Lankamuslim.org

One World One Ummah

ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு போலிக் கடிதம்: விசாரணை முன்னெடுக்குமாறு முறைப்பாடு

leave a comment »

Puttalam-Hakeem1கண்டி மாவட்­டத்தில் பிர­பல முஸ்லிம் பாட­சா­லை­யொன்றில் கற்பிக்கும் பெரும்பான்மை­யின ஆசி­ரி­ய­ர்கள் சில­ருக்கு ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் போலியாகத் தயா­ரிக்­கப்­பட்டு அனுப்­பப்­பட்ட கடிதம் தொடர்பில்  விரி­வான விசாரணையை மேற்­கொள்­ளும்­படி குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் முறைப்­பாடு செய்துள்­ள­தாக நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல், வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாக வெளி­யா­கி­யுள்ள பர­ப­ரப்பான பொய் வதந்­தி­யொன்றின் விளை­வாக இந்­நாட்டு முஸ்­லிம்கள் பற்றி சிங்­கள – பௌத்த மக்கள் மத்­தியில் தவ­றான மனப்­ப­திவு ஏற்­ப­டு­வ­தோடு, தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கும் பாதிப்பு உண்­டா­வ­தாக  அவர் குறிப்­பிட்டார்.

கண்டி முறுத்­த­லாவை தெஹி­யங்க அல்-­இல்மா முஸ்லிம் பாட­சா­லையில் புதிய கட்­டி­ட­மொன்றை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கையில் மேலும் தெரி­வித்த­தா­வது,
இந்தப் பாட­சா­லையில் பணி­யாற்றும் சிங்­கள ஆசி­ரி­யைகள் பற்றி வலயக் கல்விப் பணிப்­பாளர் சிலா­கித்துக் கூறினார். மாண­வர்­க­ளுக்கு கற்­பித்­த­லுக்கு அப்பால் கல்­விசார் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களில் சிங்­கள ஆசி­ரி­யைகள் மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் ஈடு­பட்டு வரு­கின்­ற­மை மெச்­சத்­தக்­க­தாகும்.

குறிப்­பாக இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைக் கருத்திற் கொண்டு அவர்கள் தியாக சிந்­தை­யுடன் கட­மை­யாற்­று­கின்­றார்கள்.

அண்­மைக்­கா­ல­மாக சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்தி கண்டி மாவட்­டத்­தி­லுள்ள ஒரு முன்­னணி பாட­சாலை தொடர்பில் ஒரு பார­தூ­ர­மான விவ­காரம் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது

. இதற்கு முன்னர் அந்த உயர்­த­ரத்­தி­லான பாட­சா­லையின் நிரு­வாகம் குறித்து பிரச்­சினை தோன்­றி­யி­ருந்­தது.

அந்தப் பாட­சா­லையின் பெண் அதி­பரைப் பொறுத்­த­வரை  ஊர் மக்கள் மத்­தியில் திருப்தி இருக்­க­வில்லை. ஆகையால் அங்கு அண்­மையில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடாத்­தப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்­பாளர், தேசிய பாட­சா­லைகள் பணிப்­பாளர், கல்­வி­ய­மைச்சு செய­லாளர் ஆகியோர் கலந்­து­ரை­யாடி அதிபர் இட­மாற்றம் செய்­யப்­பட வேண்­டு­மென ஒரு தீர்வை மேற்­கொண்­டார்கள்.

அந்த அதிபர் திற­மை­யற்­றவர் மிகவும் சிறந்­த­தாகக் கரு­தப்­பட்டு வரும் அந்தப் பாட­சா­லையின் கல்வி வளர்ச்­சி­யிலும், மாண­வர்­களின் பரீட்சைப் பெறு­பே­று­க­ளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டி­ருந்­தது. நிர்­வாகச் சீர்­கேடும் நில­வி­யது.

இவ்­வா­றி­ருக்க, இந்த விட­யத்தில் கல்­வி­ய­மைச்சு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்­வந்­தி­ருந்த நிலையில் அந்தப் பெண் அதிபர், பெற்­றோரை வேறு கார­ணத்தை கூறி வர­வ­ழைத்து தன்னை இட­மாற்றம் செய்யக் கூடாது என அவர்­க­ளி­ட­மி­ருந்து கடி­த­மொன்றில் கையொப்பம் பெறு­வ­தற்கு எத்­த­னித்­ததால் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­தது.

அதன் பின்னர் பாட­சா­லையின் ஆசி­ரி­யையின் கண­வ­ரென தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தி ஒருவர் ஜிஹாத் அமைப்­பினால் கடி­த­மொன்று அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தாக இணைய வலைத்­த­ளங்­களில் செய்­தி­யொன்றை பதி­வேற்றம் செய்­துள்ளார்.

அதன்­படி பாட­சா­லையில் கற்­பிக்கும் சிங்­கள ஆசி­ரி­யர்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு உத்­த­ர­விட்டு எழு­தப்­பட்­டி­ருந்த அந்தப் போலிக் கடிதம் மிகவும் பார­தூ­ர­மா­னது. தொடர்ந்து அதி­ப­ருக்­கெ­தி­ரான சிலர் பொலிஸாரால் கைது செய்­யப்­பட்டு நிலைமை மோச­ம­டைந்து விட்­டது.

அவ்­வா­றான ஓர் இயக்கம் அல்­லது அமைப்பு இல்­லாத நிலையில் இந்த நிலைமை அந்த பாட­சா­லைக்கு ஏற்­பட்­டது.

குறிப்­பிட்ட சிங்­கள ஆசி­ரியை மீது அக்­கி­ராம மக்கள் மத்­தியில் நன்­ம­திப்­பி­ருந்து வந்­தது. சுய­நல நோக்­கத்­துடன் சிலரால் மேற்­கொள்­ளப்­படும் விஷமச் செயலின் கார­ண­மாக நல்­லி­ணக்­கமும், கல்­வியும் பெரிதும் பாதிப்­ப­டை­கின்­றன.

இவ்­வா­றான தீய செயலின் விளை­வாக நாடெங்­கிலும் வாழும் சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் மட்­டு­மல்ல, முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் தவ­றான கருத்­துக்கள் பரவி விட்­டன. சமூக வலைத்­த­ளங்­களில் இவ்­வா­றான பொய்ப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் பொழுது அநே­க­மாக அவற்றின் விளை­வு­களை மீளப்­பெற முடி­யாது.

ஆகையால், கல்­வி­ய­மைச்சு மட்­டு­மல்ல, குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவும் கூட்­டாக இந்த விட­யத்தில் அவ­ச­ர­மாக உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவ­சி­ய­மாகும் என்றார்.

இந்நிகழ்வில் தெனுவர வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி டபிள்யூ.எம்.சீ.வீரக்கோன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான சீ.எம்.எம்.மன்சூர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.- ஜே.எம்.ஹபீஸ் -VV

Advertisements

Written by lankamuslim

மே 31, 2016 இல் 7:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: