Lankamuslim.org

One World One Ummah

கடும் மழை காரணமாக 8 மாவட்டங்களில் வௌ்ளப்பெருக்கு

leave a comment »

jjகடும் மழை காரணமாக 8 மாவட்டங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7880 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 12,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

கேகாலை – தெஹியோவிட்ட டெனிஸ்வத்த தோட்டத்தில் வீடுகளின் மேல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்  மூவர் காணமற்போயுள்ளதாகவும் அதில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நீர்கொழும்பு மொரவல கடற்பகுதியில் மீன்பிடி படகொன்று மூழ்கி காணமற்போயுள்ளது. கடலில் மூழ்கியுள்ள குறித்த படகில் 2 மீனவர்கள் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அதிக மழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் துளை, நுவரெலிய, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருணாகலை, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார தெரிவித்துள்ளார்

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் மன்னார் வளைகுடா கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான சிறப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று (16) முற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி. அபேகோன் தலைமையில் நடைப்பெற்றது.

Written by lankamuslim

மே 16, 2016 இல் 5:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: