Lankamuslim.org

One World One Ummah

அம்பாறை தாக்குதல்களும் அறிக்கைகளும் !!

leave a comment »

ampara_cha_mapஅமைப்பாறையில் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா வன்மையாக கண்டித்ததுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாரிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வன்முறையால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் எழும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -DC

முஜிபுர் றஹ்மான்

அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை தேடிப்பிடித்துத் தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ரவூப் ஹக்கீம்

அம்பாறையில் இனவாத வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்து, பிணை வழங்குவதில் இறுக்கமான சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், தாக்குதலுக்குள்ளனான பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையத்தை அரச செலவில் புனரமைப்பதுடன், வாகனங்களுக்கும் உடைமைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (27) அமைச்சரவையில் காரசாரமாகத் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட்

சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிகளை தொடர்புகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஷேட பாதுகாப்பும் வழங்குமாறும், சம்பவத்தின் சூத்திரதாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட்  வலியுறுத்தியுள்ளார்.

 

 

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2018 இல் 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: