Lankamuslim.org

One World One Ummah

எல்லை மீள் நிர்­ண­ய குறைபாடுகள் களையப்படுமா ?

leave a comment »

lankaஉள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை மீள் நிர்­ண­யங்­களில் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதற்கு முன்னதாக பரிந்துரை செய்யப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் நிராகரித்திருந்தன.

எதிர்வரும் 15ம் திகதி அளவில் எல்லை நிர்ணய இறுதி அறிக்கை தமக்குக் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் சர்வகட்சி மாநாடு நடத்தும் திகதி பற்றி தீர்மானிக்கப்படும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை மீள் நிர்­ண­யங்­களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்­லிம்­களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் எல்லை நிர்­ண­யங்கள் வகுக்கப்பட்டுள்ள­தா­கவும் குற்றம் சுமத்­தி­யுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் முறை­யற்ற எல்லை நிர்­ண­யங்­களை மீள்­நிர்­ணயம் செய்­யு­மாறு எல்லை நிர்­ணய முறை­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலைவர் அசோக பீரி­ஸிடம் வேண்­டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது

நிலத்­தொ­டர்பு, சனத்­தொகை, இன­வி­கி­தா­சாரம் என்­பன கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது ஒரு சமூ­கத்தின் நலன் கருதி உள்­ளூ­ராட்சி மன்ற வட்­டார எல்­லைகள் வகுக்கப்பட்டுள்­ளதால் முஸ்­லிம்கள் தமது பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் ஹக்கீம் சுட்­டிக்­காட்­டியிருந்தார்

திரு­கோ­ண­மலை, கம்­பஹா, புத்­தளம் மற்றும் கண்டி மாவட்­டங்­களில் மேற்கொள்ளப்பட்­டுள்ள எல்லை நிர்­ண­யங்கள் மூலம் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­பட்டுள்­ள­தா­கவும் எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவின் தலைவர் அசோக பீரி­ஸிடம் தெளி­வு­ப­டுத்­தி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

புத்­தளம் மாவட்­டத்தில் புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தே­ச­சபை, கற்­பிட்டி பிரதேசசபை, ஆராய்ச்­சிக்­கட்டு பிர­தேச சபை, வண்­ணாத்­தி­வில்லு பிர­தே­ச­சபை, சிலாபம் நக­ர­சபை, சிலாபம் பிர­தே­ச­சபை, நாத்­தாண்­டியா பிர­தே­ச­சபை என்பவற்றினதும் கண்டி மாவட்­டத்தில் அக்­கு­றணை பிர­தே­ச­சபை, பாத்தஹேவஹட்டை பிர­தே­ச­சபை, பாத்­த­தும்­பறை பிர­தே­ச­சபை என்­ப­வற்­றி­னதும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூதூர், கந்­தளாய் மற்றும் கல்­பிட்டி பிர­தேச சபையினதும் எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்­ள­தா­கவும் இந்த பிர­தேச சபை­களின் எல்­லைகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்சர் அசோக பீரி­ஸிடம் வேண்­டுகோள் விடுத்திருந்தார் .

அக்­கு­றணை பிர­தேச சபையின் வட்­டார எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­மையையும் விளக்­கினார். முஸ்­லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்­கு­றணை பிர­தேச சபைக்கு 11 முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளும் வகையில் வட்­டார எல்­லைகள் நிர்­ணயம் செய்யப்­ப­டு­வ­தாக உறுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் தற்­போது 9 முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமையும் வகையில் எல்­லைகள் வகுக்­கப்­பட்­டுள்­ளமை முறையற்றது எனவும் விளக்­கி இருந்தார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2016 இல் 9:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: