Lankamuslim.org

One World One Ummah

ஈரான் விமான விபத்து 66 பேர் உயிரிழந்துள்ளனர்

leave a comment »

artஈரான் :60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று ஈரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.இஸ்பஹான் மாகாணத்தில் செமிரொம் நகரத்துக்கு அருகே உள்ள சக்ரோஸ் மலைகளில் இந்த விமானம் மோதியது.

“அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக” அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR 72-500 விமானம் என நம்பப்படுகிறது.

விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுனர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுனர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரான குளிவந்த் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரானில் பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. அந்நாட்டிலுள்ள பல விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் வாங்கப்பட்டவையாக உள்ளது என BBC கூறுகிறது .

art

 

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2018 இல் 7:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: