Lankamuslim.org

One World One Ummah

ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்ட யூதக் குழந்தைகளும், யூத சமூக நிர்மாணப் பொறியியலும் !!

leave a comment »

hjgஎஸ்.எம் .மஸாஹிம் (இஸ்லாஹி): இஸ்ரேலில் ஆயிரக்கணக்கில் காணாமல் போன அல்லது திட்டமிட்டு இஸ்ரேலிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் யூதக் குழந்தைகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு மீண்டும் எதிர்கொண்டுள்ளது .

பலஸ்தீன பூமியில் சட்டவிரோத இஸ்ரேல் என்ற அரசு உருவாக்கப்பட்டபோது அமெரிக்கா , ஐரோப்பாவை குறிவைத்து யூத இனத்தை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு ”சமூக பொறியியல்” (Social engineering) வேலைத்திட்டங்கள் சயோனிஸ சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் . இத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 8000 வரையான யூத குழந்தைகள் இரகசியமாக சயோனிஸ அரசால் கடத்தப்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் யூத குடும்பங்களிடம் அக்குழந்தைகளை பராமரிக்க ஒப்படைக்கப்பட்டனர் என்ற பலமான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது .

உஸ்மானிய கிலாபத் வீழ்த்தப்பட்டு பலஸ்தீன் பிரித்தானியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாடு சயோனிச சக்திகளினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது இதற்கு முழு உதவிகளையும் பிரிட்டனும் , பிரான்ஸும் இணைந்து செய்து முடிந்தன என்பது வற்றலாற்று உண்மை .

இஸ்ரேல், முஸ்லிம் உம்மாவின் இதயமான பலஸ்தீன பூமியில் உருவாக்கப்பட்ட போது ஐரோப்பா , அமெரிக்கா , ரஷியா நாடுகளில் இருந்தும் யூதர்கள் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டுக்கு விசேட விமானங்களின் ஊடாக கொண்டு வந்து குடியமர்தப்பட்டதை போன்று அரபு நாடுகளான யெமன் , துனீசியா ஈராக் ,மொரோக்கோ நாடுகளில் இருந்தும் யூதர்கள் விசேட விமானங்கள் மூலமாக கொண்டுவரப்பட்டனர் இவற்றில் யெமனில் இருந்து மட்டும் சுமார் 50000 ஆயிரம் அரபு மொழிபேசும் யூதர்கள் கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர் .

ஐரோப்பிய வெள்ளை யூதர்களின் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த வெள்ளை யூத சயோனிஸ சக்தியின் முழு கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேலில் இந்த யெமனிய அரபு பேசும் யூதர்கள் ஒப்பீட்டளவில் கல்வியறிவு குறைந்தவர்களாகவும்,பண்பாட்டிலும் தோற்றத்திலும் அரபு முஸ்லிம் மக்களை ஒத்தவர்களாகவும் சயோனிச தேசியவாதம் எதிர்பார்த்த சயோனிச தேசியவாத தகைமைகள் குறைந்தவர்களாகவும் கிழக்கு ஐரோப்பிய யூதர்களால் தரக்குறைவாக பார்க்கப்பட்டவர்களாகவும் இருந்த அதேவேளை இவர்கள் அதிகமான குழந்தைகளை பெறுபவர்களாகவும் இருந்துள்ளனர் .

இஸ்ரேலின் ஆயிரக்கணக்கான குழைந்தைகள் மர்மமான முறையில் பெற்றோரை விட்டும் பிரிக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் அண்மையில் சுமார் 8000 ஆயிரம் குழந்தைகள் வரை பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளன என்ற தகவல்களும் ,இதை விசாரணை செய்ய ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையும் இந்த குற்றச்சாட்டுக்கு புதிய சக்தியை வழங்கியுள்ளன .

குறிப்பாக 1949- தொடக்கம் 1952 வரையான காலப்பகுதியில் மஸாரின் என அழைக்கப்படும் ஐரோப்பிய பின்புலத்தை சாராத யூதர்களின் குழந்தைகளே குறிப்பாக பெரும்பாலும் யெமனில் இருந்து வந்த யூதத் குடும்பங்களின் குழந்தைகளே கடத்தப்பட்டு அமெரிக்கா ,கனடா ஐரோப்பா வாழ் யூத குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது.

இந்த கடத்தல் சம்பவங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளினால் திட்டமிட்ட முறையில் வைத்தியசாலை மற்றும் நலன்புரி முகாம்களின் அதிகாரிகள் , வைத்தியர்கள் , யூத மத குருமார்கள் , நீதிபதிகள் ஆகியோரின் ஆதரவுடன் குறித்த பெற்றோருக்கு தெரியாமல் கட்டப்பட்டு வேறு ஒரு இரகசிய இடத்தில் பராமரிக்கப்பட்டு மேற்கு நாடுகளின் யூதர்களுக்கு ”ஒரு திட்டத்தின் கீழ் ” வழங்கப்பட்டுள்ளதுடன் குழந்தைகளின் பெற்றோருக்கு அக்குழந்தைகள் இறந்து விட்டதாக பொய் கூறப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர் என பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன .

தமது குழந்தைகளின் மரணம் தொடர்பிலான திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இறந்த குழந்தைகளை அல்லது அதன் கல்லறைகளை பார்க்கவேண்டும் என அழுத்தம் கொடுத்த போது அந்த பெற்றோருக்கு அதிகாரிகளினால் சமாதான வார்த்தைகள் கூறப்பட்டுள்ளதுடன் யூத மதக் தலைவர்களினால் பெற்றோருக்கு ”நாங்கள் நம்பிக்கையாளர்கள்” எதையும் எதிர்கொள்ளவேண்டும் என்றும் வேறு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ” என்ற தகவல்களை சம்மந்தப்பட்ட பெற்றோர் தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் சயோனிச சட்டவிரோத இஸ்ரேலிய நிர்வாகத்தால் திட்டமிட்ட முறையில் ஐரோப்பாவில் சயோனிச யூத சக்தியை அல்லது பொதுவில் யூதர்களை பலப்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப் பட்ட சமூக பொறியியல் (Social engineering) திட்டமாக கருதப்படுகின்றது .

மருத்துவ சிகிச்சை , அல்லது மருத்துவ சோதனை என்ற பெயரில் பெற்றோரை விட்டும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் யூத மத குருமார்களால் பிரிக்கப்பட்ட குழைந்தைகள் பின்னர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் எந்தவகையான மரண சான்றிதழ்களும் அந்த பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என கடத்தப்பட்ட குழந்தைகள் தொடர்பாக ஆய்வு செய்துவரும் பொது நிறுவங்கள் இன்று குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளன.

யூத குழந்தைகளின் கடத்தல் திட்டமிடப்பட்ட சமூக நிர்மாண பொறியியல் வேலைத்திட்டத்தின் (Social engineering ) ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கு வெளியில் இந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, குறித்த குழந்தைகள் ”சயோனிச அரசின்” வருமான நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதாகவும் , யூத அரசாங்கத்தின் பராமரிப்பு சுமையை குறைக்கும் நோக்கில் கடத்தப்பட்டதாகவும் , ஏனைய யூத குழுக்களினால் இவர்கள் வெறுக்கப்பட்டமை காரணம் எனவும் , ஹிட்லரின் யூத இனச் சுத்திகரிப்புக்கு இலக்கான குடும்பங்களுக்கு குழந்தைகளை கடத்தியாவது வழங்குவது யூத மத தலைவர்களானால் ”நம்மை தரும் செயலாக” காட்டப்பட்டமையால் குழந்தைகள் நம்மை கருதி கடத்தப்பட்டதாகவும் பல்வேறு காரணங்கள் ஊகங்களாக முன்வைக்கப்பட்டாலும் , இந்த கடத்தல் சம்பவத்தை அன்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தேடலை மேற்கொள்பவர்களுக்கு இது ஒர் திட்டமிட்ட சயோனிச யூத சமூக பொறியியல் திட்டத்தின் ஒரு அங்கம் என்பதை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பது சில ஆய்வாளர்களின் வாதமாகும் .

அன்று தாம் தொலைத்த குழந்தைகளை சில பெற்றோர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேறு குடும்பங்களில் வாழ்ந்த கடத்தப்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரை தேடி அலைகின்றனர் . சிலர் தமது உண்மையான கடும்பத்தை அடையாளம் கண்டுள்ளனர் பலருக்கு தாம் குழந்தை பருவத்தில் கடத்தப்பட்ட சம்பவம் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பது ” திறக்கமுடியாத இரகசியம் ” என இது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்கும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

அன்று காணாமல் போன சில குழந்தைகளையாவது மரபணு சோதனைகள் மூலம் கண்டுபிடிக்வேண்டும் என்ற அழுத்தம் தற்போது எழுந்துள்ளது. இதை செய்ய நெதன்யாகு நிர்வாகமும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது . ஆனாலும் இந்த குழந்தைகள் காணாமல் போனமை பற்றிய விடயத்தை எத்தனை தடவைகள் ஆய்வுக்கு உட்படுத்தினாலும் 2027 க்கு முன்னர் இது தொடர்பான உண்மை ஒருபோதும் வெளிவராது என இஸ்ரேலிய ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் ”இது இஸ்ரேலின் இருண்ட இரகசியம்” என குறிப்பிடுகின்றனர் .

சில குழந்தைகளின் மருத்துவ சோதனை ஆதாரங்கள்” இஸ்ரேலிய சட்டவிரோத அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன . ஆனாலும் கடந்த காலங்களில் விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பே இடம்பெற்றது இம்முறை வித்தியாசமான ஒரு கண்துடைப்பு அறிக்கை வெளியிடப்படும் ”இஸ்ரேலின் இரகசியம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்”’ என முன்னாள் மொசாத் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்து கவனிக்கதக்கது .

இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளும் அமெரிக்க ,ஐரோப்பிய யூத பெற்றோர்களினால் அந்த நாடுகளில் இல ட்சியதுடன் வளர்க்கப்பட்டர்கள் என்றால் அந்த நாடுகளில் எல்லா துறைகளிலும் செல்வாக்கும் ,அதிகாரமும் செலுத்தும் நபர்களாக மாறிவிட்டனர் என்பதுடன் அவர்களின் அடுத்தடுத்த பரம்பரையும் அதேசெல்வாக்கும் அதிகாரமும் கொண்டவர்களாக எழுத்து நிற்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும் , அரசியல் , பொருளாதாரம் , விஞ்ஞனம் ,இராணுவம், தொழில்நுற்பம் , ஊடகம் என எல்லா துறையிலும் யூத சமூகத்தின் உறுப்பினர்கள் செல்வாக்கு செலுத்துவது அவர்கள் பட்ட அடி அதனால் அவர்களுக்கு ஏற்ப்பட் வலி அதை தொடர்ந்து அவர்கள் உருவாக்கிய திட்டங்கள் என கூறமுடியும் அவர்கள் உலகின் நாசிகளினால் படுமோசமாக ஒடுக்கப்பட்டபோது அடங்கி ஒடுங்கிவிடவில்லை ,தோல்வி மனநிலையில் அடிமைகளாக மாறிவிடவில்லை புதிய திட்டங்களுடன் எழுந்து நின்றார்கள் என்பது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும் .

இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு பலஸ்தீனில் உருவாக்கப்பட்டபோது சில ஆயிரங்களாக இருந்த யூதர்கள் இன்று 8 மில்லியனை எட்டிப்பிடித்து விட்டார்கள் இஸ்ரேலிய முக்கிய நகரங்களில் வாழும் யூதக் குடும்பங்கள் சாதாரணமாக மூன்று குழந்தைக்ளுக்கு அதிகமாகவும் , ஏனைய பகுதிகளில் வாழும் கணிசமான யூதக் குடும்பங்கள் ஏழுக்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்வதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது , உலகின் முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் செறிவான யூத பரம்பலையும் இரண்டாவது இடத்தில் இருந்த ரஷியாவின் யூத பரம்பலையும் டெல்லவியின் யூத பரம்பல் எப்போதோ முந்திவிட்டதுடன் மத்திய கிழக்கில் ஒரு பலமான யூத செரிவாக்கத்தை அதிகாரம் , செல்வாக்கு , நிலம் ,வளம் . இராணுவம், சனத்தொகை ,உற்கட்டமைப்பு , தொழில்நுற்பம் , ஊடகம் என்பனவற்றின் மீது வெற்றிகரமாக கட்டமைத்து விட்டது . யூத சியோனிஸம் எதிர்பார்த்தது போன்று இன்று அரபு முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களை மேற்கின் அடிமையகளாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதுடன் மேற்கை கட்டுப்படுத்தும் சக்தியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டது . அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளும் ,சவூதி , எகிப்து மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் இஸ்ரேலை நோக்கிய நகர்வுகள் இதை தெளிவாக காட்டுகின்றது.

இன்று மத்திய கிழக்கின் ஓவ்வொரு வீடுகளில் மட்டுமல்ல உலகிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அலுவளகங்களிலும் இருக்கும் கணினிகளிள் இருக்கும் ” Intel Inside ” பொறியின் ஆதிக்கம் இஸ்ரேலின் பறந்து விரிந்துவிட்ட செல்வாக்கையும் அதன் ஆதிக்கத்தையும் காட்ட சிறந்த உதாரணமாகும் . அரசியல் துறையில் மட்டுமன்றி தொழில்நுற்ப துறையிலும் அதன் Social engineering வேலைத்திட்டத்தின் அபார வெற்றியை ”Intel Inside” நிரூபித்து நிற்றுகின்றது .

” கடந்த காலத்தை மறந்து விட்டு நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பது யதார்த்தம் பற்றிய ஒரு குறுகலான பார்வையையே தருகிறது அதேபோன்று கடந்தகாலம் பற்றி அறிவூட்டப்படாமல் நிகழ்காலத்தை பற்றி மட்டும் பேசுவது நியாயமற்ற ஏமாற்றுகரமான முடிவையே தரும் ”

hjg

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2018 இல் 7:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: