Lankamuslim.org

One World One Ummah

அப்ரின் பிராந்தியத்தில் துருக்கியும் – சிரியாவும் நேரடியாக மோதும் களம் திறக்கப்படுகிறது ?

leave a comment »

afM.ரிஸ்னி முஹம்மட்: சிரியாவின் அப்ரின் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஸ் YPG , SDF ஆயுதக் குழுக்கள் மீது துருக்கி இராணுவமும் FSA போராளிகளும் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் . துருக்கி மற்றும் அதன் தோழமை அமைப்பான FSA யினரின் தாக்குதலை எதிர்கொள்ள சிரியாவின் சர்வாதிகாரி பஷார் அல் அசத்தின் அரசுடன் YPG , ,SDF ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் துருக்கி இராணுவ நடவடிக்கைக்கு எதிராக சிரியாவின் அரச படைகள் SDF உடன் களமிறங்கும் என SDF தெரிவித்துள்ளநிலையில் – துருக்கியும் – சிரியாவும் நேரடியாக இராணுவரீதியில் மோதும் ஒரு புதிய அத்தியாயத்தை சிரியா யுத்தத்தில் ஏற்படுத்திவிடலாம் .

துருக்கியின் எல்லையைப் பகுதியான அப்ரின் பிரதேசத்தில் . தற்போது சிரியாவின் அரசப் படைகள் ஏதுமில்லை. தற்போது YPG SDF அமைப்புகள் சிரியா அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தால் துருக்கியை எதிர்கொள்ள அப்ரின் பகுதிக்கு சிரியாவின் அரசுப் படைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அரசுப் படையினர் அப்ரின் பகுதிக்குள் வருவர் என்றும், எல்லைப் பகுதியை ஒட்டி நிலைகளை அவர்கள் அமைப்பார்கள் என்றும் SDF அதிகாரி ஜியா குர்த் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது பற்றி கருத்துரைத்துள்ள துருக்கி ஆப்ரினில் துருக்கியின் இராணுவ நடவடிக்கையை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது என எச்சரித்துள்ளதுடன் இதை எதிர்பார்த்து இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

af

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2018 இல் 10:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: