Lankamuslim.org

One World One Ummah

வடக்கை நாட்டில் இருந்து பிரிக்கும் கருத்து தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

leave a comment »

pujiவடக்கு மாகாணத்தை நாட்டிலிருந்து பிரிப்பது தொடர்பிலான கருத்து பற்றி பொலிஸ்மா அதிபரிடம் சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனா ஆகிய அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளன.

புதிய பொலிஸ்மா அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வடக்கு கிழக்கை இணைத்து தனியான இராச்சியமொன்றை உருவாக்க வேண்டுமென கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசியல் அமைப்பிற்கு புறம்பாக நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் முரணான வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் அழைப்பாளர் மஹால்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்கள் மூலம் பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்படக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர முதலாவது ஊடக சந்திப்பில்

பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன் காரணமாக பொலிஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் மொபைல் சேவையினூடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய 06 பிரதான விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். கல்வி, சுகாதாரம், சமயம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் இதனூடாக கவனம் செலுத்தப்படும் என்று இவை மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கிராம சேவகர்கள் பிரிவுகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்கள் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் என்றும் கூறினார். பொலிஸாரின் நோக்கத்தையும் குறிக்கோளையும் அடைந்து கொள்வதற்கு தகுந்த செயற்பாடாக சிவில் பாதுகாப்பு குழுக்கள் காணப்படுவதாக கூறினார்.

இலங்கை பொலிஸின் முதலாவது நோக்கம் “குற்றங்கள் மற்றும் வன்முறை பயம் அற்ற நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு அமைதியான சூழலை உருவாக்குவது” என்று அவர் அங்கு தௌ ிவுபடுத்தினார். இதற்கிடையில் தான் நடத்தும் முதலாவது மற்றும் இறுதி ஊடக சந்திப்பு இதுவென்றும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

பொலிஸ் மா அதிபரின் கடமையேற்பு நிகழ்வில் சர்வமத நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2016 இல் 7:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: