Lankamuslim.org

One World One Ummah

வடக்கு – தெற்கு இனவாதம்: JVP

leave a comment »

jvp 2வடமாகாண முதலமைச்சர் சீவி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாகவும், தெற்கில் மகிந்த தலைமையிலான குழுவும், இனவாதத்தை தூண்டுவதும் நாட்டில் மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரில்வின் சில்வா தெரித்தார்.

கொழும்பில் இன்று வியாழன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கை தனிமைப்படுத்தும் யோசனையில், அங்குள்ள மக்களின் எந்த தேவைகளும் பூர்த்தியாக்கப்படப் போவதில்லை, இது நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் வகையிலேயே அமையும். எனவே வடக்கு – கிழக்கு இனவாதத்தை நிறுத்த வேண்டும் என இவர் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பிறகு மக்களின் வீட்டு வசதி, மீள்குடியேற்றம், அபிவிருத்தி வேலைகள் இவை எதுவும் மக்களுக்கு செய்து கொடுக்காது, மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செயற்படுத்தமால் இருப்பதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டினை மறைப்பதற்காக, வடமாகாண அரசியல் வாதிகள் இனவாதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்புவதாக ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியில் இனவாதம் தொடர்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, பொருளாதார ரீதியில் தங்களின் அபிவிருத்தியையே விரும்புகின்றனர். சில அரசியல் வாதிகளே இனவாதத்தை தூண்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ரில்வின், பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும், வரி அதிகரிப்பு மற்றும், மக்களின் குறைகள் தொடர்பில் மகிந்த தலைமையிலான அணி போராட்டம் நடாத்தவில்லை, மாறாக தம் மீதுள்ள குற்றங்கள் தொடர்பாகவும், நடாத்தப்படும் விசாரணைகளை நிறுத்தும் படியே போராடுகிறார்கள் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தினார்.

அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு வழங்கி வருமானம் சேர்க்க அரசாங்கம் முற்படுகின்றது. ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க போகிறது என்பது கேள்விக்குறியே.

பொருளாதார வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும் இனவாதமற்ற நாடாகவும், புதிய இலங்கையினை உருவாக்கும் தேவை காணப்படுவதாகவும், அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது தெரிவித்தார்.-TC

Written by lankamuslim

ஏப்ரல் 28, 2016 இல் 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: