Lankamuslim.org

One World One Ummah

ஹஜ் கடமையை ஈரான் இந்த ஆண்டும் புறக்கணிக்கப் போகிறது ?

leave a comment »

SHAஇந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈரான் யாத்திரிகர்கள் தொடர்பில் ஈரான் விடுத்த கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்று சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது. ஹஜ் கடமைக்கு சவூதி அரசு இடையூறு விளைவிப்பதாக ஈரான் குற்றம்சாட்டிய நிலையிலேயே சவூதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“ஹஜ் காலத்தில் ஈரானிய யாத்திரிகர்களுக்கு சிறப்புரிமைகளை வழங்கவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்யவும் ஈரான் அரசு கோருகிறது. இவை ஏற்க முடியாதவை” என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அதல் அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் பிலிப் ஹம்மன்டுடன் நேற்று முன்தினம் கூட்டாக இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாத்தின் புனிதத் தலத்திற்கு யாத்திரை செல்லும் ஹஜ் கடமைக்கு இந்த ஆண்டு ஈரானிய யாத்திரிகர்களுக்கு செல்ல முடியாது என்று ஈரான் ஞாயிறன்று அறிவித்தது. சவூதி, “அல்லாஹ்வின் பாதையை தடுக்கிறது” என்று ஈரான் குற்றம்சாட்டியது.

யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சவூதி அரேபியா 70க்கும் அதிகமான நாடுகளுடன் ஹஜ் ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஆண்டில் ஈரான் இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள மறுத்துவிட்டது” என்று குறிப்பிட்ட அவர், ஈரானுடன் எந்த ஒரு இராஜதந்திர உறவு அல்லது வான் தொடர்புகள் இல்லாத நிலையிலும் ஈரானிய யாத்திரிகர்களுக்கு பயண ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் சவூதி முன்வந்ததாக அவர் வாதிட்டுள்ளார்.

“ஹஜ் கடமையில் ஈடுபட தமது பிரஜைகளை தடுப்பதற்கு ஈரான் ஆரம்பத்தில் இருந்தே சூழ்ச்சிகள் மற்றும் நியாயங்களை தேடினால் அது மிக பாதகமான நிலையையே ஏற்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார்.

எனினும் பாதுகாப்பு மற்றும் கெளரவம் தொடர்பான ஈரானின் கோரிக்கைகளை சவூதி நிராகரித்துவிட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த பேச்சுவார்த்தையை அடுத்தே ஈரான் வரும் செப்டெம்பரில் இடம்பெறவிருக்கும் ஹஜ் கடமைக்கு தமது பிரஜைகளை அனுப்புவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது.

ஈரான் யாத்திரிகர்களுக்கு விசா வழங்குவது மற்றும் சவூதிக்கான விமானப் பயணம் குறித்தே இரு நாடுகளுக்கும் இடையில் பிரதானமாக முரண்பாடு நீடித்து வந்தது. கடந்த ஆண்டு ஹஜ் கடமையில் சுமார் 60,000 ஈரானிய யாத்திரிகர்கள் பங்கேற்றிருந்தனர்.

எனினும் ஈரானின் கோரிக்கைகளுக்கு பல தீர்வுகளை முன்வைத்ததாக சவூதி விளக்கம் அளித்துள்ளது. சவூதி அரேபியா ஷியா மதகுரு ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய சர்ச்சையை அடுத்து கடந்த ஜனவரியில் சவூதி ஈரானுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டது.

முடியுமான முஸ்லிம் ஒவ்வொருவரும் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவது கடமையாகும். எனினும் ஈரான் ஹஜ் கடமையை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. 1987 இல் மக்காவில் இடம்பெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணி ஒன்றில் சவூதி பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 402 யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஈரானியராவர். இந்த சம்பவத்தை அடுத்து ஈரான் மூன்று ஆண்டுகள் ஹஜ் கடமையை புறக்கணித்தது.

Written by lankamuslim

மே 31, 2016 இல் 8:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: