Lankamuslim.org

One World One Ummah

நாட்டின் நீதி, அதன் சட்ட ஆட்சி நடைமுறையில் இருக்கிறதா ?

with one comment

parliament-sri-lanka-interiorநாட்டின் சமாதானம் – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில்  வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்

இதற்கு மறுப்பளித்து உரையாற்றி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் . இதனால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது

ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உரையாற்றியுள்ளார். அவ்வாறாயின் இந்த கலந்துரையாடலில் என்ன பயன். ஆகவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நீங்கள் நீதி அமைச்சர் இதனைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்என தெரிவித்துள்ளார்

நாட்டில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்று போதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் பொதுபலசேனா அமைப்­பி­னரின் சட்­டத்­திற்கு முர­ணான செயற்­பா­டு­களை தட்டிக்கேட்­ப­தற்கோ, தடுத்து நிறுத்­து­வ­தற்கோ அந்த அமைப்­பிற்கு எதி­ராக சட்டங்களை அமுல் படுத்­து­வ­தற்கோ இன்று வரை   தயக்கம் காட்­டப்­ப­டு­கின்­ற­மையே அவதானிக்க  முடி­கி­ன்றது.

அல்லாஹ்வையும் ,இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் மோசமாக தூற்றிவரும் ஞானசாரார் போன்றவர்கள் கைது செய்யாது விட்டுவைக்கப்படுகின்றமை நாட்டின் நீதியில் அதன் சட்ட ஆட்சியில் நம்பிக்கையை  இழக்கசெய்து வருகின்றது,

நாடு எதிர்கொள்ளும் இந்த மோசமான சூழலில் நாட்டின் நீதி அமைச்சும்  , புத்தசாசன அமைச்சும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை   எந்தவகையிலும் எற்புடையதாக இல்லை என்பதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன .—- நீதி எங்கே ?

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 8, 2016 இல் 10:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சட்டம் பக்கச் சார்பாக இருக்கின்றது

    அப்துல் கலீல்

    திசெம்பர் 9, 2016 at 1:24 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: