Lankamuslim.org

One World One Ummah

மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது !!

leave a comment »

ghfuiசிறுபான்மையினரால் ஆதரவளிக்கப்பட்ட நல்லாட்சியின் நாயகரான மைத்திரியின் ஆட்சி காலத்தில் சிறுபான்மை மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை சர்வமத தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கையளிப்படவுள்ள மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரத்தை சம்மேளத் தலைவர் எம்.எல். அப்துல்வாஜித் வெளியிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் சகலரும் சகவாழ்வு வாழ்வதற்கு ஒவ்வொரு பிரஜையினது மனித உரிமைகள், மத உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டமும், ஒழுங்கும் இனம், மதம் மற்றும் மொழி பேதம் பார்க்காது சகலரும்  சமம் என்ற கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும்.

குற்றவாளிகளின் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் மகஜரில் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே மைத்திரியின் ஆட்சி காலத்தில் சிறுபான்மை மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ghfui

Advertisements

Written by lankamuslim

மார்ச் 3, 2018 இல் 1:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: