Lankamuslim.org

One World One Ummah

நிலவும் சீரற்ற காலநிலையால் அதிக மழை ,மற்றும் பாதிப்பு

leave a comment »

heavy-rain2நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அதிக மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கண்டி,இரத்தினபுரி,குருணாகலை,கேகாலை,மொனராகலை,பதுளை நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு அபாய முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார கூறியுள்ளார் அதேவேளை அதிக மழைக் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சேதங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பல வீடுகளில் மழை வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழைக் காணரமாக மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதிக மழைக் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அசம்பாவிதங்கள் தொடர்பில் 1 1 7 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

மே 15, 2016 இல் 8:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: