Lankamuslim.org

One World One Ummah

ஆக்கிரமிப்பு மண்ணில் போலியான வரலாற்று கல்லறைகளை புதைக்கும் இஸ்ரேல்

leave a comment »

ISRAELI AND U.S. SOLDIERS GUARD AMERICAN PATRIOT ANTI-MISSILE BATTERIESNEAR TEL AVIV.ஜெரூசலம் அல் அக்ஸா வளாகம் மற்றும் ஹெப்ரூன், பெத்லஹாமில் இருக்கும் புனிதத் தலங்கள் ‘பலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள்’ என்றும் இஸ்ரேல் நிர்வாகம் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாகவும் ஐ.நாவின் கலாசார நிறுவனமான யுனஸ்கோ தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் முஸ்லிம் அடக்கஸ்தலங்களில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு அதிகாரத்தைக் கொண்டு போலியான கல்லறைகளை புதைப்பதாகவும் யுனெஸ்கோ கண்டித்துள்ளது.

பழைய நகரின் இதயப்பகுதியில் இருக்கும் இப்ராஹிமி பள்ளிவாசல் மற்றும் பெத்லஹாமின் பிலால் பின் ரபாஹ் பள்ளிவாசல் ஆகியன பலஸ்தீன தலங்கள் என்றும் யுனேஸ்கோ பத்திரம் குறிப்பிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகதிகள் மீதான இந்த தீர்மானம் யுனெஸ்கோ நிறைவேற்று சபையால் ஏப்ரல் 11இல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெப்ரூன் மற்றும் பத்லஹாமில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கட்டுமானங்கள், வீதி அமைப்புகள், குடியேற்றங்கள் மற்றும் மதில்கள் போன்ற விரிவாக்கப் பணிகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யுனெஸ்கோ அழுத்தம் கொடுத்துள்ளது.

எனினும் இந்த தீர்மானத்தை கடுமையாக கண்டித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஐ.நாவின் மற்றொரு அபத்தமான தீர்மானம் என்று விமர்சித்துள்ளார்.

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2016 இல் 9:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: