Lankamuslim.org

One World One Ummah

நீதியமைச்சரின் நடுநிலைத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அவரின் கருத்துக்கள்

with one comment

vijaiபாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நீதியமைச்சரும், பௌத்த  சாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ   உரையாற்றியுள்ள உரை பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த   கடும்போக்கு அமைப்புக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை முஸ்லிம்களுக்கு அதிர்ப்தியையும் சந்தேகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது .

சட்டத்தை பாகுபாடின்றி செயற்படுத்த வேண்டும், அரசியலில் குதிக்கும் நோக்கத்துடன் சில பிக்குமார் இனவாதத்தை தூண்டி பௌத்த மக்களை கவர முயல்வதோடு, முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான மோதல் காரணமாக உள்ளக பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறி வருகிறது என   தனது கருத்தை வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ தனது பேச்சின் இறுதியில் இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்துவது போன்று  ஐ.எஸ் அமைப்புக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் முடிச்சு போட்டிருப்பது விபரீதமான செயலாகும்.

அதேவேளை தௌஹீத் ஜமாஅத், தப்லீக்ஜமாஅத், சுன்னத் வல்ஜமஅத்,   ஜமாஅதே இஸ்லாமி  என பெயர் குறிப்பிட்டு அவற்றுக்கு தீவிரவன்முறைகளுடன் தொடர்பு படுத்துவது போன்று கருத்து வெளியிட்ட   நீதியமைச்சர்,  பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய ,சிங்கலே போன்ற தீவிர மற்றும் கடும்போக்கு அமைப்புக்கள் பற்றி எதையும் தெரிவிக்காது தவிர்ந்து கொண்டமை அவரின் நடுநிலைத் தன்மை தொடர்பில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தரும் அடிப்படைவாதிகள் முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களை மூளைச்சலவை செய்வதாக யூகங்களின் அடிப்படையில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த தகவல்கள் நாட்டின்  எந்த  அரச அதிகாரபூர்வ துறையினாலும், மன்றங்களினாலும் இதற்கு முன்னர் நிரூபிக்கப்படாத நிராகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு  இனவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்ற தருணத்தில், இந்த இனவாத செயற்பாடுகளை விமர்சித்து அதற்கெதிராக சட்டத்தை பாகுபாடின்றி செயற்படுத்த வேண்டும் என்ற தொனியில் அதேவேளை பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்துவிட்டு முஸ்லிம், தமிழ் மக்கள் சிலைகளை உடைப்பதாக குற்றஞ்சாட்டி பிரச்சினை உருவாக்க முயற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டு இன்று முதல் இனவாதத்திற்கோ மத அடிப்படைவாதத்திற்கோ இடமில்லை எனவும் தெரிவித்தமை வரவேற்கப்படவேண்டிய மகிழ்ச்சியான விடயம் என்றாலும்  உரையின் இறுதியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் விபரீதமான கருத்துக்களாகும். பௌத்த சிங்க கடும்போக்கு அமைப்புக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை உண்மை என்று உறுதிப்படுவதுவதாக அமைந்துள்ளதுடன் பௌத்த சிங்க கடும்போக்கு அமைப்புக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 20, 2016 இல் 3:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பாட்டலிய சம்பிக்க ரணவக்க வின் நிகழ்ச்சி நிரல் அரச அனுசரணையுடன் கனகச்சிதமாக நிறைவெறுக்கின்றது .நாட்டில் உள்ள மதரஸாக்களை மூடுதல், மற்றும் சிலதை அரச கண்காணிப்பின் கீழ் கொண்டு வருதல் , நாட்டில் செயட்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்தல் ,முக்கிய நகரங்களில் உள்ள முஸ்லிம் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏட்படுத்தி அவ்விடத்தை சிங்கள வியாபாரிகள் ஆக்கிரமித்தல் இவ்வனைத்தும் அரச அனுசரணையுடன் சம்பிக்க செய்து முடிப்பார் .இது உயிர் சேதம் இல்லாமல் வெறுமனே பயமுறுத்தல் ,மற்றும் சட்ட ரீதியிலான அடக்குமுறையில் அமையும் .

    மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது சகபாடிகள் புத்த தீவிரவாதிகளையும் ,ஓய்வு பெற்ற மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற கோட்டபாய வின் கையாட்களை வைத்து நிறைய தீவைப்புகள் ,நேற்று கல்ஹின்னையில் நடந்து போன்ற மர்ம கொலை, கொள்ளைகளை நடாத்தி நல்லாட்சியிலும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை என்று கோசம் எழுப்பி முஸ்லீம்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குதல்.

    எனவெ சூழ்ச்சியாளனுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்று கூறிக்கொண்டு இருந்து விடாமல் கூடுதல் சமயோசித அறிவுடனும் ,புத்தி சாதுரியமாகவும் ,சுயநலம் இல்லாமலும் ,இறையச்சத்தோடு செயட்படுவோமாயின் எதிரியின் செயட்திட்டம் நிறவெராது போகலாம் இன்ஷா அல்லாஹ்

    Razik

    நவம்பர் 20, 2016 at 6:56 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: