Lankamuslim.org

One World One Ummah

12 ஐஸ் விதவைகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது

leave a comment »

gh.jpgM.ரிஸ்னி முஹம்மட்: 12 விதவை பெண்களுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது . இவர்கள் ”இஸ்லாமிய தேசம்” அமைப்பின் உறுப்பினர்களான கணவன்மார் ஈராக்கில் கொல்லப்பட்டதன் பின்னர் மவ்சூழ் நகர்களில் இருந்து கைது செய்யப்பட்டு , இவர்கள் மீது தம் கணவர்களுடன் இணைந்து ”இஸ்லாமிய தேசம்” அமைப்பின் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்பட்டடுள்ளது

இவர்களில் 11 பேர் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்களாவர் , துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரண தண்டனையும் ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது . இவர்களில் அதிகமானவர்கள் கைக்குழந்தைகளை கொண்ட இளம் தாய்மார்களாவர்.

இவர்களின் சட்டத்தரணி இவர்கள் குற்றமற்றவர்கள் இவர்கள் எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என வாதிட்டுள்ளார் . இவர்கள் மேல்முறையீடு செய்ய ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .

ஈராக்கில் 509 பெண்கள் தடுப்பு முகாமில் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இவர்களில் 300 பெண்கள் துருக்கி நாட்டவர்கள் . இது தவிர மொத்தமாக 813 சிறுவர் ,சிறுமியரும் இவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .

சதாம் ஹுசைன் ஈராக்கில் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னர் பல அரபு முஸ்லிம் நாடுகளில்போன்று அங்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆதரவு பொம்மைகளே அதிகாரத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

gh

.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2018 இல் 7:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: