Lankamuslim.org

One World One Ummah

மாகாண அதிகாரப் பிரச்சினை: மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை ஓர் முன்மொழிவு

leave a comment »

s-m-mazahimஎஸ்.எம் .மஸாஹிம் (இஸ்லாஹி)
புதிய அரசியலமைப்பு வரைபு இடம்பெற்றுவரும் நிலையில் மாகாணங்களுக்குறிய அதிகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது , 1980 களில் நாட்டின் (தமிழர் -சிங்களவர்) இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை கருத்தில்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது ஆனால் இது உன்மையில் முஸ்லிம்களை மட்டுமல்ல வடக்கு ,கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களையும் கூட கவனத்தில் கொள்ளவில்லை, வடக்கு ,கிழக்கில் முஸ்லிம்களை கவனத்தில் கொள்ளாது அங்கு வாழும் தமிழர்களின் இனப்பிரச்சினையை மட்டும் கவனத்தில் கொண்டு மாகாண சபை நிர்வாக முறை தீர்வாக முன்வைக்கப்பட்டாலும் இது முழு நாட்டையுமே ஒன்பது மாகாண நிர்வாகங்களாக பிரித்தது அதிகாரங்களை எல்லா மாகாணங்ளுக்கும் வழங்கியுள்ளது .

ஆனால் தற்போது மாகாண சபை முறையில் முன்மொழியப்பட்டு வழங்கப்படாது இருந்த பொலிஸ் ,காணி அதிகாரங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்படும் நிலையில் மாகாண சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பில் பொதுவில் ஐய்யம் கொள்ளவேண்டியுள்ளது , இங்கு மாகாண சிறுபான்மையினர் என்று கூறும்போது அது சிங்களவர்கள் ,தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பினரையும் உள்ளடக்குவதாக உள்ளது .அதாவது வடக்கு கிழக்கில் ,சிங்களவர் சிறுபான்மையாகவும் ,வடக்கில் முஸ்லிம்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களும் ,தமிழர்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு ,கிழக்கு பிரதேசத்தில் வடக்கு மற்றும் கிழக்கு சபைகள் பிரிந்திருக்கும் இன்றைய நிலையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பெரும்பாலான தமிழ் பேசும் மக்களினால் அவசியமானதாக கொள்ளப்பட்டாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் நிபந்தனைகளுடன் ஒன்றாக இணையும் சூழல் ஏட்பட்டால் ? இணைந்த மாகாண சபையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாறும் நிலையில் பொலிஸ் ,காணி அதிகாரங்கள் தொடர்பாக ஐய்யம் எழுவது நியாயமானது அதேவேளை நாட்டின் அதிகாரம் கொண்ட பெரும்பான்மையாக இருந்தாலும் கிழக்கில் வாழும் சிங்களவர்களும் கூட மாகாணத்தின் சிறுபான்மை என்ற வகையில் இது பற்றி ஐய்யப்படலாம் .

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை அங்கு வாழும் முஸ்லிம்கள் வடக்கு -கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருந்தாலும் அல்லது இணைத்திருந்தாலும் பொலிஸ் , காணி அதிகாரங்கள் குறிப்பாக பொலிஸ் அதிகாரம் தொடர்பில் ஐய்யம் கொண்டுள்ளனர் .

இதேவேளை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் , நாட்டில்பேரினவாத தீய சக்திகள் பல எழுச்சி பெற்றுவரும் இந்த காலப்பகுதியில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஏனைய 7 மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்களும் ,தமிழர்களும் தாம் வாழும் மாகாணங்களுக்கும் பொலிஸ் , காணி அதிகாரங்கள் வழங்கப்படும் நிலை ஏட்டப்படும் போது அவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய ஆராயவேண்டியவர்களாக உள்ளனர் .

பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டு அந்த அதிகாரம் மாகாண சபைக்கு வழங்கப்படும் நிலையில் ஒரு குறிப்பிட்ட மாகாண சபையில் பேரினவாத தீய சக்திகள் செல்வாக்கு பெரும் நிலை ஏட்படும்போது பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படவும் , இதன் மூலம் மாகாணத்தின் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் ,தமிழர்களுக்கும் அநீதிஇழைக்கப்பட இது காரணமாக அமைந்துவிட முடியும் என்பதுடன் பேரினவாத தீய சக்திகள் பரவலாக மாகாணத்தில் செல்வாக்கு பெற்று வளர்ச்சிஅடையவும் இது காரணமாக கூடும் ,மற்றும் பேரினவாத மதகுருமார் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் மீது தமது செல்வாக்கை செலுத்தவும் காரணமாக அமையக் கூடும் .

நாட்டின் நிலவும் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு என்பது மாகாணங்ளுக்கு கூடிய அதிகாரத்தை வழங்குதல் என்ற திசையில் பயணிக்கும் போக்கே காணப்படுவதால் எதிர்காலத்தில் எப்படியும் மாகாணங்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கப் போகின்றது ,இதன் மூலமாக ஏற்படும் பாதகமான விளைவுகளில் இருந்து மாகாணங்களின் சிறுபான்மையினர் தப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பில் ஆராயவேண்டியவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகாரங்களை கோராத அவை தேவையற்ற மாகாணங்களுக்கு அவற்றை வழங்காது இருக்கும் முறையை பின்பற்றி வடக்கு ,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமான விசேட அதிகாரங்கள் என்று குறித்த அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால் இந்த பிரச்சினையின் பரிணானம் வடக்கு ,கிழக்கில் மட்டுப்படுத்தப் படும்
மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறைமாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தந்த மாகாணங்களின் சிறுபான்மையினரை பாதிக்காத விதமாக மாகாண சிறுபான்மையினர் காப்பீடுகள் என்ற ஒரு சட்டக்காப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுவது இதன் பாதகமான தாக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவழியாக கருத முடியும் . இந்த மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை நாட்டின் புதிய அரசியல் யாப்பிலும் , மாகாண நிர்வாக சட்டக்கோவையிலும் உள்வாங்கப்படுவதுடன் இதன் சட்டநடைமுறை நாட்டின் உயர்நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த கூடியதாகவும் அமையுமாக இருந்தால் காப்பீடு அர்த்தபுஷ்டி உள்ளதாக விளங்கும்.

இங்கு மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை என்பது மாகாணங்கள் பெற்றுக்கொள்ளப்போகும் அதிகார மாதிரிகளையும் இதற்கு சட்டத்தில் உள்வாங்கப்படும் ” கட்டுப்படுத்தல் மற்றும் சமநிலைப்படுத்தல்” முறையைப் பொறுத்து அமையமுடியும்.

மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை கொண்டிருக்கக்கூடிய பாதுகாப்பு சர்த்துக்களுக்கு உதாரணம் கூறுவதாக இருந்தால் ,சமூக முரண்பாடுகளின் போது பொலிஸ் செயல்படவேண்டிய முறை , முறைப்பாடுகள் பதிவு செய்யப்படும்போது பொலிஸ் செயல்படவேண்டிய கட்டாய வழிமுறைகள் , அரச காணிகளை பங்கீடு செய்யும்போது மாகாணத்தின் விகிதாசாரத்தை கருத்திக்கொண்டு செயல்படுவதை உறுதிப்படுத்தும் முறை , தொழில்வாய்ப்புகளின் போதும் மாகாணத்தின் விகிதாசாரத்தை கருத்திக்கொண்டு செயல்படுவதை உறுதிப்படுத்தும் முறை என்பனவற்றை உதாரணமாக கூறமுடியும் சிவில் சமூகங்கள் ,மாகாணங்களின் சிறுபான்மையினர் இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவது மிக அவசியமானதாக உள்ளது. நல்லாட்சி நிலவும் காலம் இது என கூறினாலும் அச்சுறுத்தல்களுக்கு பஞ்சம் ஏட்பட்டுள்ளதாக தெரியவில்லை, மனித உரிமைகள் உச்ச நிலையில் பாதுகாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படும் ஐரோப்பாவிலும் ,அமெரிக்காவிலும் இனவாதம் செல்வாக்குப்பெற்று வளர்ந்து வரும் சர்வதேசசூழ்நிலை காணப்படும்போது இலங்கை அவற்றுக்கு விதிவிலக்காக இருக்கும் என கூற முடியாது என்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் .

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2016 இல் 6:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: