Lankamuslim.org

One World One Ummah

வௌ்ளம் வழிந்தோடி வருகின்றது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு

leave a comment »

ragama-railway-station-sri-lankaவௌ்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடும்  மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 237,240 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில் கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும்கேகாலை அரநாயக்க பகுதியில் 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புலத்கோஹோபிட்டியவில் மண்ணுக்குள் புதையுண்டவர்களில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மழையுடனான வானிலைக் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தெஹியோவிட்ட பகுதியில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளம் வழிந்தோடி வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு 11 மணிக்கு நாகலகம் வீதியிலுள்ள நீர் அளவீட்டு மானியில் 4.45 வரை மாத்திரமே நீர்மட்டம் பதிவாகியுள்ளது.

அதற்கமைய கொலன்னாவ மற்றும் கடுவலை பிரதேச செயலக பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த வௌ்ள அபாய எச்சரிக்கை குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் கூறியுள்ளது. எனினும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு இதுவரை எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் பார்வையிடுவதும் இல்லை என வத்தளை மாபொல பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

மே 23, 2016 இல் 10:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: