Lankamuslim.org

One World One Ummah

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் முன்னேற்றம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது: பிரித்தானியா

leave a comment »

uk-flagமனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக பிரித்தானிய அரசினால் தயாரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாடுகளை உள்ளடக்கி பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்துச்சுதந்திரம், இனங்களுக்கிடையில் பதற்றமின்மை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கைகள் சிலவற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திகளைக் காண முடியாதுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆலாசனைக்கு அமைய, இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை திருத்திக்கொள்வதற்கான விருப்பத்தினை இலங்கை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசினால் நிதி உதவிகள் வழங்கப்படுவதோடு ஊக்குவிப்புகளையும் அந்நாடு வழங்குவதாக மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு, மனித உரிமைகளை வலுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் என்பனவற்றை மூன்று ஆண்டுகளில் முன்னேற்றுவதற்கு 6.6 மில்லியன் பவுண்ட்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2016 இல் 2:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: