Lankamuslim.org

One World One Ummah

வசீம் தாஜூடீன்: மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர்

leave a comment »

washimபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக   புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் விசாரணைகள் நடத்தப்படும் எனவும்    பொலிஸ் மா அதிபராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாஜூடீனின் கொலையுடன் யார் தொடர்புபட்டிருந்தாலும் தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கட்டம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கவோ சேறு பூசவோ போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது எனவும் அனைவரும் துரித கதியில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்க விரும்புகின்றார்கள் எனவும், சில சந்தர்ப்பங்களில் அதனை  செய்ய முடியும் எனவும்எனினும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு துரித கதியில் விசாரணை நடத்த முடியாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2016 இல் 1:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: