Lankamuslim.org

One World One Ummah

வசீம் தாஜுடீன் வழக்கு: முதலாவது பிரேதப் பரிசோதனை தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு

leave a comment »

washimரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தாஜுடீனின் கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் அதிகாரியின் கட்டளைக்கு அமைவாகவே தமது கட்சிக்காரர் செயற்பட்டுள்ளதாக நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவருக்கு பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாததன் காரணமாக பிணை வழங்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர், உயர் அதிகாரியைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு பிணை வழங்க முடியாது என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

Written by lankamuslim

மே 12, 2016 இல் 10:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: