Lankamuslim.org

One World One Ummah

ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவதானத்துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

leave a comment »

nazeer ahamedமுப்­ப­டை­களின் முகாம்­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு  கிழக்கு  மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்­டுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையா­னது வாபஸ் பெறப்பட்டுள்­ளது.

இதனை இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜய­வீர , கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அலவி மற்றும் விமா­னப்­படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் சந்­திம டி அல்விஸ் ஆகியோர் உறு­திப்­ப­டுத்­தினர்.

சம்பூர் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நடை பெற்ற வைபவம் ஒன்றில் சம்பூர் கடற்­படை கட்டளை தள­ப­தி­யான கெப்டன் ஐ. ஆர் பிரே­ம­ரத்­னவை மேடையில் வைத்து தூற்றியமை தொடர்பில் கிழக்கு முத­ல­மைச்சர் தனது வருத்­தத்தை தெரி­வித்தும் விளக்கம் அளித்தும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தார்

. இந் நிலை­யி­லேயே முப்­ப­டைகள் சார்பில் அக்­க­டி­தத்தில் உள்ள விட­யங்கள் ஆராயப்பட்­டுள்­ள­துடன் அதன்­படி இந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று நண்­பகல் முதல் இந்த தடை மீளப் பெறப்­பட்­ட­தா­கவும், அது தொடர்பில் தமது கட்­டுப்­பாட்டில் உள்ள அனைத்து முகாம்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கும் உடன் அறிவித்­துள்­ள­தா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

முன்­ன­தாக கடற்­படை கட்­டளை தள­பதி ஒரு­வரை வெளி நாட்டு தூதுவர் ஒருவர் முன்­னி­லையில் தூற்­றி­யமை தொடர்பில் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சிக்கு கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜே குண­வர்­தன சிறப்பு அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இந்த அறிக்­கை­யா­னது ஜனா­தி­பதி ஜப்பான் செல்லும் முன் அவ­ருக்கு பாது­காப்பு செய­லா­ளரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே முப்­ப­டை­களின் கலந்­தா­லோ­ச­னையின் அடிப்­ப­டையில் கிழக்கு முத­ல­மைச்சர் நாட்டில் எந்­த­வொரு முப்­படை முகா­முக்­குள்ளும் நுழைய தடை  விதிக்­கப்­பட்­டது.

யுத்த காலத்தின் போது சம்பூர் மகா வித்­தி­யா­லயம் இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்பே அது பொது மக்கள் பாவ­னைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொது மக்கள் பாவ­னைக்கு வழங்­கப்­படும் போது அந்த பாட­சா­லையை கடற்­ப­டை­யினர் புனர் நிர்­மாணம் செய்தே வழங்­கி­யுள்­ளனர்.

இந் நிலையில் இந்த பாட­சா­லையில் ஏதும் குறை­பா­டுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்­யு­மாறு கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் விஜே­கு­ண­வர்­தன கிழக்கு கட்­டளைத் தள­ப­திக்கு உத்­த­ர­விட்­டி­ருந்த நிலையில், அங்கு அறி­வியல் கூடம் ஒன்­றினை நிறுவும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந் நிலையில் 20 கணி­னி­களைக் கொண்ட அந்த அறி­வியல் கூடத்தின் திறப்பு விழா கடந்த 20 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.இதற்கு கடற்­படை கிழக்கு ஆளுநர் ஒஸ்டின் பெர்­ணான்டோ, அமெ­ரிக்க தூதுவர் ஆகி­யோரை அழைத்­துள்­ளது. எனினும் கிழக்கு முத­ல­மைச்சர் கிழக்கு ஆளு­நரின் அழைப்பில் அங்கு சென்­றுள்ளார்.

இந் நிலை­யி­லேயே சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.  ­ இந்த விவகாரம் தொடர்பில் நாடு திரும்­பி­ய­வுடன்   ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிரி­சே­னவும் ஆராய்ந்­துள்ளார். இதன்­போதே கிழக்கு முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்த கடி­தமும் அவ­தா­னத்­துக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளது.  இந் நிலை­யி­லேயே முப்­ப­டை­களால் அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­யினை மீளப் பெறு­வது தொடர்பில் நேற்று முற்­பகல் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

முப்­படை தள­ப­தி­களும் ஒன்­றி­ணைந்து இதனை எடுத்­துள்­ளனர். அதன்­ப­டியே நேற்று நண்­பகல் முதல் இந்த தடை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-vidivelli

Advertisements

Written by lankamuslim

மே 31, 2016 இல் 10:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: