Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவின் பாதுகாவலர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாம்

leave a comment »

mahi 33முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவப் படைவீரர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த 50 இராணுவ உத்தியோகத்தர்கள் அண்மையில், மீள அழைக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் பல்வேறு பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு  அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளுடன் இந்த உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு, இராணுவம் போன்ற தரப்புக்கள் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ஊடாக இவர்கள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இவர்களில் பலர் திடீரென பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய போது, உயர் அதிகாரிகளின் கட்டளைகளையும் உதாசீனம் செய்து செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.-GTN

Written by lankamuslim

மே 7, 2016 இல் 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: