Lankamuslim.org

One World One Ummah

நாட்டில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்று போதிக்­கப்­ப­டு­கி­றது ஆனால்…

leave a comment »

mujeeb rahmanபாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்:சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தி வன்­மு­றையைத் தூண்டும் வகையில் செயற்­படும் பொதுபல­சேனா அமைப்பின் செய­லாளர் கலகொடஅத்தே ஞான­சார தேர­ரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும் கைது செய்­வ­தற்கு அர­சாங்கம் அவ­சர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஆரம்­ப­மான பொது­ப­ல­சேனா அமைப்பு, முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான மிக மோச­மான வன்­மு­றை­களை அரங்­கேற்­றி­யது. மஹிந்த அரசு பொது­ப­ல­சே­னாவின் இந்த மோச­மான செயற்­பாட்டை மௌன­மாகப் பார்த்துக்கொண்­டி­ருந்­தது மட்­டு­மல்­லாமல் அவர்­களின் இன­வாத வன்­முறை செயற்பாட்­டுக்கு மறை­மு­க­மாக அங்­கீ­கா­ரத்­தையும் வழங்­கி­யது.

முஸ்­லிம்­க­ளுக்கு பலத்த சேதங்­க­ளையும், அழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அளுத்­கம, பேரு­வளை கல­வ­ரங்­க­ளுக்கு காரண கர்த்­தா­வா­கிய ஞான­சார தேரர்­மீது அப்­போ­தைய மஹிந்த அரசு எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. கைது செய்யப்படுவ­தற்­கான தகுந்த ஆதா­ரங்கள் இருந்தும், ஞான­சார தேரர் அன்று கைது செய்­யப்­ப­ட­வு­மில்லை. இன்று கூட ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல முறைப்­பா­டுகள் பொலிஸில் பதி­யப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இது­வரை அவ­ருக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையையும் பொலிஸார் மேற்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

நாட்டில் சட்டம் சக­ல­ருக்கும் சமம் என்று போதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் பொதுபலசேனா அமைப்­பி­னரின் சட்­டத்­திற்கு முர­ணான செயற்­பா­டு­களை தட்டிக்கேட்­ப­தற்கோ, தடுத்து நிறுத்­து­வ­தற்கோ அந்த அமைப்­பிற்கு எதி­ராக சட்டங்களை அமுல் படுத்­து­வ­தற்கோ இன்றும் கூட தயக்கம் காட்­டப்­ப­டு­கின்­ற­மையே உணர முடி­கி­றது.

பௌத்த பிக்­குகள் என்ற ஒரே கார­ணத்­திற்­காக இவர்­களின் அட்­ட­கா­சங்­களை பொலிஸார் பார்த்­துக்­கொண்டு பாரா­மு­கமாய் இருக்­கின்­றனர். பொலி­ஸாரின் பொடுபோக்­குத்­த­ன­மான இந்த செயற்­பாடு, சட்­டத்தின் நம்­ப­கத்­தன்மை நாளுக்கு நாள் நலி­வ­டைந்து வரு­வ­தையே எடுத்­துக்­காட்­டு­கி­றது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்து கொள்ளும் பௌத்த பிக்கு மாண­வர்கள் பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆனால் இன­வாத ரீதியில் செயற்­படும் பௌத்த பிக்­கு­களை பொலிஸார் ஒரு போதும் தாக்­கவோ கைது செய்­யவோ முற்­ப­டு­வ­தில்லை.

சிறு­பான்மை மக்­களை சீண்டும் தனது இன­வாத சேட்­டையை ஞான­சார தேர­ரோடு இணைந்து மட்­டக்­க­ளப்பு அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரரும் ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். ஞான­சார தேரர் இஸ்லாம் தொடர்­பா­கவும், முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும், இஸ்­லா­மிய நம்­பிக்­கைகள் தொடர்­பா­கவும் மிக மோச­மான வெறுக்­கத்­தக்க கருத்­துக்­களை வெளியிட்டு வரு­கிறார். இந்த விஷ­மத்­த­ன­மான கருத்­துகள் மூலம் இன­மு­றுகல் ஒன்றுக்கு தூப­மிட்டும் வரு­கிறார்.

நீதி­மன்­றத்­திற்கும், சட்­டத்­துக்கும் கட்­டுப்­ப­டாத இவரின் மோச­மான செயற்­பாடு இந்த நாட்டை மீண்டும் இன­வாத வன்­முறை என்ற அழிவுப் படு­கு­ழிக்குள் தள்ளப்போகிறது.ஞான­சார தேரரும் அவ­ரோடு இயங்கும் தீவிர இன­வாத குழு­வி­னரும் மட்­டக்­க­ளப்­புக்கு ஊர்­வ­ல­மாக செல்­வதை தடுத்து, நீதி­மன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. சட்­டத்தை துச்­ச­மாக மதித்து செயற்­படும் ஞான­சார தேரர், நீதி­மன்ற கட்­ட­ளையை அவ­ம­தித்­தது மட்­டு­மல்­லாமல் பொலிஸார் முன்­னி­லையில் நீதி­மன்ற ஆணையைக் கிழித்­தெ­றிந்து சட்­டத்தை அவ­ம­திக்கும் செயலை பகி­ரங்­க­மா­கவே செய்­துள்ளார்.

பொலிஸார் இதற்­காக எந்த நட­வ­டிக்­கை­யையும் இது­வரை மேற்­கொள்­ள­வில்லை.

கடந்த தேர்­தலில் நாட்டை சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்தின் பால் இட்­டுச்­செல்­வ­தற்­கான நல்­லாட்­சியின் வாக்­கு­று­தியை சீர்­கு­லைக்கும் வகை­யி­லேயே ஞான­சா­ர­தே­ரரின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

இன­வா­தத்தை தோற்­க­டிக்கும் நோக்கில் உரு­வான நல்­லாட்­சிக்குக் கிடைத்த வெற்­றியை கேள்விக் குறி­யாக்கும் இன­வா­தி­களின் இந்த நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மௌன­மாக பார்த்­துக்­கொண்­டி­ருக்கக் கூடாது. குற்றம் இழைப்­ப­வர்­களை கைது செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு ஜனா­தி­ப­தி­யி­னதோ பிர­த­ம­ரி­னதோ அல்­லது பொலிஸ் மாஅ­தி­ப­ரி­னதோ அனு­மதி தேவை­யில்லை.

இன­வா­திகள் இழைக்கும் குற்­றங்கள் தொடர்­பாக காவல்­து­றை­யினர் அச­மந்­த­மாக செயற்­ப­டு­வது தொடர்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சட்­டங்­க­ளுக்­கோ, நீதி நியா­யங்­க­ளுக்கோ கட்­டுப்­ப­டாமல், இனங்­க­ளுக்­கி­டையே வன்­மு­றையைத் தூண்டி வரும் ஞான­சார தேர­ரையும் அவ­ரோடு இயங்கும் இன­வாத குழுக்­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்ட அர­சாங்கம் முன்­வர வேண்டும்.

குற்றம் இழைப்­ப­வர்கள் யாரா­கினும் அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்­டனை வழங்க வேண்டும். சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக எடுக்க வேண்டும் என்றும் முஜிபுர் றஹ்மான் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 7, 2016 இல் 7:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: