Lankamuslim.org

One World One Ummah

அல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் !!

leave a comment »

errஇஸ்லாம் மூன்று வகையான சகோதரத்துவம் பற்றி கொள்கையைக் கொண்டுள்ளது அதில் ஒன்று மனிதர்கள் என்ற வகையில் உலகில் உள்ள அனைவரும் சகோதர்கள் இது ஆதம் அலைஹிஸலம் அவர்களில் மூலம் மனித வர்க்கம் பெருகி பறந்துள்ளது என்பதன் ஊடாக விளங்கிக் கொள்ளும் உலகளாவிய மனித சகோதரத்துவம் இது இறைவனின் படைப்பு முறைமையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நேரடி இரத்த உறவு முறையின் ஊடாக இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் , இது மனிதர்கள் உறவாடுவதன் மூலமாக ஏற்படுத்தப்படும் சகோதரத்துவம் இது இறைவன் உருவாகியுள்ள உறவு முறையின் ஊடாக உருவாக்கப்படுகின்றது.

மூன்றாவது இஸ்லாம் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டுள்ள சகோதரத்துவம் இது இறைவன் முன்வைத்துள்ள சிந்தனைமுறையை அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்படுகின்றது.

இந்த மூன்று சகோதத்துவமும் இஸ்லாத்தில் முக்கியமானவையே ஆனால் கொள்கையடிப்படையில் இஸ்லாம் கட்டமைக்கும் சகோதரத்துவம் மிகவும் உயர்ந்ததாகவும் , தனித்துவமானதாகவும் பலம் கொண்டதாகவும் நிலையானதாகவும் இஸ்லாம் கருதுகிறது,

ஒரு காபீரும் ஒரு முஸ்லிமும் ஒரே விதமாகவே படைக்கப்படுகின்றனர் , அதேபோன்று இரத்த உறவுக்காரர்களும் ஒரு முறையின் படியே உருவாக்கப்படுகின்றார்கள் ஆனால் இறைவனின் கொள்கை இவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக முன்வைக்கப்படுகிறது அதை ஏற்றுக்கொண்டவர்கள்
தனித்துவமான சகோதரத்துவத்தை பெற்றுக்கொள்கின்றார்கள் அதை நிராகரிப்பவர்கள் மற்றுமொரு அணியாக பார்க்கப்படுகின்றார்கள் அல் குர்ஆன் ஓ காபீர்களே என்று மூன்று தடவைகள்தான் அவர்களை பார்த்து விழிக்கின்றது ஆனால் 300 க்கும் அதிகமான முறை காபீர்கள் , காபிரூன் ,கபீரின் என அவர்களின் அறியாமை பற்றி கூறுகின்றது ,

கண்ணியமும் ,உயர்ச்சியும் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு உரியது என அல் குர்ஆன் கூறுகிறது , இக்கொள்கையை ஏற்றுகொண்டவர்களை சகோதரர்கள் என அல் குர்ஆன், பயிற்றுவிக்கின்றது இக்கொள்கைக்கு முன்னாள் எதுவும் எமக்கு சவாலுக்குரியவை அல்ல என இஸ்லாம் அதன் உறுப்பினர்களை பயிற்றுவிக்கின்றது.

ஆக இஸ்லாமிய சகோதரத்துவம் முக்கியத்துவம் பெற்றதாக இருக்க அது கொண்டுள்ள கொள்கைதான் பிரதான காரணமாக இருக்கின்றது , ஷிர்க்கும் சரிதான் , அவர்களின் பாவமும் சரிதான் என கொள்கையை மறந்து விட்டு வாழ்வதை இஸ்லாம் எச்சரிக்கிறது .

அல் குர்ஆன் 300 க்கும் கூடுதலான தடவைகள் குள்( கூறுவீராக) என்ற பிரயோகத்தை பயன்படுத்துகின்றது அதில் 90 வீதம் காபிர்களுக்கு சத்தியத்தை கூறுமாறே கட்டளையிடுகின்றது .

முஸ்லிம் உம்மாவின் சகோதரத்துவ உறவை உடைக்க அல்லது அதன் சகோதரத்துவ எல்லைகளை உடைந்துவிட அதன் தனித்துவத்தை கரைத்துவிட எந்த நாமத்தின் கீழ் அறிந்தும் ,அறியாமலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை நிராகரிக்கப்பட வேண்டியவைகளே .

-எஸ் .எம் மஸாஹிம் (இஸ்லாஹி )

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 26, 2018 இல் 10:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: