Lankamuslim.org

One World One Ummah

பொதுபலசேனா நீதிமன்றத்தை அவமதித்ததா? ஆராய கோரிக்கை

with one comment

Supreme Courtஅண்மையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதனால், நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைத்து, அந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எக்னெலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் பௌத்த தேரர்கள் குழுவொன்று ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்ப நிலையை தோற்றுவித்ததுடன், நீதிமன்ற சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.-ad

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2016 இல் 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. good move ?

    Imran -MC

    ஏப்ரல் 22, 2016 at 7:53 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: