Lankamuslim.org

One World One Ummah

குர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்

leave a comment »

kkஎஸ்.எம் .மஸாஹிம் (இஸ்லாஹி)-:குர்திஷ்திஸ்தான் -குர்திஷ் சமூகம் , குர்திஷ் இன மக்கள் என்றதும் சிரியா ,துருக்கி ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக் குழுக்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அவர்களின் இராணுவ ,அரசியல் தொல்லைகளும் நினைவுக்கு வரும் , ஆனால் வரலாற்றின் ஊடாக இவர்களை பார்ப்பவர்களுக்கு முதலில் தளபதி சலாஹுதீன் அய்யூபியும் அவருக்கு பக்கபலமாக இருந்த குர்திஷ் வீரர்களின் சாதனையும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது .

உடைந்து தகர்ந்து கிடந்த இஸ்லாமிய உலகை 1095 களில் மீண்டும் ஒருமுறை கம்பீரமாக எழச்செய்தவர் , இஸ்லாத்தின் முதல் கிப்லாவை மேற்கு சிலுவை பறித்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டபோது முஸ்லிம் உலகு தமக்குள் முரண்பட்டு , பகைகொண்டு உடைந்து வீழ்ந்து கிடந்தபோது , முஸ்லிம் உம்மாவை மீண்டும் ஒரு முறை தட்டியெழுப்பி ஒன்றுபடுத்தி இழந்தவற்றை மீட்டெடுத்தவர் அதன் கண்ணியத்தை , பலத்தை , ஒற்றுமையை மீண்டும் ஒரு முறை பாதுகாத்து நிலைநிறுத்தியவர். .

இன்றைய குர்திஷ்திஸ்தான் -குர்திஷ் சமூகம் , குர்திஷ் இன மக்கள், இன்றைய குர்திஷ் ஆயுதக் குழுக்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னர் சற்று பின்சென்று இவர்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வு ஒன்றை பார்த்துவிட்டு வருவோம் :

கி.பி. 636 ஆம் ஆண்டு கலிபா உமர் (ரலி) ஆட்சியில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்குண்டிருந்த ஜெருசலம் உள்ளிட்ட பலஸ்தீனப் நிலப்பரப்பை தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) தலைமையிலான படை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது ஆனால் 450 ஆண்டுகள் கழிவதற்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பகை சகோதர யுத்தம் உச்சகட்டத்தை அடைந்தது 450 ஆண்டுகள் பழிவாங்க காத்திருந்த ரோம பேரரசும், ஐரோப்பிய உலகமும் இந்த சந்தர்ப்பத்தை லாவகமாக பயன்படுத்தி சிலுவைப் போரை பிரகடனப்படுத்தி முஸ்லிம் உம்மாவுக்கு பேரழிவை ஏற்படுத்தி தமது 450 ஆண்டுகால பழியை தீர்த்து இஸ்லாத்தின் முதல் கிப்லாவை ,ஜெருசலத்தை கைப்பற்றி சிதைந்து பகைகொண்டு நோயுற்று கிடந்த முஸ்லிம் உம்மாவுக்கு மேலும் மேலும் இழப்புக்களைக் கொடுத்தது .

ஆனால் , தளபதி சலாஹுத்தீன் அய்யூபியின் இராணுவ , மற்றும் அரசியல் நுழைவு 1187 ஆண்டு இஸ்லாத்தின் முதல் கிப்லாவை, பலஸ்தீனை மீண்டும் முஸ்லிம்களின் கைக்கு கொண்டுவந்து சேர்த்து. தளபதி சலாஹுத்தீன் அய்யூபியின் வெற்றி சாதனைகளுக்கு பின்னால் பலமான அரணாக இருதவர்களில் இந்த குர்திஷ் இன மக்கள் முக்கியமானவர்கள் . பிறப்பிலேயே போர் வீரர்கள் என வர்ணிக்கப்படும் இந்த குர்திஷ் சமூகத்தை சார்ந்தவர்தான் சலாஹுத்தீன் அய்யூபியும். .

குர்திஷ் இன மக்களின் : இஸ்லாம் என்ற அடையாள உடைப்பு

குர்திஷ் மக்கள் ஒரு தனித்துவமான 25 நூற்­றாண்டு வர­லாறு, கலா­சாரம், நிலப்­ப­ரப்பு, மொழி, சமயம் என்ற அடையாளங்களை கொண்டிருந்த சமூகம் . 7ஆம் நூற்­றாண்டில் மத்­திய கிழக்கில் அரபும், இஸ்­லா­மும் செல்வாக்கு செலுத்தமுன்னார் இவர்கள் பிரதான அடையாளத்துடன் சுதந்திரமாக வாழ்ந்து வந்தவர்கள் என அடையாளப்படுத்தபடுகின்றனர் .

