுகளுடன் 250 கிராம் வெடி மருந்துகள் பெற்றோல் மற்றும் பெற்றரி வயர் என்பன மீட்கப்பட்டன. அத்துடன், அவ்விரு வீடுகளுக்கும் முன்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ் என எழுதப்பட்ட பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-தமிழ்மிரர்

….

hytuihjh

Advertisements

Written by lankamuslim

மார்ச் 11, 2018 இல் 1:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: