Lankamuslim.org

One World One Ummah

சிரியா மக்களுக்காக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யும் தமிழ் மக்கள்

leave a comment »

hjgyசிரியாவில் இடம்பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டனப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் உட்பட அனைவரினதும் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.

இதில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தையடுத்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித உரிமையை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை வெறும் பார்வையாளர் ஆகி விட்டதா? இனப்படு கொலையை நிறுத்துவதற்கு இதுவரை எதுவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்காதது ஏன்? மனித உரிமைகள் ஆணையகம் வெறும் பெயரளவில் தானா இயங்குகிறது எனும் சந்தேகம் சாமானியர்களுக்கே எழுகிறது.

இனப்படு கொலையை நிறுத்த வல்லமை இல்லாத ஐக்கிய நாடுகள் சபை படுகொலை எண்ணிக்கையை கணக்கிடுவதுடன் மட்டுப்படுத்திக் கொள்கிறீர்களோ? எனும் சந்தேகம் எழுகிறது உலகத்திற்கே மனச்சாட்சி மரணித்து விட்டதா?

இனக் குழுமத்தை பார்க்காமல் அவர்களும் மனிதர்கள் என்று உங்கள் மனவுணர்வை வெளிப்படுத்துங்கள் சதிகார கனவான்களே பர்மா சிரியா என உங்கள் அருகில் நடப்பதை கண்டு கொள்ளாமல் அமெரிக்க ஏகாதிபதியத்திற்கு அடி பணிந்து அமைதி காக்கும் நீங்களா?

முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி பெற்று தருவீர்கள் என நம்பினால் அதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இருக்க முடியாது என்றே தோன்றுகின்றது.

பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை பார்வையாளர்களாக அமைதி காப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நாமும் இனப்படுகொலைக்கு உள்ளான இனம் என்பதால் அதன் வேதனையும் வலியும் புரிகிறது. உலகில் மனித உரிமையை பாதுகாக்க தவறும் நீங்கள் எதற்காக வருடத்திற்கு இரண்டு தடைவை ஒன்று கூடுகிறீர்கள் வெறுமனே அறிக்கையிடும் ஐ.நா சபையாகவே தற்போதுகாணப்படுகிறது என்பதே வேடிக்கையான உண்மை.

தயவு செய்து சிரிய மக்களை காப்பாற்றுங்கள் ஐ.நா. ஒரு தசாப்தத்தில் முள்ளிவாய்க்கால், பர்மா சிரியா என மூன்றாவது தடவையும் தோற்று விட்டதாகவே நாம் கருதுகின்றோம். உங்கள் பொறுப்பற்ற செயற்பாட்டையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிரிய மக்களுக்கு அமைதி மீளவும் திரும்ப வழிவகுப்பதுடன் உண்மையைக் கண்டறிந்து நியாயம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

hjgyhjhuy

Advertisements

Written by lankamuslim

மார்ச் 3, 2018 இல் 11:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: