கைகலப்பால் பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தை நாளை (04) வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புக்கென ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டதை அடிப்படையாகக்கொண்டு சபையில் ஏற்பட்ட அமளி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பாக மாறியது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை 1.35 வரை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தபோதிலும், சபை ஆரம்பமாகவில்லை இந்த சம்பவத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இதன் பின்னர் சபையில் இடம்பெற்ற சம்பவத்தைக் கருத்திற்கொண்டு சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவத்திற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்