”குர்திஷ்கள் பேசுகின்ற மொழி, குர்திஷ் மொழி எனப் பொதுவில் அழைக்கப்பட்டாலும், இவர்கள் பல்வேறுபட்ட மொழி வழக்குகளை உடைய மொழிகளைப் பேசுகிறார்கள். இதில் குறிப்பாக, வடக்கு குர்திஷ் என அறியப்படும் ‘குர்மன்சி’, மத்திய குர்திஷ் என அறியப்படும் ‘சொரானி’, தெற்கு குர்திஷ் என அறியப்படும் ‘பலேவானி’ என்பன முக்கியமானவை.”

ஆயுதக் குழுக்கள் தங்களது பூர்வீக நாடாகக் கொண்டாடும் குர்திஷ்தான் தென்கிழக்குத் துருக்கி (வடக்கு குர்திஷ்தான்), வடக்கு ஈராக் (தெற்கு குர்திஷ்தான்), வடமேற்கு ஈரான் (கிழக்கு குர்திஷ்தான்) மற்றும் வடக்கு சிரியா (ரொஜாவா அல்லது மேற்கு குர்திஷ்தான்) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.இன்று உலகில் , 28 மில்லியன் குர்திஷ்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கணிசமானவர்கள் உலகின் பலநாடுகளில் புலம்பெயர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்விடங்கள் , சிரியா ,துருக்கி ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகளில் முழுமையாக கரடுமுரடான மலை பகுதிகளிலேயே அமைத்துள்ளது இவரக்ளின் இருப்பிடங்கள் பிரதான நகரங்களில் இருந்து தூரமான மலைப்பாங்கான பகுதிகள் என்பதால் மற்ற இஸ்லாமிய சமூகங்கடனான இவர்களின் தொடர்பாடல் ,உறவு என்பனவும் சற்று பின்தங்கியிருந்துள்ளது . முதலாம் உலக யுத்தத்தின் பின்னரான உஸ்மானிய கிலாபத் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் உம்மா துண்டாடப்பட்டது குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்­திய கிழக்கை ‘’ the Sykes-Picot உடன்­ப­டிக்­கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்­டன. இந்த மேற்கு நாடுகளினால் துண்டாடப்பட்ட முஸ்லிம் தேசங்களின் மேற்கின் முகவர்கள் நியமிக்கப்பட்டனர் சர்வாதிகாரிகளாக செயல்பட்ட இவர்கள் குர்திஷ் மக்களை தனது முகவர்கள் மூலம் மேற்கு நலன்சார் தேவைகளுக்கும் ,தமது தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டதுடன் குர்திஸ் மக்களின் நலனை புறக்கணித்த வந்துள்ளனர் , இதன் காரணமாக அரபு -குர்திஷ் வேறுபாடுகள் போஷிக்கப்பட்டுள்ளது . குர்திஷ் மக்கள் மிக மோச­மாக நடத்­தப்­பட்­டது ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்­சியின் போதே. அதிகமான குர்திஷ் மக்கள் கொல்­லப்­பட்­டனர். இதேபோன்று துருகியில் ஜனாதிபதி எர்துவான் அரசாங்கத்துக்கு முன்னர் சர்வாதிகாரிகளாக இருந்த அதிபர்களால் ஒடுக்குமுறை மற்றும் புறக்கணிப்பை எதிர்கொண்டனர் . பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட மக்கள் தமது உரிமைகளை மீட்கவும் தமது கலாசாரபாரம்பரியங்களை பாதுகாக்கவும் தூண்டப்பட்டனர் .

இந்த பின்புலத்தில் கடந்த நூற்றாட்டின் இறுதிப் பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட கம்யூனிச ,சோஷலிச சிந்தனை கொண்ட அமைப்புக்களின் செறிவான அதிகாரத்துக்கு இந்த மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குர்திஷ் மக்களின் பிரதான இஸ்லாமிய அடையாளத்தை சிதைத்து மதசார்பற்ற சிந்தனையுடன் , தேசியவாதம் ,இனவாதம் , மொழிவாதம் என்பற்றை தமது முதல் பெரும் அடையாள அடுக்காக காட்டிவந்துள்ளதுடன் அந்த மக்களின் இஸ்லாம் என்ற முதல் பெரும் அடையாளத்தை பின்னுக்கு தள்ளியுள்ளனர். இந்த கம்யூனிச சிந்தாந்தம் கொண்ட இந்த அமைப்புக்கள் மஸ்ஜித்துக்கள் ,மதரஸாக்கள் என்பனவற்றை பல பகுதிகள் பலவந்தமாக இழுத்துமூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குர்திஸ் மக்களை பாதுகாக்க வந்ததாக கூறும் இந்த அமைப்புக்கள் இந்த மக்களை கடுமையாக ஒடுக்கி இந்த மக்களுக்கு எதிராகவும் அடக்கு முறைகளை மேற்கொண்டதாக வரலாற்று பதிவுகள் காணப்படுகின்றது. .

துருக்கி ஜனாதிபதி ஏர்துவான் PKK –(The Kurdistan Workers’ Party), PYD- (Democratic Union Party), YPG-(People’s Protection Units) ஆகிய குர்திஷ் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் குற்றசாட்டுகளை இப்படி பதிவு செய்துள்ளார் -“இந்த அமைப்புக்கள் பிராந்தியத்தில் எங்கள் குழந்தைகளின் பாடசாலைகள் மற்றும் மஸ்ஜித்துக்களுடனான உறவுகளை துண்டித்து , அச்சிறுவர்களை தங்களின் சித்தாந்தத்துக்கு அடிமைகளாகவும் , சேவகர்களாகவும் , ரோபோக்களாகவும் , மாற்றிவிடுவதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளார்கள்” .

PKK –(The Kurdistan Workers’ Party), PYD- (Democratic Union Party), YPG-(People’s Protection Units) அமைப்புக்கள் மட்டுமல்லாமல் அதன் கிளை அமைப்புக்களான SDF –(The Syrian Democratic Forces) போன்ற அமைப்புக்களும் இது போன்ற குற்றசாட்டுகளை எதிர்கொள்கின்றன .

ஈராக்கில் ஸுன்னி முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, ஷியா முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, குர்­திஷ்­க­ளுக்கு என ஒரு அரசு என மூன்­றாகப் பிளவு படும் ஆபத்து இப்­போது அதி­க­ரித்­துள்­ளது போன்று சிரியாவிலும் ஸுன்னி முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, ஷியா முஸ்­லிம்­க­ளுக்கு என ஒரு அரசு, குர்­திஷ்­க­ளுக்கு என ஒரு அரசு என்ற ஆபத்தை எதிர்கொட்டுள்ளது சூடானை வடக்கு , தெற்கு என பிரித்தது போன்று யெமனை இரண்டாக பிரிக்க துடிப்பது போன்று துருக்கியையும் இரண்டாக உடைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றது .

ஈராக்கிய குர்திஷ்தான், பொதுசன வாக்கெடுப்பை அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த ஒரே நாடு இஸ்ரேல். சில குர்திஷ் தேசியவாதிகள், “குர்திஷ்தான் இரண்டாவது இஸ்ரேல்” எனப் பெருமையுடன் அறிவிக்கிறார்கள். உஸ்மானிய கிலாபத்தை வீழ்த்த அரபு தேசியவாதத்துடன் குர்திஷ் தேசியவாத மம் அப்போது பயன்படுத்தப்ப்பட்டது பின்னர் உஸ்மானிய கிலாபத்தை வீழ்ச்சிக்கும் இதுவும் காரணமாகியது எனவும் பதிவுசெய்ப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்குரிய சக்தியாக SDF-(The Syrian Democratic Forces) யின் பிரதான பகுதி உருவாக்கப்பட்டுள்ளது . PYD- (Democratic Union Party), மற்றும் SDF ஆகிய அமைப்புக்களை துருக்கி பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளது. PYD மற்றும் SDF ஆகியன PKK –(The Kurdistan Workers’ Party), யின் கிளைகள் என துருக்கி கருதுகின்றது . அதேவேளை அமெரிக்கா PYD ரஷ்யாவின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதில் அவதானமாக உள்ளது , இஸ்ரேல் PYD க்கான அமெரிக்கா உதவுவதை வரவேற்கிறது ,ஈரான் PYD , SDF சிரியாவில் சுயாட்சி கோரினாலும் அவற்றை தற்போது ஆதரிக்கும் நிலையிலேயே உள்ளது

வடக்கு சிரியாவின் அப்ரின் நகரில் துருக்கி ஆரம்பித்துள்ள Operation Olive Branch இராணுவ நடவடிக்கைக்கு FSA (Free Syrian Army) துருக்கியினால் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு காரணங்கள், விமர்சங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை ஒரு புறமிருக்க . குர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களது அரசியல் மற்றும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளுக்குமிடையிலான வேறுபாட்டை இஸ்லாமிய உலகம் சரியாக இங்கண்டு செயல்படுமாக இருந்தால் குர்திஷ் சமூகம் முஸ்லிம் உம்மாவின் உடைக்க முடியாத அரணாக மாறும்.

kk

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2018 இல் 9:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: