Lankamuslim.org

One World One Ummah

ஜெனீவாவில் மனித உரிமை அவை : மார்ச் 16 , 21ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பில் விவாதம்

leave a comment »

Human Rights Councilஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான இரண்டு முக்கிய விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை தொடர்பில் இரண்டு முக்கியமான விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மார்ச் 16 மற்றும் 21ஆம் திகதிகளில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளன. இதன்படி, பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மீது மார்ச் 16ஆம் திகதி விவாதம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து 21ஆம் திகதி, இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒராண்டு நிறைவடைந்துள்ளது. எனினும் பொறுப்பு கூறல் விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு கடும் நெருக்குதல் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து முக்கிய உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது.

Human Rights Council

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2018 இல் 5:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: