சம்பூர் அனல்மின்சாரத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் பீஸ் ஹோம்
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையமொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சியினால் மூதூர் மற்றும் அயல் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்திற்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
மக்கள் வாழும் பகுதியில் அனல்மின்சார நிலையத்தினை அமைக்க வேண்டாமென பொதுமக்களும் சிவில் அமைப்புக்களும் கோரிக்கைவிடுத்து வருவதுடன் எதிர்ப்புச் செயற்பாடுகளிலும் தொடர்ந்து ரூடவ்டுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பூர் அனல்மின்சாரத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் தலைவரும் தற்போதய மூதூர் பசுமைக்குழுவின் அமைப்பாளருமான எஸ்.எச்.அமீர் இத்திட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வி வருமாறு:
நேர்காணல்: அ.அச்சுதன்
கேள்வி: சம்பூர் அனல் மின்சாரத்திட்டம் சம்பந்தமாக சுருக்கமாக விளக்குவீர்களா?
பதில்: சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கென இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி 505 ஏக்கர் காணியில் 512மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜப்பானின் முதலீட்டுடன் 600 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்றும் உள்ளது. இது சம்பந்தமாக இப்போதைக்கு பேசத்தேவையில்லையென நினைக்கின்றேன்.
கேள்வி: அனல் மின்சாரத்திட்டத்தினால் மக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகளையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்பக்களையும் சற்று தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: மின்சாரமும் அத்தோடு ஒரு தொகையினருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளதும் இதன் நன்மைகளாகும். ஆனால் இத்தகைய நன்மைகளைவிட இதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களே அதிகமாகும். 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்தது
214.5தொன் நிலக்கரி எரிகப்படவுள்ளது. இதற்கென குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு 93ரூபவ்120 கன மீற்றர் கடல் நீர் பயன்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு பெருந்தொகையான நிலக்கரி இடைவிடாது எரிக்கப்படும்போது அதிலிருந்து தொன் கணக்கில் வெளியாகும் நச்சுவாயுக்களும் சாம்பலும் மேலும் நிலக்கரியை கையாளும் போது தொன் கணக்கில் வெளியாகும் தூசு துகல்களும் மக்களுக்கும் சுற்றாடலுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியதாகும்.
அத்தோடு கடலில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் நீர் வெப்பமேற்றப்பட்ட நிலையில் கழிவு நீராக மீண்டும் கடலுக்கு விடப்படுவது மற்றுமொரு ஆபத்தான விடயமாகும்.
கேள்வி: அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியாகும் வாயுக்கள் மற்றும் ஏனைய கழிவுகளினால் மக்கள் எத்தகைய நோய்களுக்கு ஆளாகுவர் என்று கூறமுடியுமா?
பதில்: நச்சுவாயுக்களும் தூசு துகல்களும் மனிதனுடைய சுவாசத் தொகுதியை நேரடியாகத்தாக்குகின்றது. இதனால் அஸ்மாரூபவ் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல சுவாச நோய்கள் ஏற்படும். அதேபோல இதயத்திலும் பல்வேறு கோலாறுகளை ஏற்படுத்துவதோடு மாரடைப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
அனல்மின்சார நிலையக் கழிவுகள் மனிதனின் நரம்பு மண்டலத்திலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். கழிவு நீர் கடலில் விடப்படும் போது பாதரசமும் கடலோடு கலக்கின்றது. அதனை கடலில் வாழும் மீன்கள் உள்ளெடுப்பதனால் அம்மீனை உண்ணுகின்ற மக்கள் பாதிக்கப்படுவர். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்களில்
வளரும் சிசுக்களின் மூளைகளில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுகின்ற சாம்பலானது ஆசனிக்ரூபவ் பாதரசம்ரூபவ்போரன்ரூபவ் கட்மியம் உள்ளிட்ட பல நச்சுகளை அல்லது மூலகங்களை கொண்டமைந்திருக்கின்றது. இவையும் ஆபத்தானவையாகும்.
உதாரணமாகரூபவ் ஆசனிக் குடிநீரில் கலக்கின்றபோது பல்வேறு வகையான புற்று நோய்கள் ஏற்படுவதற்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். தோல் புற்று நோய்ரூபவ் சிறுநீர்ப்பை புற்றுநோய்ரூபவ் சிறுநீரகப் புற்றுநோய்ரூபவ் நுரையீரல் புற்றுநோய் முதலானவற்றை உருவாக்குவதிலும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதிலும் அது பங்கெடுக்கும்.
கேள்வி: அனல் மின்சார நிலையக் கழிவுகள் மீன்பிடி மற்றும் விவசாயத் தொழிலில் பாதிப்பை ஏற்;படுத்துமா?
பதில்: ஆம். அனல் மின்சார நிலையம் அமையப்பெறும் போது மீன்பிடியும் விவசாயமும் மிகவும் பாதிப்படையும். அனல் மின்சார நிலையத்தின் தேவைக்காக கொட்டியாரக் குடாக் கடலில் இருந்து பாரிய அளவில் நீர் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இக்குடாவானது அதன் அமைவினாலும் ஆழமற்ற கடற்பரப்பினாலும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இந்நிலையில் குடாக் கடலிலிருந்து நீர் உள்ளெடுக்கப்படுவதன் மூலமும் அதேபோல வெப்பமான சூடான கழிவு நீர் கடலில் விடப்படுவதன் மூலமும் மீன் முட்டைகளும்ரூபவ்மீன் குஞ்சுகளும்ரூபவ்மீன்உணவுகளும்கூட அழிவுக்குள்ளாகும். அத்தோடு சற்று பெரிய மீன்கள் அழிவடையவோ அல்லது இடம்பெயரவோ கூடும். இதனால் மீன்பிடித் தொழில் பாதிப்படைவது திண்ணம்.
அதேபோல் அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியாகும் நச்சுவாயுக்களும் தூசுகளும் பரவலடையும் சாம்பலும் பயிர்களில் படிவதன் மூலமும் பூக்களின் மகரந்த மணிகளில் படிவதன் மூலமும் எதிர்பார்த்த விளைச்சல் பெரிதும் பாதிப்படையும்.
கேள்வி: மக்களுக்கும் சூழலுக்கும் ஆபத்து இல்லாதவாறு அனல்மின்சார நிலையத்தை நிறுவப்போவதாக கூறப்படுகிறதே ….
பதில்: எதனையும் இலகுவாக கூறமுடியும். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செயற்படுத்த முடியாது. இதற்கு உதாரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தைக் குறிப்பிட முடியும்.அங்கும் அவ்வாறுதான் கூறினார்கள் ஆனால் நடந்ததோ வேறு.
சூழல் தாக்கறிக்கையில் குறிப்பிடும் விடயங்களை செயற்படுத்தவேண்டிய சட்டரீதியான தேவைப்பாடு அவர்களுக்கு இருந்தும்கூட அவர்களின் செயற்பாடு வேறு வகையில் அமைந்திருப்பதை பார்க்க முடிகின்றது.
இந்தியாவில் அனல்மின் நிலையத்தினால் வருடாவருடம் பெருந்தொகையானோர் இறந்துவருவதாக கிறீன் பீஸ் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலும் இதே நிலைதான். மக்களுக்கும் சூழலுக்கும் ஆபத்து இல்லாதவாறு அனல்மின்சார நிலையத்தை நிறுவ முடியுமாக இருந்தால் அங்கு மக்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்குமா? எனவே மக்களுக்கும் சூழலுக்கும் ஆபத்து இல்லாதவாறு அனல் மின்சார நிலையத்தை ஒருபோதும் நிறுவ முடியாது என்பது தெளிவான விடயமாகும்.
சம்பூரில் அனல் மின்நிலையம் நிறுவப்படுமாக இருந்தால் அது ஒரு பிழையான முன் உதாரணத்திற்கு அடிப்படையாக அமையுமென நினைக்கின்றேன்.
கேள்வி:பிழையான முன் உதாரணத்திற்கு அடிப்படையாக அமையும் என நீங்கள் கருதும் விடயத்தை சற்று விளக்கிக் கூறுவீர்களா?
பதில்:ஒரு அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளும் போது அதனால் சூழலுக்கு ஏதாவது தாக்கம் ஏற்படுமா என்பதை அல்லது ஏற்படும் தாக்கத்தை அறிந்து கொள்ளும் வகையில் குறித்த திட்டத்தை மேற்கொள்ளும் தரப்பினர் சூழுல் தாக்க அறிக்கை (நுnஎசைழnஅநவெயட ஐஅpயஉவ யுளளநளளஅநவெ சுநிழசவ) ஒன்றை தயாரித்தல் வேண்டும்.
இந்தவகையில் சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சூழல்தாக்க அறிக்கையானது சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து இடைதங்கல் முகாம்களில் வசித்து வந்த காலத்தில் அப்பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. ஆனால்ரூபவ் தற்போது அப்பகுதியில் மக்கள் மீளக்
குடியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் அந்த அறிக்கை பிழையாகிவிட்டது.
அந்தப் பிழையான அறிக்கையை வைத்துக் கொண்டு சம்பூரில் அனல் மின்சார நிலையம்அமைக்கப்படுமாக இருந்தால் பிழையான முன்னுதாரணமாக அது அமையும். அத்தோடு.அந்த சூழல்தாக்க அறிக்கை வெளியானதும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அதற்கெதிராக பல நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்முறைப்பாடுகள் சம்பந்தமாக எவ்வித கரிசனையையும்
காட்டாது அனல் மின்சார நிலையத்திற்கென எல்லையிடப்பட்ட காணியில் சுற்று வேலி அமைப்பதற்கான கேள்வி கோரல் இடம்பெற்றதோடு சுற்றுவேலி அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவும் ஒரு பிழையான செயற்பாடாகும்.
கேள்வி: இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உங்கள் அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி குறிப்பிடுவீர்களா?
பதில்: சம்பூரில் அனல்மின்சார நிலையத்தை நிறுவது தொடர்பாக 2006ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை இடம் பெற்ற காலம் முதல் இத்திட்டத்தை கைவிடுமாறே மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு கோரி வந்துள்ளது. இது தொடர்பில் பல்வேறு முனைப்புக்களையும் அது மேற்கொண்டுள்ளது. இப்போது மூதூர் பசுமைக்குழு அமைப்பு சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை தடுத்துநிறுத்துவதற்கு பல்வேறு வழிவகைகளின்பால் கவனம் செலுத்தி வருகின்றது.
பலஆயிரக் கணக்கானோரை ஒன்றிணைத்து வௌ;வேறாக மூன்று எதிர்ப்புப் பேரணிகளைச் செய்துள்ளது. அத்தோடு எழுத்து மூலமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்களது நியாயமான கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படாத போது தொடர்ந்து எதிர்ப்புச் செயற்பாட்டில் ரூடவ்டுபடவும் சமகாலத்தில் சட்ட ரீதியான வழிமுறைகளை மேற்கொள்ளவும் பசுமைக்குழு அமைப்பு தயாராகி வருகின்றது.
கேள்வி: அனல்மின்சாரத்திட்டத்தை தடுப்பதற்கு ஆரம்பம்முதல் செயற்படும் உங்களுக்கு இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது எது?
பதில்: இலங்கையில் முதலாவது அனல் மின்சார நிலையம் நிறுவப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பொது சுகாதார கற்கை நெறியொன்றில் இணைந்திருந்தபோது நாளொன்றுக்கு அதிகளவில் கபனீரொட்சைட்டை வெளியிடுகின்ற அனல்மின்சார கட்டமைப்பு சம்பந்மாக அறிந்துகொள்ள முடிந்தது. அதிலிருந்து நிலக்கரியை எரிப்பதை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் அனல் மின்சாரத்திட்டத்திற்கு எதிரான மனோநிலையே எமக்கு இருந்தது.
கேள்வி: அனல்மின்சாரத் திட்டத்திற்குப் பதிலாக மின்உற்பத்தியை செய்வதற்காக நீங்கள் கூறும் மாற்றுத்திட்டம் என்ன?
பதில்;: இக்கேள்விக்கு மின்சக்தி அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். …………. ( சிரித்துக்கொண்டு) இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலான காலங்களில் சு10ரியசக்தியை பயன்படுத்துவதற்கான வாய்ப்;பு உள்ளது. வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை சுயமாக சூரிய சக்தியிலிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுமாக இருந்தால் தற்போது இருக்கும் மின்சாரத்திற்கான கேள்வி பெருமளவில் குறைந்து விடும்.
இலங்கையைச் சூழ கடல் இருப்பதனால் பெரும்பாலான பகுதிகளில் கடலலையிலிருந்தோ அல்லது காற்று முகம்கொடுக்கும் பிரதேசங்களில் காற்று வலுவை பயன்படுத்தவோ முடியும். திருகோணமலை துறைமுகத்தை அண்மித்துள்ள பாதாள மலைப்பகுதியில் பாரிய சுழலியொன்றை (வுரசடிiநெ) சுழற்றக்கூடிய அற்புதமான சுழற்சி மையமொன்று இருப்பதாக நம்பப்படுகின்றது இது தொடர்பாகக்கூட கவனம் செலுத்தலாம்.
அல்லது செலவீனங்களை ரூடவ்டுசெய்யமுடியுமாக இருந்தால் நிலக்கரிக்குப் பதிலாக எரிவாய்வைப் பயன்படுத்துவதற்கான சாத்தியமும் உள்ளது.
ள்வி: சுற்றுச் சூழுலில் அக்கறை எடுத்துவரும் இந்த அரசாங்கமானது சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்அனல் மின்சாரத் திட்டத்தை மேற்கொள்வதற்கு எடுத்து வரும் முயற்சியை எவ்வாறுநோக்குகின்றீர்கள்?
பதில்: சம்பூர் அனல்மின்சாரத் திட்டத்தை மேற்கொள்வதற்கான ஆரம்ப ஏற்பாடுகளை மேற்கொண்டது மஹிந்தராஜபக்~ தலைமையிலான அரசாங்கமாகும். எனவேரூபவ்அந்த அரசாங்கம் தொட்டதை இந்த அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இருந்த போதும் ஒருபுறம் சுற்றுச் சூழலில் அதீத அக்கறையைக் காட்டும் இந்த அரசாங்கம் அதே சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனல் மின்சாரத்திட்டத்தை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு வழங்குவது என்பது வேடிக்கையான விடயமேயாகும்.
கால நிலை மாற்றத்தை தடுத்தல் தொடர்பான (Pயசளை யுபசநநஅநவெ ழn ஊடiஅயவந ஊhயபெந) பாரிஸ் உடன்படிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஆனால்ரூபவ் காலநிலை மாற்றத்திற்கு
அடிப்படையாக அமையவுள்ள அனல் மின்சாரத்திட்டத்தை நிறுவுவதிலும் முயற்சி எடுத்து வருகின்றது. இது ஒன்றுக்கொன்று எதிரான விடயமாகும்.
கேள்வி: சம்பூர் அனல் மின்சாரத் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றால் உங்களது செயற்பாடு எவ்வாறு அமையும்?
பதில்: அனல் மின்சாரத் திட்டம் கைவிடப்படும் வரை தொடர்ந்து எதிர்ப்புச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடுவதென்ற ஒருமித்த உறுதியான தீர்மானத்துடனயே மூதூர் பசுமைக்குழு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. எனவேரூபவ் அனல்மின்சார நிலையத்திற்கான முன்னெடுப்புக்கள் தொடருமெனில் எமது எதிர்ப்புச்செயற்பாடுகளை பிரதேசத்திற்கு வெளியிலும் அவசியம் இருப்பின் நாடுதழுவிய ரீதியிலும் ஏற்பாடு செய்வதற்கு தயாராகவுள்ளோம்.
எப்போது இத்திட்டம் முழுமையாக கைவிடப்படுமோ அப்போதுதான் எமது எதிர்ப்புச் செயற்பாடுகளையும் கைவிடுவோம்.
கேள்வி: சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது சம்பந்தமாக உங்கள் கருத்தென்ன?
பதில்: சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக இருந்தாலும் அதிலும் எமக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. இலங்கை தாய்த் திரு நாடு பரப்பளவில் சிறியதோர் அழகான நாடாகும். இந்நாட்டையும் நாட்டு மக்களையும்
உண்மையாக நேசிக்கும் எவரும் சுற்றுச் சூழலுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல அனல் மின்சாரத்திட்டத்தை நாட்டின் எந்தவோர் மூலையில் நிறுவுவதையும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.
கேள்வி: கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் சம்பூர் அனல்மின்சார திட்டத்திற்கு எதிராக தனிநபர் பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏன் அது கைவிடப்பட்டது?
பதில்:உறுப்பினர்கள் மத்தியில் குறித்த தனிநபர் பிரேரணைக்கு முகங்கொடுக்கும் நிலையில் அனல் மின்சாரதிட்டம் தொடர்பான போதிய விளக்கமில்லாத நிலைமையொன்று இருந்திருக்கலாமென நினைக்கத் தோன்றுகிறது.
அத்தோடு சபை அமர்வு நடைபெற்ற அன்று பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகமளிக்காமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவேரூபவ் எதிர்வரும் சபை அமர்வுகளில் சம்பூர் அனல் மின்சாரத் திட்டத்திற்கு எதிராக பிரேரணையொன்று
கொண்டுவரப்படலாம் என்று இப்போதைக்கு நம்பிக்கை வைக்கலாம்.
கேள்வி:சம்பூர் அனல்மின்சாரத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆதரவான போக்கை கைக் கொள்வதாக தெரிகிறதே…?
பதில்:ஆம். அனல் மின்சாரத்திட்டத்தினால் மக்களுக்கும்; சூற்றுச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாக விளக்கமாகத் தெரிந்து கொண்டு அத்தகைய போக்கை அவர் கைக்கொள்ளமாட்டார் என நம்புகின்றோம். வெகு விரைவில் அந்த ஆதரவுப் போக்கிலிருந்து திரும்பிவிடுவார் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் அனல் மின்சாரத் திட்டத்திற்கெதிராக பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு சபையின் அங்கீகாரத்தைப் பெற்றால் அது எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் போக்கிலும் பெரும்பாலும் மாற்றத்தை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
கேள்வி:சம்பூர் அனல் மின்சாரத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளின் நிலைப்பாடு சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?
பதில்:சம்பூர் அனல் மின்சாரத் திட்டம் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவரும் பெரியளவில் கரிசனை காட்டியதாகத் தெரியவில்;லை. எப்போதும் போல பராமுகமான நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.
இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இவ்விடயத்தில் கரிசனை எடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் அனல் மின்சாரத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து மக்களோடு களத்தில் நின்றுகொண்டிருக்கின்றார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டாக்டர் கே.எம்.ஸாஹிர் இவ்விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
கேள்வி:இறுதியாக உங்களது பசுமைக்குழு அமைப்பு சம்பந்தமாக….
பதில்:அனல்மின்சாரத்திட்டத்திற்கு எதிராக செயற்படுவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு பீஸ் ஹோம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடல்களின் பின்பு முழு மூதூரையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பசுமைக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் மூதூரிலுள்ள ஒவ்வொருவரும் இந்த அமைப்பில் அங்கத்தவராக உள்ளனர்.
வீரகேசரி
மறுமொழியொன்றை இடுங்கள்