Lankamuslim.org

One World One Ummah

சம்பூர் அனல் மின்சாரத் நிலையத்திற்கெதிராக தொடரும் போராட்டமும் முஸ்லிம் தலைமைகளின் தீவிர மௌனமும்!

leave a comment »

மூதூர் முறாசில்
Assam-Muslim-genocideதிருகோணமலை மாவட்டத்தில்  மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார திட்டத்திற்கு மூதூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பைக்காட்டிவந்த போதும் முக்கியமான முஸ்லிம் அரசியல் தலைமைகளோ இவ்விடயத்தில் ஒருவார்த்தையைத் தானும்பேசாது தீவிர மௌனத்தை கைக்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் தலைமைகளின் மெனத்தைக் களைப்பதற்கென்றே ஓரு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று கூறுமளவிற்கு இம்மௌனம் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது.தொடரும் இம்மௌனத்தை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனெனில் சம்பூர் அனல் மின்சார   நிலையம் அமைக்கப்படும் போது பாதிக்கப்படுவது சம்பூர் பகுதி மாத்திரமல்ல.

சம்பூரின் அயல் பகுதிகளுமேயாகும்.  மின் நிலைம் அமைக்கப்படவுள்ள பகுதியிலிருந்து சுமார்  4.5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மூதூர் நகரமும் சுமார் 11 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள திருகோணமலை நகரமும் அத்தோடு 11.5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிண்ணியா நகரம் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டமும் அத்தோடு அயல் மாவட்டங்களும்  இன்னும் சரியாகக் கூறப் போனால் இலங்கை நாடு முழுவதுமே இதனால் பாதிக்கப்படுவது திண்ணம்.

ஆகவேதான் மூதூர் பிரதேச மக்கள்  ஒன்றிணைந்து அனல் மின்சார நிலையம் வேண்டாம் என்று தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.  இக் கோரிக்கைகூட முஸ்லிம் தலைவர்களின் காதுகளில்இன்னும் சரியாக விழுவதாக இல்லை.

எனவேää முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கை ஜம்மியதுல் உலமாää தேசிய சு10றா சபைää முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்கா உள்ளிட்ட அமைப்புக்களும் ஆர்வமுள்ள தனிநபர்களும் இவ்விடயத்தில் உடனடிக் கவனத்தைச் செலுத்தி ஆக்கபூர்வமான பங்களிப்புக்களைச் செய்வதற்கு முயலுதல் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்:

தேசிய தலைவர்கள் மக்களின் கோரிக்கைக்கு கவனம்செலுத்தாதபோதும் மாவட்டத்திலுள்ள தலைவர்கள்மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து வருவது இங்கு பாராட்டக்கூடிய விடயமாகும்.

சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்திற்கு எதிராக ஆரம்பம்முதல் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி  ஜே.எம்.லாஹிர் செயற்பட்டு வருகின்றார். அண்மைக்காலமாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனும் மக்களோடு களத்தில் இறங்கி போரடிவருகின்றார். இதேபோல மாவட்டத்திலுள்ள ஏனைய தலைவர்களும் தமது சொந்த விருப்பு வெறுப்பிற்கு அப்பால் நின்று சம்பூரில் அனல் மின்சாரத் திட்டத்தை இல்லாமற் செய்வதில்  மக்களோடு இணைந்துகொள்வார்கள் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது இவ்வாறிருக்கää சம்பூர் அனல்மின்சார நிலையம் தொடர்பில் மூதூர் பசுமைக்குழுவானது திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றை கடந்த 13ஆம் திகதியன்றுமூதூர் சேப்ரெஸ் மண்டபத்தில்  ஏற்பாடு செய்திருந்தது.

அக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்ää மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம.;லாஹிர், கே.நாகேஸ்வரன்ääஆர்.எம்.அன்வர் ஆகியோர் மிகுந்த பொறுப்புணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். ஏனைய பிரதிநிதிகள் தமக்குப் பதிலாக வேறு ஒருவரையாவது கலந்து கொள்ளச் செய்வதில்கூட எவ்வித கரிசனையையும் காட்டவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

இருந்தபோதும்  சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல்மின்சாரத் திட்டத்திற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல்  வழக்கொன்றை தாக்கல் செய்வதெனவும் அனல் மின்சார நிலையம் தொடர்பில் ஜனாதிபதி அல்லது பிரதமரை சந்தித்து கலந்துரையாடுதல் எனவும்  இதன்போதுதீர்மானிக்கப்பட்டன.

அத்தீர்மானங்களை செயலூக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லவேண்டியதும்    பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும்  பிரதேச மக்களின் கருத்தை பிரதிபலிக்கச் செய்வதும் இம்மக்கள்பிரதிநிதிகளின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

பிரதேச சபை தவிசாளரை குற்றம் சுமத்திய  உறுப்பினர்:கடந்த 15ஆம் திகதியன்று மூதூர் பசுமைக் குழுவானது மூதூர் ஐஸ்மோல் சந்தியில் சம்பூர்அனல் மின்சாரத் திட்டத்திற்கு எதிராக பேரணியொன்றை ஏற்பாடு செய்ததது.

அப்பேரணியில் மூதூர் ஹபீப் நகர்ääதக்வா நகர்ääபஹ்ரியா நகர் உள்ளிட்ட கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர்     மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

இதன்போது பேரணியில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் கபூர்ää  சம்பூர் அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதற்கான அனுமதியை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் வழங்கியதாகவும்அவர் பிரதேச சபை உறுப்பினர்கள் எவருக்கும் தெரியாது கொழும்பில் வைத்து அவ்வனுமதியைவழங்கியதாகவும்  குற்றம் சாட்டினார்.

இக்குற்றச்சாட்டு ஆய்வுக்குரிய ஒன்று என்ற போதும் மூதூர் பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளரும் மற்றும்  செயலாளரும் மூதூர் பீஸ்ஹோம் அமைப்பு அனல் மின்சாரத்திட்டத்திற்கு எதிராக முன்வைத்த முக்கியஸ்தர்களின் முறைப்பாட்டுப் பத்திரத்தில் கையொப்பமிடமறுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அல்லதுஅனல் மின்சார நிலையத்திற்கு எதிரான பிரேரணையொன்றை கொண்டுவந்து மூதூர் மக்களை பாதுகாக்குமாறு பிரசேத சபையின் உறுப்பினர்களை பீஸ் ஹோம் அமைப்பினர் கடிதம் மூலமும் ஒவ்வொருவராக நேரில் சந்தித்தும் கெஞ்சிக் கேட்டபோதும் தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் எவ்வித அக்கறையையும் எடுக்கவில்லை என்பதோடு ‘முனாபிக்’ தனமாக நடந்து கொண்டதும்   வருந்தத் தக்க வரலாறு ஆகும்.

கண்டனத்திற்குள்ளான எதிர்க்கட்சித்தலைவர்:எதிர் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் சம்பூர் அனல்மின்சார நிலையம் சம்பந்தமாகமுல்லைத்தீவில் தெரிவித்த கருத்து தொடர்பில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பலமானகட்டணத்தை தெரிவித்தனர்.

அனல்மின்சாரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை திட்டமிட்டு மறைத்துää  மக்களைஏமாற்றுகின்ற அரசியல் செய்யவேண்;டாமெனவும் அனல் மின்சாரத்திட்டத்தை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும்  பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆக்ரோ~மாக கூறினர்.

அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படும் போது புகைää சாம்பல் ஆகிய இரு பாதிப்புக்களே ஏற்படுமென சிறுபிள்ளைத் தனமாகத்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் முன்னாலுள்ள ஒரே பொறுப்பு:ஒரு திட்டமானது மக்களுக்கு பாதகமானது என்று விளங்கிவிட்டால் அத்திட்டத்தை மேற்கொள்வதற்குமுன்பு அதனை தடுத்து நிறுத்துவதே பொருத்தமான ஒரு செயற்பாடாகும்.

அதனை விட்டுவிட்டு திட்டத்தை நடைமுறைப்;படுத்தும்வரை சும்மா இருந்து விட்டு அதனால் பொதுமக்கள்பாதிப்பிற்கு உள்ளாகும் வேளையில் குரல் கொடுப்பதனால் ஆகப்போவது எதுவுமில்லை.

பொதுவாக இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அனல் மின்சார உற்பத்திமுறையானதுஎந்தவகையிலும் பொருத்தமானதல்ல. இதேவேளை ஏலவே நுரைச்சோலையில்( மக்கள்வாழிடங்களிலிருந்து  அப்பால்) அனல் மின்சார நிலையமொன்று செயற்படும் நிலையில்அதனால் ஏற்படும் பாதிப்புக்களை அறிந்து கொண்டு மேலுமொரு நிலையத்தை( மக்கள் வாழிடங்களுக்கு மிக நெருக்கமாக) நிறுவுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை என்னவென்பது?

எனவேää சம்பூர் பகுதியில் உள்ள மக்களோ அல்லது மூதூர் பிரதேச மக்களோ இதனைப்பார்த்துக்கொள்ளட்டும் என்று ஏனையவர்கள் ஒதுங்கியிருந்து ஓய்வெடுக்க முடியாது.

அவ்வாறு ஓய்வெடுக்கவும் கூடாது. அனல் மின்சார நிலையத்தினால் ஏற்படும் பாதிப் புக்களைசரியாக விளங்கிக் கொண்டு    இயற்கையை நேசிப்பவர்களும் சுற்றுச் சூழலில் ஆர்வமுள்ளவர்களும் அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புக்களும் இன்னும் தனிநபர்களும்கூறப்போனால் நாட்டுப்பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதனை வலுவாக எதிர்க்கவேண்டும்.

அனல்மின்சார நிலையமானது நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதனாலேயே இதுவொரு அபாயகரமான முறையாகக் காணப்படுவதனால் இதற்குப் பதிலாக எரி வாய்வு முதலான மாற்று வலுக்களைப் பயன்படுத்துவதற்கோ அல்லது இப்பிராந்தியத்தில் இலகுவில் கிடைக்கப்பெறும் காற்றுää கடலலை முதலான வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வற்கோ முனைப்புக்காட்டும் வகையில் அனைவரது குரல்களும் ஒருமித்து ஒலிக்கவேண்டும். இதன்மூலமே  பேரபாயத்திலிருந்து மக்களும் நாடும் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 17, 2016 இல் 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: